கிளிநொச்சியும் மக்கள் விரோதிகளும் : சபா நாவலன்

SL_Army_in_Killinochieபிரித்தானியர்கள் இலங்கைத் தீவைத் தமது சிங்கள-தமிழ் பிரதிநிதிகளிடம் கையளித்த நாளிலிருந்து அவர்களாலேயே உருவாக்கி வளர்த்தெடுக்கப்பட்ட பேரின வாதம் மகிந்த ராஜபக்ஷ என்ற பௌத்த சிங்கள அடிப்படை வாதியின் கரங்களில் தலைவிரித்தாடுகின்றது. “இலங்கை ஒரு சிங்கள-பௌத்த நாடு, இங்கே ஏனைய இனங்களும் சமாதானமாக வாழ முடியும்” – இதுதான் மகிந்த சிந்தனையவின் சாராம்சம். “சிங்கள-பௌத்த பெறுமானங்களைப் பயங்கர வாதிகளிடமிருந்து பாதுகாப்பதே எமது கடமை” – இது தான் மகிந்தவின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி. 80 களுக்குப் பின்னதாக உருவான எந்த தேசிய விடுதலை இயக்கங்களுமே “வன்முறை மீது காதல் கொண்ட” மனநோயாளிகளால் கட்டமைக்கப்படவில்லை. இலட்சக்கணக்கான மக்களின் அர்ப்பணங்களும், தியாகங்களும், போராட்டங்களும், தமிழ்ப் பேசும் மக்களும் மனிதர்களுக்கான உரிமையுடன் வாழ்வதற்கான போராட்டமேயன்றி அர்த்தமின்றிச் செத்துப் போவதற்கான சடங்குகளல்ல! அரை நூற்றாண்டு காலமாக, சரி பிழை, நியாயம் அநியாயம், நேர்வழி குறுக்குவழி, என்பவற்றிற்கெல்லாம் அப்பால், இலங்கையின் பெரும்பான்மை இனத்திற்கிருக்கும் அரசியல், சமூகப் பொருளாதார உரிமைகளுடன் தமிழ் பேசும் மக்களும் வாழ்வத்ற்காக நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தின் பாசிச வடிவம் தான் தமிழீழ விடுதலைப் புலிகள்! தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகப் போராடும் எந்த அமைப்பும், தனிமனிதனும், ஜனநாயகவாதியும், தேசிய வாதியும், மார்க்சியவாதியும், இந்தப் புலிகள் வரலாற்றின் பக்கங்களிலிருந்து துடைத்தெறியப் படுவதைப் பற்றி அலட்டிக்கொள்ளப் போவதில்லை. ஆனால் புலிகளின் அழிவிலிருந்து உதிக்கும் பெருந்தேசியப் பாசிசத்தையும், தமிழ் பேசும் மக்கட் கூட்டம் ஜனநாயகத்தின் பேரால் சிதைத்துச் சின்னாபினப்படுத்தப் படுவதையும் “மகிந்த புரத்தின்” சிம்மhசனத்திலிருந்து நியாயம் கற்பிப்பதையும் புலியெதிர்ப்பு அரசியல் வியாபாரிகள் எந்தக் கூச்சமுமில்லாம் நிறைவேற்றி முடிக்கிறார்கள். இலங்கை இனப்பிரச்னைக்கான வேர்கள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன என்பது ஆயிரம் தடவைகள் அலசப்பட்டுச் சலித்துப் போன விடயங்கள்.

1. மொழிரீதியான வேறுபாடுகளை இலங்கையில் ஆரிய-திராவிட முரண்பாடாகவும் பின்னர் தமிழ் – சிங்கள முரண்பாடாகவும் மாற்றி, வேறுபட்ட தேசிய இனங்கள் உருவாவதற்கான சூழலைத் தோற்றுவித்து, இத்தேசிய இனங்களை தமது அரசியல், வியாபார நலன்களுக்காக மோதவிட்டு வேடிக்கை பார்த்தது பிரித்தானிய ஏகதிபத்தியம்.

2. தமிழ்ப் பேசும் உயர்தர வர்க்கத்தை வளர்த்தெடுத்துஇ சிங்கள மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சூழலை உருவாக்கியதும் இதே பிரித்தானிய ஆதிக்கம்.

3. சிங்களம் பேசும் மக்கள் மத்தியில் தமிழ் பேசும் மக்கள் தொடர்பான அச்ச உணர்வைத் தோற்றுவித்த இந்த அடிப்படைகள், பிரித்தானிய காலனியாதிக்கத்தின் பின்னரும் தொடர்ந்தது மட்டுமன்றி தமது வாழ்வாதரப் பிரச்சனைகளுக்கு தமிழ் பேசும் மக்களே அடிப்படைக் காரணம் என்ற உணர்வும் உருவாக வழிவகுத்தது.

4. தமிழ் பேசும் மக்களின் தலைமைத்துவத்தை எதிர் கொள்ளும் சிங்களத் தலைவர்களே சிங்கள மக்களை வெற்றி கொள்ளும் கதாநாயகர்களாக உருவாக, சிங்கள மக்கள மத்தியில் அமைப்பு மயப்பட்ட பேரினவாதம் உருவானது.

5. ஆக, இந்த அமைப்பு மயப்ப்பட்ட பேரின வாதம் சிங்களத் தலைவர்களின் வாக்கு வங்கியாகத் திகழ, சிங்கள மக்கள் மத்தியிலான அரசியற் கட்சிகள் பேரின வாதத்தையே தமது கட்சித் திட்டங்களின் அங்கங்களாக்கிக் கொண்டன.

6. இப்பேரின வாத அடக்கு முறையை உணரத் தொடங்கிய தமிழ் பேசும் சிறுபான்மையினர், சிங்களத் தலைமைகளுக்கெதிராக அமைபியல் ரீதியாக ஒன்றுபடவாரம்பித்தனர்.

7. தமிழ் அரசியற் கட்சிகளின் வாக்கு வங்கியாக தமிழ்த் தேசியவாதக் கருத்துக்கள் வளரவாரம்பிக்க, தமிழ் மக்கள மத்தியிலான அரசியற்கட்சிகள், தமிழ்த் தேசிய வெறியையே தமது கட்சித் திட்டங்களின் அங்கங்களாக்கிக் கொண்டன.

8. இதனால் இரு தேசிய இனங்களின் வளர்ச்சியும், அவற்றிடையேயன அமைப்பு மயப்பட்ட பிளவும் பெருந்தேசிய ஒடுக்குமுறையை அதிகப்படுத்த, இவ்வொடுக்குமுறைக்கு முகம் கொடுக்கமுடியாத அரசியற் கட்சிகளை தமிழ்பேசும் மக்கள் நிராகரிக்கவாரம்பித்த சூழலில், “பேச்சுவார்த்தை அரசியல்” என்பது “ஆயுத அரசியல்” என்ற தளத்திற்கு மாறியது. இங்குதான் புலிகள் உள்ளிட்ட தேசிய விடுதலைக்கான ஆயுதக் குழுக்கள் உருவாகின.

பெருந்தேசிய அடக்குமுறையானது அரசியல், பொருளாதர, சமூக அடக்குமுறையாக எல்லாத்துறைகளிலும் வியாபித்தது. தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகள் இராணுவ பலம் கொண்டு நசுக்கப்பட்டது. தமிழ்பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக தெருக்களில் அனாதைகள் போல் கொலை செய்யப்பட்டு வீசியெறியப்பட்டு நூற்றாண்டுகள் கடந்துவிடவில்லை. ஒருபுறத்தில் இரத்தம் தோய்ந்த கொலைக்கரங்களும், மறுபுறத்தில் பௌத்த போதனைகளும் இலங்கையின் தேசிய அரசியலாக மாறிய நிலையில் தான் பெரும்பாலான தமிழ்பேசும் மக்களின் மானசீக ஆதரவுடன், ஆயுதக்குழுக்கள் வேர்விட்டு வளரவாரம்பித்தன.

உரிமைக்காகப் போராடும் ஒரே நோக்கோடு புத்தகங்களுக்குப் பதிலாகத் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு தெருவுக்குவந்த பல இளைஞர்களை உயிரோடு தகனம் செய்த பாதகர்கள்தான் புலிகள் என்பது வேறு விடயம்.

எந்தெந்தக் காரணங்களுக்காக பேச்சுவார்த்தை அரசியல் என்பது ஆயுத அரசியலாக மாறியதோ அதே காரணங்கள் இன்னும் வலுவாக இருக்க, புலிகளின் அழிவில் தமிழ் பேசும் மக்கள் பாதுகாக்கப்படுவதாக ஆனந்தக்கூத்தாடும் அரசியல் வியாபாரிகள் மகிந்த அரசின் இன அழிப்பிற்கு ஆதாரவுப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர்.

இலங்கையின் தேசிய இனச் சிக்கலில் அப்பாவி மக்களின் அழிவின்மேல் அரசியல் இலாபம் காணும் மக்கள் விரோத சக்திகள் தம்மை வெளிப்படையாக அடையாளம் காட்டிக்கொள்கின்றனர். இவர்கள் பல வகைப்படினும் பிரதானமாக நான்கு வகைக்குள் அடக்கிவிட முடியும்.

1. புலிகளும் அதன் ஆதரவு சக்திகளும்.

2. புலி எதிர்ப்பாளர்களும் அரச ஆதரவு சக்திகளும்.

3. இந்திய அரசு

4. மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள்.

5. இலங்கை அரச பயங்கரவாதமும் பாசிசமும்.

மக்கள் மீது நம்பிக்கையற்ற இவர்கள், மக்களின் அழிவிலிருந்து தான் தமது அரசியலையே கட்டமைக்கிறார்கள்.

1. புலிகளும் அவர்களின் ஆதரவு சக்திகளும்.

இவர்கள் எப்போதுமே மக்களைப் பற்றிச் சிந்தித்ததில்லை. தேசிய விடுதலைப் போராளிகள் என்ற முகமூடியை அணிந்திருக்கும் இவர்கள், தேசிய விடுதலைக்கான அனைத்து ஆதரவுத் தளத்தையும் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தியவர்கள். 1983 ஜூலை இன அழிப்பு நடந்தேறிய காலகட்டத்தில் தமிழகம் ஸ்தம்பித்துப் போனது. மொத்தத் தமிழகமுமே ஒரேகுரலில் பேரின வாதத்திற்காகக் குரலெழுப்பிற்று. இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்காமல் வாக்குத் திரட்ட முடியாத நிலைக்குத் தமிழக அரசியற் கட்சிகள் தள்ளப்பட்டன. சிங்கள மக்கள் மத்தியிலிருந்த முற்போக்காளர்கள் உயிரையும் விலையாக வைத்து உரக்கக் குரல் கொடுத்தனர். உலகெங்கும் பரந்திருக்கும் ஜனநாயக சக்திகள் பேரின வாதிகளின் இன அழிப்பிற்கெதிராகக் குரலெழுப்பினர். முஸ்லீம் மக்களும், மலையகத் தமிழர்களும் தேசிய இன அடக்குமுறைக்கெதிரான தமது பங்களிப்பை வழங்க முன்வந்தனர்.

யாழ்ப்பாணத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த முஸ்லீம் மக்களை இரவோடிரவக அனாதைகளாக விரட்டியடித்த விடுதலைப் புலிகள்இ கிழக்கில் தமது பாணியிலான குரூரமான படுகொலைகளை முஸ்லீம் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டு தமிழ் பேசும் முஸ்லீம் மக்களைத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கெதிராகத் திசைதிருப்பினர். நூற்றுக் கணக்கான சிங்கள மக்களைக் கொன்று குவித்தனர். தஞ்சம் கொடுத்த தமிழ் நாட்டு மக்களுக்கெதிராகவே தமது இராணுவ தர்பாரை நடாத்திக்காட்டினர். தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலை என்ற ஒரே கோஷ்த்தின் கீழ் அமைப்பாகிக் கொண்ட எல்லா விடுதலை இயக்கங்களையும் ஆயுத பலம் கொண்டு அழித்தொழித்தனர். நூற்றுக்கணக்கான தமிழ் இழைஞ்ர்களை குழுக்கள் குழுக்களாகக் கொன்றொழித்தனர்.

தேசிய இன அடக்கு முறைக்கெதிரான அனைத்து ஆதரவு சக்திகளையும் அன்னியப்படுத்தி, ஒரு நியாயமான போராட்டத்தைச் சிதைத்துச் சீரழித்தனர். இவர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் போராட்டத்திற்கான நியாயம், சிங்கள மக்கள் மத்தியிலும் பிரச்சாராத்திற்குட்படுத்த இயலாதவொன்றாகிப் போனது. இறுதியில், தேசிய இன அடக்கு முறைக்கெதிரான ஒரே குரலாகத் தம்மை முன்நிறுத்திக் கொண்ட புலிகள், பாசிஸ்டுக்களாக வளர்ந்து அழிந்து போயினர். அழிவின் விழிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழீழ விடுத்லைப் புலிகள், இந்த நிலையிலும் கூட தம்மைச் சுயவிமரிசனத்திற்கு உட்படுத்தத் தயாராகவில்லை. குறைந்த பட்சம் தந்திரோபாய அடிப்படையில் கூட இவ்வாறான சுயவிமர்சனத்தை முன்வைக்கத் தயாராகவில்லை. 2008ம் ஆண்டு மாவீரர் உரையில், இந்திய எதிர்ப்பாளராகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன், இந்தியாவிடம் அரசியல் பிச்சை கேட்ட நிலையில் தனது சொந்த மக்களிடம் தான் தலைமைதாங்கி நடாத்திமுடித்த கோரக் கொலைகளுக்குக் கூட மன்னிபுக் கேட்கத் தயாராயிருக்கவில்லை. தன்னால் அன்னியப்படுத்தப்பட்ட, சொந்த மண்ணிலிருந்து புலிகளால் அகதிகளாக விரட்டப்பட்ட, தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆதரவு சக்திகளிடம் தன்னை, குறைந்த பட்சம் தந்திரோபாய அடிப்படையிலாவது சுய விமர்சனத்திற்குட்படுத்தி, மறுபடி அவர்களை அணிதிரட்டத் தயாராகவில்லை. ஆயுதங்களையும், அதிகாரத்தையும் எந்த அளவிற்குப் புலிகள் நம்புகிறார்கள் என்பதையும், மக்கள் மீதான நம்பிக்கையற்ற, மக்கள் விரோதிகள் என்பதையும் புலிகள் மறுபடி மறுபடி வலியுறுத்துவதாகவே இது அமைகிறது.

2. புலி எதிர்ப்பாளர்களும் அரச ஆதரவு சக்திகளும்.

புலிகளின் இருப்பின் அடிப்படையே, தமிழ் பேசும் மக்களின் எதிர்ப்புணர்வானது ஆயுதப்போராட்டம் என்ற தளத்திற்கு மாற்றப்பட்டதற்கான காரணமே பேரின வாத்த்தின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை மட்டும் தான். புலிகளின் இருப்பிற்கான காரணத்தை இல்லாதொழிக்க வேண்டுமாயின், மக்கள் மத்தியில் போரற்ற நிலையை உருவாக்க வேண்டுமாயின், பேரினவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும். பேரின வாதத்திற்கெதிரான, அது உருவாக்கி வளர்ந்து கொண்டிருக்கும் அரச பாசிசத்திற்கெதிரான அழுத்தங்கள் பிரயோகிக்கப் படவேண்டும். இதற்கெதிரான போராட்டங்கள், எல்லாச் சமூகச் செயற்ப்பாடுகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஆனல் பெரும்பாலான தமிழ் பேசும் புலியெதிர்ப்பாளர்கள் இந்தப் பேரின வாதத்தையும் அரச பாசிசத்தையும் உரமிட்டு வளர்த்தெடுக்கிறர்கள். இதனூடாக, மறைமுகமாக புலிகளின் இருப்பை ஒடுக்கப்படும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நியாயப்படுத்துகிறார்கள். இவர்கள் வளர்த்தெடுப்பது அரச பாசிசத்தை மட்டுமல்ல, புலிகளின் பாசிசத்தையும் தான். மக்கள் சார்பில் மக்களுக்காக இவர்கள் ஒருபோதும் கருத்தாடியது கிடையாது. மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுமாரி பொழிந்து சிறீலங்கா விமானங்கள், கொலைத் தாண்டவம் நடாத்திய போதும், குழந்தைகள் முதியவர்கள் என்று எந்த வேறுபாடுமின்றி தமிழ் பேசும் ஒரே காரணத்திற்காக கொலை செய்யப்பட்டுத் தெருக்களில் வீசப்பட போதும், ஏன் புலியழிப்பின் பேரால் இலங்கையில் வளரும் பாசிசத்திற்கெதிராகக் குரல் கொடுத்த சிங்கள மக்கள் மத்தியிலிருந்த அறிவு ஜீவிகள், பத்திரிகையாளர்கள் போன்றோர் கடத்தப்படுக் கொலை செய்யப்பட்ட போதும், மகிந்த அரசிற்கு ஆதரவளிக்கும் அரச கைக்கூலிகளான இந்தப் புலியெதிர்ப்பாளர்கள் மக்கள் பக்கம் சாராத மக்கள் விரோதிகளே.

இவர்கள் செய்து முடித்த கைங்கரியங்கள் வாழும் உரிமைக்காகாகப் போராடிய ஒரு மக்கள் கூட்டத்தின் போராட்டத்தை மிக நீண்டகாலத்திற்குப் பின் தள்ளியுள்ளது.

1. புலியெதிர்ப்பென்பது பேரின வாத அரசின் அடக்குமுறையை ஆதரித்தல் என்ற பொதுவான கருத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியவர்கள் இவர்களே.

2. பேரினவாத அரசிற்கு ஆதரவு வழங்கி அதன் பாசிசத்தை வளர்க்கத் துணை போகிறவர்களும் இவர்களே.

3. புலிகள் தவிர அரசிற்கெதிரான எழும் எந்த எதிர்ப்புக் குரலையும் அரச ஆதரவுக் குரல் என்று அடையாளப்படுத்தி, அரசிற்கெதிரான மாற்று அரசியற் சக்தி உருவாவதை சிந்தனைத் தளத்தில் சிதைத்தவர்களும், இதனூடாக அரச பாசிசத்தையும், புலிகளின் பாசிசத்தையும் வளர்க்கத் துணை போனவர்கள் இவர்களே.

4. அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பெருந்தேசிய அடக்குமுறைக் கெதிராக சிங்கள மக்கள் மத்தியிலுள்ள, இடது சாரிகள், முற்போக்காளர்கள் போன்றோரிடையிருந்து வரும் எதிர்ப்பை தமிழ் ம்க்கள் சார்பில் நசுக்கியவர்களும் இவர்களே.

5. அரசின் அடக்கு முறைக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் இந்தக் கூட்டம், அரசியற்தீர்வுக்கான அனைத்து வழிகளையும் நிராகரித்து போரையும் மக்களின் அழிவையும் முன்நிறுத்தியவர்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் 80 களில் தீவிர தேசிய வாதம்பேசிய இவர்களில் பெரும் பகுதியினர், தாம் சார்ந்த அமைப்புகளில் வலது சாரிப் போக்கை முன்நிறுத்தியவர்கள். இடது சாரிப் போக்குடையவர்களை அன்னியப்படுத்தி தீவிர தேசியவாதப் போக்கு மேலோங்க வழிசெய்தவர்கள். இன்று இலங்கை அரசின் பாசிசக் கொடுமைகளுக்கெதிராகப் பேச முற்பட்டால் தேசியவாதம் பேசுகிறோம் என்று தெருச்சண்டைக்கு அழைக்கிறார்கள். புலிகள் புலி – எதிர்ப்பாளர்களிடையேன இந்த முரண்பாடென்பது, அடிப்படையில் யாழ்ப்பாணத்தின் மேல் மத்தியதர வர்க்க அணிகளிடையேயான செயற்தள மட்டத்திலான உள் முரண்பாடேயன்றி சமூக உணர்வி அடிப்படையில் எழுந்த போராட்டமல்ல. இவ்வாறான புலியெதிர்ப்பை முன்வைத்து இலங்கையில் செயற்படும் முன்னாள் தேசிய விடுத்லை இயக்கங்களோ அல்லது அவற்றோடு ஒட்டிக்கொள்ளும் புகலிட ஆதரவாளர்களோ, அரசின் நேரடிக்கைக் கூலிகளோ அபாயகரமானவர்கள். மக்களின் விரோதிகள்.

3. இந்திய அரசு.

இந்தியாவில் தலித் அமைப்புகள் நடாத்திய போராட்டங்கள் பல சந்தர்ப்பங்களில் தோல்வியையே சந்தித்திருக்கின்றன. இலங்கையில் இதே போராட்டங்கள் குறித்த வெற்றியைச் சம்பாதித்திருக்கின்றன. சண்முகதாசன் தலைமையிலான மாவோ சார்புக் கம்யூனிஸ்ட் கட்சி நடாத்திய போராட்டங்களின் வெற்றியும், சூர்ய மல் இயக்கத்தின் எதிர்ப்புப் போராட்டங்களும், ஏனைய இடது சாரி இயக்கங்களின் வளர்ச்சியும் இலங்கைக்கு தெற்காசியாவிலேயெ ஒரு இடது சாரிப் பாரம்பரியத்தைத் தோற்றுவித்திருந்தது. கம்யூனிசத்தின் பேரால் ஆட்சியைக் கைப்பற்றும் எல்லைவரை ஜே.வீ.பீ தனது போராட்டத்தை நகர்த்த முடிந்தது. இவற்றின் தொடர்ச்சியாகவே தேசிய இன ஒடுக்கு முறைகெதிரான போராட்டங்களில் இடது சாரித் தன்மையுள்ள வேலைத்திட்டங்களுடன் ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் போன்ற அமைப்புக்கள் குறித்த வெற்றியுடன் மக்கள் மத்தியில் காலூன்ற முடிந்தது. என்.எல்.எப்.ரி போன்ற அமைப்புக்கள் இடது சாரிக் கோஷங்களுடன் வெளிவர முடிந்தது. 80களில் ஆரோக்கியமான மார்க்சியக் கருத்தாடல்கள் தமிழ் பகுதிகள் வியாபித்தது. சிங்கள முற்போக்கு சக்திகள் தமிழ் தேசிய விடுதலை இயக்கங்களுடன் தம்மை அடையாளப்படுத்த முன்வந்தனர். எல்லோர் மத்தியிலும் நம்பிக்கை துளிர்விட்டது.

இந்த சூழ்நிலையில் தான் இந்திய அரசு தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கி, அவ்வமைப்புக்களை அவர்கள் சார்ந்திருந்த மக்களை விட பலமானதாக வளர்த்தெடுத்தது. தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களை விட அவர்களின் பிரதிநிதிகளாகக் கருதப்பட்டோர் பலமானவர்களாயினர். தேசிய விடுதலை இயக்கங்கள் வேறு இராணுவக் குழுக்களாக மாறி இந்த இராணுவ பலப் பரீட்சையின் உச்ச பகுதியாக புலிகள் ஏனைய இயக்கங்களை நிர்மூலமாக்கினர். இவ்வாறு இராணுவ ரீதியாக இயக்கங்களை வளர்த்துவிட்ட இந்திய தான் விரும்பியவற்றை வெற்றிகரமாகச் சாதித்துக்கொண்டது.

1. இலங்கையில் தேசிய விடுதலைப் போராட்டங்களூடாக உருவாகக் கூடியதாகவிருந்த அனைத்து இடதுசாரி இயக்கங்களையும் பண்புரிதியாக மாற்றியதுடன் இந்திய முற்போக்கு சக்திகளுடனனான அவர்களின் இணைவையும் சாத்தியமற்றதாக்கியது.

2. தமிழகத்திலிருக்ககூடிய அனைத்துப் பிரிவினை சக்திகளுடனான இணைவையும் சாத்தியமற்றதாக்கிற்று.

3. இலங்கையில் யுத்த சூழல் ஒன்றை ஏற்படுத்தி அதனூடாக இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்துதல்.

80 களின் சர்வதேச அரசியல் நிலையும் உலக அரசியற் தளத்தில் இந்தியாவின் பங்கு தொடர்பான போக்கும் தமிழ் அமைப்புக்களின் தலைவிதியை நிர்ணயிப்பதில் பிரதான பங்கு வகித்ததெனலாம். இன்று நிலமை முற்றாக மாறிவிட்டது. 80 களின் வல்லரசுப் பனிப்போர் இல்லை. இலங்கையின் இராணுவ கேந்திர முக்கியத்துவம் அருகிப்போய்விட்டது. உலகமயமாகிவிட்ட பொருளாதாரம் இந்தியாவில் பெரும் பண முதலைகளையும், வியாபாரத்தில் வெற்றிகண்ட மேல் மத்தியதர வர்க்கத்தையும் தோற்றுவித்திருக்கிறது.

இந்தியாயில் புதிதாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் அதிகார வர்க்கமும் ஆட்சியதிகாரமும் தமது மூலதனத்தினதும், முதலீடுகளினதும் எல்லையை இந்தியாவிற்கப்பாலும் விரிவு படுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவினுள்ளேயே அதன் சிறப்புப் பொருளாதார வலையங்களுக்கெதிரான போராட்டங்கள் வலுவடைகிறது. டாடாவின் நானோ கார் உற்பத்திக்காக அழிக்கப்பட்ட அப்பாவிகளைக் கண்ட இந்திய விழிப்படைந்து வருகிறது.

போரின் மரணத்துள் வாழும் இலங்கை மக்களின் பிரதேசங்களை இந்தியா தனது வியாபார நலனுக்காகப் எதிர்ப்பில்லாமலே பாவித்துக்கொள்ளலாம். போர் ஓய்ந்துவிட முன்னமே இந்தியப் பெரு முதலாளிகளின் முதலீட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுகின்றன.

இலங்கையின் அதிகார வர்க்கமும் “வியாபாரத்திற்கான அமைதியை” எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. ஆக, போரைவிட அப்பாவி மக்களின் அழிவிலாயினும் தனது முதலாளிகளின் முதலீடுகளுக்காக முந்திக்கொள்ளும் இந்திய அரசானது, புலியழிப்பின் பெயரால் இலங்கை அரசிற்கு எல்லா இராணுவ உதவிகளையும் வழங்கத் தயாராகவுள்ளது. தவிர, தெற்காசியாவிற்கான சந்தைப் போட்டியில் இந்தியாவைக் குறிவைக்கும் மேற்கு ஏகாதிபத்தியங்கள், இந்தியா மீதான அழுத்தங்களை அதன் அண்டை நாடுகளூடாகப் பிரயோகிக்கும் இன்றைய அரசியற் சூழலில், இலங்கையைப் பகைத்துக் கொள்ள விரும்பாத இந்தியா, ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

4. மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள்.

காஸாப் பகுதிகளில் மேற்கு ஊடகங்களின் கணக்குப்படி, குழந்தைகள் முதியோருட்பட 500 இற்கு மேற்பட்ட அப்பாவிகள், இஸ்ரேலிய அரசின் குண்டு மழைக்குப் பலியாகிவிட்டனர். மனித இரத்தம் பாயும் பலஸ்தீன அப்பாவி மக்களைப் பற்றிக் கிஞ்சித்தும் வருத்தமடையாமல் இஸ்ரேலின் கொலைகளை வெளிப்படையாகவே ஆதரிக்கும் அமரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷும், மேற்கும் ஐக்கிய நாடுகள் சபையும் தான் இன்றைய ஏகாதிபத்தியத்தின் மனிதாபிமான முகங்கள். திரை மறைவில் நடாத்திமுடித்த அரச பயங்கர வாதத்தை வெளிப்படையாகவே நிறைவேற்ற உலகத்தை மறு ஒழுங்கமைப்புச் செய்து கொள்கிறார்கள்.

மேற்கின் பொருளாதார நேருக்கடிக்குப் பின்னதாக எதிர்பார்க்கப்படும் போராட்டங்களுகெதிரான அரச பயங்கரவாதத்திற்கு உலகத்தைத் தயார்படுத்தும் ஒத்திகைகளே இவைகள். உலகின் ஒவ்வொரு மூலைக்குள்ளும் மூக்கை நுழைத்து தனது சுரண்டலை வலுப்படுத்துக் கொள்ளத் தயாராகும் ஏகாதிபத்தியங்கள் தென்னாசியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவின் உள்ளேயும் அதனைச் சூழவுள்ள நாடுகளிலேயும் தனது ஆதரவுத் தளத்தை விரிவாகும் அமரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய அணி, இலங்கை அரசைக் கையாளவும் அதனை முழுமையாக இந்திய சார்புனிலைக்கு தள்ளிவிடாமல் பாதுகாக்கவும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை கண்டும் காணாதிருக்கின்றன. இந்தியாவோடு போட்டி போடுக்கொண்டு இலங்கை அரசிற்கு இராணுவ உதவி வழங்க தனது தெற்காசிய நேச அணிகளைத் தயார்நிலையில் வைத்திருக்கின்றன.

5. இலங்கை அரச பயங்கரவாதமும் பாசிசமும்.

ராஜபக்ஷ குடும்பம்இ அது ஆட்சி நடத்தும் இலங்கையைப் பொறுத்தவரை தான் எதை விரும்புகிறது அது அனைத்தையும் செய்து முடிக்கலாம். பயங்கர வாதிகளுக்கெதிரான போரை வெற்றி கொள்ளும் கதாநாயகர்களாகவே இவர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். தொலைதூரக் கிராமங்களில் வேலையிலாத் திண்டாட்டத்தை நிவர்த்திசெய்ய “தேசபக்தியுள்ள” இராணுவத்திற்குப் படைகள் திரட்டப்படுகின்றன. இலங்கையின் பிரதான தொழில்களில் இராணுவமும் ஒன்றாகிவிட்டதைச் சுட்டிக்காட்டும் நீரா விக்ரமசிங்க போன்ற ஆய்வாளர்கள், போரற்ற சூழல் இலங்கையில் ஏற்படுமா என்ற சந்தேகத்தையும் வெளிப்படுத்துகின்றனர். மேற்குறித்த நான்கு மக்கள் விரோத சக்திகளும், போரை உரமூட்டி வளர்த்தெடுக்க, இலங்கை மக்களின் வாழ் நிலை என்பது போரோடு பிணைக்கப்பட்டுவிட்டது. ஒரு புறத்தில் பௌத்த சிங்களப் பெறுமானங்களைப் பாதுகாக்க போர் நடாத்துவதாக அப்பாவி மக்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மகிந்த குடும்ப அரசு, மறுபுறத்தில் கிராமங்களை போரோடு பிணைத்து வருகிறது. ஏற்கனவே சிங்கள மக்கள் மத்தியில் வேர்விட்டிருக்கும் பௌத்த சிங்களப் பேரினவாதமானது, அவர்களின் நாளாந்த வாழ்க்கையோடு பிணைக்கப்பட்டு பாசிசமாக வளர்ந்துள்ளது. இலங்கையின் தமிழ் பேசும் ஊட்கவியளாளர்களில் பெரும்பாலானோர், நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டோ கொல்லப்பட்டோ விட்டனர். அரசிற்கெதிரான சக்திகள் சிதைக்கப்பட்டோ, அரசால் உள்வாங்கப்பட்டோ சீரழிக்கப்பட்டுவிட்டனர். தமிழ் பேசும் புலியெதிர்ப்பாளர்கள், புலியெதிர்ப்புக் குழுக்கள், புலிகள், சிங்கள பெருந்தேசிய வாதிகள், இந்திய அரசு, ஏகாதிபத்தியங்கள், போன்ற எல்லா மக்கள் விரோத சக்திகளும் இலங்கை அரசின் பாசிசத்தை தமது சொந்த வியாபார நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள, தமிழ் பேசும் மக்கள் மீதான திட்டமிட்ட இன அழிப்பு நிறைவேறிக்கொண்டிருக்கிறது.

மக்களின் மறுதலையான ஆதரவையும் கூட இழந்து போன புலிகள், மக்களிலிருந்து அன்னியப்பட்டு நிரந்தர பாசிச இராணுவப் படையாக மாற்றமடைந்து, குறுகிய பிரதேசங்களில் முடக்கப்பட்டு அழிந்து போகிறார்கள். இவர்களின் அழிவின் எச்சங்களிலிருந்து அரச பாசிசம் வளர்ந்து இலங்கை மக்களைச் சூறையாடிக் கொண்டிருக்கிறது. தெற்காசியாவிலேயே அரச பயங்கர வாதத்தின் இன்னொரு ஆய்வுகூடம் தான் இலங்கை. கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதற்காக சமூக உணர்வுள்ள யாரும் துயர்கொள்ள மாட்டார்கள். ஆனால் அழிவின் நெருப்பிற்குத் தீக்கிரையாகும் அப்பாவி இலங்கை மக்களுக்காகக் குரல் கொடுக்க இனியொரு போராட்டம் தேவையாகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

25 Comments

  • Logan
    Logan

    பரவலான ஆய்வுடன் பலவிடயங்கள் தொட்டிருந்த கட்டுரை!
    நாவலனுக்கு நன்றிகள். இருந்தும் புலிகளும் அவர்கள் ஆதரவு சக்கிகளும் எனற விடயத்துள் குற்றம் சாட்டப்படவேண்டிய காட்டமான பாதிப்பு என்னவெனில் இயக்கங்களையும் தலமைகளையும் அழித்து ஏகப் பிரதிநிதித்துவம் எடுத்துக்கொண்ட இன்றுவரையான காலத்தில் இனவிடுதலை தொடர்பில் தீர்வு நோக்கி எதையும் ஆற்றவுமில்லை அவ்விடைவெளியை யாரும் அணுகமுடியாத ஆயுத அச்சுறுத்தலால் பூட்டிப்போட்டு மலடாக்கியதும் மட்டுமல்ல.

    இந்தக் காலகட்டத்தில் இவர்களது நடவடிக்கை இலங்கை வாழ் இனங்களிடையேயான மிகமிக மோசமான முரண்களை வளத்துவிட்டதால் இனங்களுக்கிடையிலான பயையுணர்வு இரட்டிப்பு வளர்ச்சி கண்டதான நிலை தோன்றியதும் போராட்டம் என்ற பெயாpல் மக்களின் குடிநீர்/ பாசன நீரிலும்/ பொருளாதார நிலைகளிலும் கைவைத்ததான நிகழ்வு மிக முக்கியமாகப் பார்க்கவேண்டும் இதுவே பெரும்பான்மை மக்கள் தேர்தல் ஆணையாக புலிகளை அழிப்பது என்று கட்டளை பிறப்பித்ததும்.

    தமிழ்மக்களின் வாழ்வியல் முடக்கம்/ வலிந்த பிள்ளை பிடிப்போடான பயனற்றுக் கொலைக்குக் கொடுத்தல் போன்ற மனிதாபிமானமே அற்ற புலிகளின் தவறுகளுக்கு முடிவுகட்ட புலிகளின் அழிவு ஒன்றைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று சிறுபான்மைகளும் தீர்மானிக்க வைத்துவிட்டது
    மலையக மக்கள் இதிலிருந்து ஒதுங்குவதாக விருப்புவதால் மட்டுமே பாதுகாப்பை ஓரளவாவது தக்கவைத்துக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டனர்

    இவ்வாறு எல்லாம் ஒன்று திரண்டு உருவாகியிருந்த முழு மண்ணின் எதிரியான பிரபாகரனை அழிப்பதில் வேறு எந்த அமைப்பிலும் நம்பிக்கை வைக்கும் தகுதில் அமைப்பெதுவும் இருக்கவில்லை! எனவே தான் இருந்த ஒரே ஒரு கருவியாக அரசை மட்டுமே பார்த்தனர். அரசின் பால் தள்ளிவிடப்பட்டார்களே தவிர இவர்கள் தேவை எதுவும் இல்லாமல் சென்றவர்களல்ல.

    தமிழர் மத்தியிலிருந்தோ இஸ்லாமியாpடமிருந்தோ எது வித ஆயுத அமைப்புகளும் இந்த தெருச்சண்டைக்கென அரசுக்கு உதவியதில்லை
    வெறும் புலிகளுக்கெதிரான கருத்துக்களோ இல்லது ;இதை விரைவில் அரசு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதில் காட்டும் கருத்தியல் ஆதரவுகளோ மட்டும் தான் இடம் பெற்றவை.

    இதற்காக புலியெதிர்ப்பாளர்கள மக்கள் விரோதிகள் என்பது அப்படியே புலிகளின் குரலாகவே கேட்கிறது! மாறிப்பார்க்க முடியவில்லை!!.
    உலகம் தடைசெய்தது. இலங்கை தடை செய்தது மக்கள் ஆதரவற்றுப் போனது அனைத்தும் புறக்காரணிகளின தவறெதுவும் இல்லை இவர்களது அகநிலை முட்டாள் தனங்களே!

    இக்கட்டுரையில் உள்வாங்கப்பட்டிருக்கவேண்டிய இன்னொரு அம்சம் தீர்வு பற்றியது

    இனவாதம் வளர்க்கப்பட்டது வளர்ந்துவிட்டது. இதற்காகத் தலையிலடித்துக்கொண்டு கடலில் விழவா முடியும்?

    நீங்கள் குறிப்பிட்ட ஒரு உதாரணமே மிக நல்ல வழிகாட்டி! அதாவது “சிறுபான்மைப் பிரச்சனையில் இந்தியக் கம்யூனிஸ்டுகளை விட இலங்கை(வடபிரதேச) கம்யூனிஸ்டுகள் கண்ட வெற்றி அதிகம்”. வாஸ்தவமான வார்த்தை!!!!
    சாதியப் பிரச்சனையை இரண்டாகப் பிரித்தார்கள்
    1).தீர்வுக்கு நீண்ட காலம் எடுப்பது
    2).உடனடித் தீர்வுக்குரியது
    சிறுபான்மை தமிழர் மகாசபை 20 ஆண்டுகள் செய்யமுடியாத பல வெற்றிகளை அதனையும் இணைத்துக்கொண்டு ஐந்து(5) ஆண்டுகளில் செய்ய முடிந்தது.

    எனவே இதுபோல் இனி வரமுடிந்த அல்லது கிடைக்க முடிந்த சிறு இடைவெளியையும் பயனாக்கி முதன்மைப் படுத்த வேண்டியதைத் தேர்ந்தெடுத்து வேலை செய்வதே பயனளிக்கும்.

    நாங்கள் இழைக்குமொரு தவறு நம்மையறியாமல் வந்துவிடுகிறது. காரணம் வெளியிலிருந்து இலங்லையின் தீர்வு பற்றிப்பேச முனைவதால் அந்த மக்களை அதிகமான சந்தர்ப்பத்தில் மறந்து பேசுகிறோம்.

    அரை நூற்றாண்டின் ரணங்களோடு எஞ்சி வாழும் சிறுபான்மை மக்களும்/ இவர்களின் நியாயபூர்வமான உரிமைகளை ஏற்கும் உதவும் பெரும்பான்மையிலுள்ள மக்களும்/ இழப்புக்களின் விழிம்பில் ஏழ்மையால் ஒன்றினைக்கப்படும் போது வயிற்றை முதன்மைப்படுத்தி இணையவரும் மக்களும் இருப்பதான உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது.
    மக்களில் நம்பிக்கை வைத்து எமக்குப் பொதுவான முதற் பிரச்சனையை மறைப்பதற்காகவே இனப்பிரச்சனையை எதிரிக்ள் ஆயுதமாகத் தம் கையிலெடுத்திருப்பதை உணரவைக்கும் செயல்பாடுகள் நம்பக்கூடிய பலன் தரும!

    இதைவிட கொடுரமான இனப்பிரச்சனைகள் கண்ட வரலாறுகளும்/ நாடுகளும் உண்டு. இன்றோ உலகம் தன் மக்களை நெருங்கி வர வைத்துள்ளது. எந்தவகை அநீயான பாதிப்புக்களுக்கும் குரல் கொடுக்கும் பண்பு உலகில் வளர்ந்து கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்பாக உலகப் பாட்டாளிகள் ஒன்று படும் தேவையை உலகம் தழுவிய முதலீடுகளின் தோல்வி வெற்றியாக்கி விட்டிருக்கின்ற போது!

    நாமேன் நம்பிக்கை இழப்போம் பொது நோக்கை முதன்மைப்படுத்தி இணைந்து செயற்படுவோம்!!!

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    “அழிவின் விழிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழீழ விடுத்லைப் புலிகள்”…………
    “தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகப் போராடும் எந்த அமைப்பும் தனிமனிதனும் ஜனநாயகவாதியும் தேசிய வாதியும் மார்க்சியவாதியும் இந்தப் புலிகள் வரலாற்றின் பக்கங்களிலிருந்து துடைத்தெறியப் படுவதைப் பற்றி அலட்டிக்கொள்ளப் போவதில்லை.”
    புலிகளில் உங்களுக்கு விருப்பில்லாவிட்டாலும் அவர்கள் தொடர்பான புலம்பெயர் நிகழ்வுகளை வெறும் புதினத்திற்காவது கவனியுங்கள். சில கசப்பான உண்மைகள் புரியும். உங்கள் மனவோட்டத்திலுள்ள பல பத்துபேருடன் மட்டும் பேசுவதால் தொடர்ந்தும் நீங்கள் மட்டும்தான் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகப் போராடும் போராளிகள் என்ற மயக்கம் தெளியபோவதில்லை. ………..

    Reply
  • singam
    singam

    நாவலன் அவர்களின் கட்டுரை இன்றைய நேரத்தில் எழுதப்பட்டது முக்கியமானது. பாராட்டுக்கள்.

    லோகன் போன்றவர்கள் தங்களை இடதுசாரிகளாக காட்டினாலும் தீவிர அரச ஆதரவாளர்கள் என்பதை அவர்கள் எழுதுகின்றவை காட்டிக் கொடுத்துவிடுகின்றன. பாட்டாளி வர்க்க புரட்சி பற்றி பேசிய புரட்சியாளர்கள் எவரும் எங்கும் பேரினவாத ஒடுக்குமுறை அரசுகளின் ஆதரவாளர்களாக இருந்ததான சான்றுகள் எங்கும் இல்லை. லோகன் தயவு செய்து பாட்டாளி வர்க்க புரட்சியென்றெல்லாம் கதைத்து மாக்ச்சியத்தை கொச்சைப்படுத்தவேண்டாம்.

    Reply
  • உலகத்தமிழன்
    உலகத்தமிழன்

    தலித்திய அரசியல் என்பது கீழ்கண்ட நோக்கத்திற்காக “காலனித்துவ மனப்பான்மையினால்” பகடைக்காயாக பயன்படுத்தப்படுகிறது.
    /1. மொழிரீதியான வேறுபாடுகளை இலங்கையில் ஆரிய-திராவிட முரண்பாடாகவும் பின்னர் தமிழ் – சிங்கள முரண்பாடாகவும் மாற்றி, வேறுபட்ட தேசிய இனங்கள் உருவாவதற்கான சூழலைத் தோற்றுவித்து, இத்தேசிய இனங்களை தமது அரசியல், வியாபார நலன்களுக்காக மோதவிட்டு வேடிக்கை பார்த்தது பிரித்தானிய ஏகதிபத்தியம்./
    The ideas surrounding real and supposed ethnic groups in Rwanda have a very long and complicated history. The definitions of “Hutu” and “Tutsi” may have changed through time and location. Social structures were not identical throughout Rwanda. There was clearly a Tutsi aristocracy that was distinguished from Tutsi commoners, and wealthy Hutu were often indistinguishable from upper class Tutsi. When the German colonists conducted their censuses, they desired to classify the people throughout Rwanda-Burundi with a single classification scheme. They merely defined “Tutsi” as anyone with more than ten cows or a long nose. The “European-like” noses of some Rwandans invoked historical and racial theories to explain how some Africans acquired such noses. According to these early twentieth-century Europeans such organization and such noses could only be explained by European descent, transmitted by way of Ethiopia. Modern day genetic studies on the y-chromosome show the Tutsi to be 100% indigenous African (80% e3a, 4% e3, 1% e3b and 15%B) with little to no East African genetic influence. [1] In fact, the Tutsis are most genetically similar to the Hutu. There is currently no mtDNA data available for the Tutsi.
    ராஜிவ் கொலையில் முக்கிய மர்மம்,பம்பாயில் தீவிர வாதிகளால் கொல்லப்பட்ட “கார்க்காரே” கூறிய மாதிரி,”இந்து தீவிர வாதம்தான்”.ஆனால் அது “இந்திய ஆன்மா” அற்ற,பரந்த பாரதத்தை ஆள நினைக்கும்,”அந்நிய சக்திகளின் இந்து தீவிர வாதம்”.

    Reply
  • suganthy arumugam
    suganthy arumugam

    we can agree with navalan on some points, but he still see only black and white………. Navalan has something to say ” not just tiger bashing”

    Reply
  • ULAKATHTHAMIZAHAN
    ULAKATHTHAMIZAHAN

    இலங்கைத் தமிழ்த் தலைமைகள் இன்னும் தங்கள் காலனித்துவ மனப்பான்மையைவிட்டு வெளியே வரவில்லை,வர விரும்பவும் இல்லை.
    வன்னி நிலப்பரப்பில் குடியமர்த்தப் பட்ட- சா.அ.டேவிட் போன்றவர்களின் காலத்தில் “காந்தியம்” போன்ற அமைப்புகளால்,இலங்கைத் தோட்டத் தொழிலாளர்கள்,மற்றும் பிறகு குடியமர்த்தப் பட்ட,விளிம்பு நிலை மக்கள்தான்,அவர்களின் வாரிசுகள்தான் தற்போது வலுக்கட்டாயமாக,இராணுவத்திற்கு பலிக் கொடுக்கப் படுகிறார்கள்(கெனான் ஃபாடர்ஸ்).அதே போல் தமிழகத்தின் தலித் அமைப்புகளும்,இலங்கைப் பிரச்சனையை ஒரு முட்டாள் தனமான கோண்த்தில், பழைய,கிரித்தவ – காலனித்துவ- என்.ஜி.ஓ. கோணத்தில் ஆதரிக்கின்றன.விளிம்பு நிலை மக்கள் மீண்டும் பகடைக் காய்களாகப் பயன் படுத்தப் படுகிறார்கள்.

    Reply
  • ranjan
    ranjan

    //நாங்கள் இழைக்குமொரு தவறு நம்மையறியாமல் வந்துவிடுகிறது. காரணம் வெளியிலிருந்து இலங்லையின் தீர்வு பற்றிப்பேச முனைவதால் அந்த மக்களை அதிகமான சந்தர்ப்பத்தில் மறந்து பேசுகிறோம்.//logan
    கட்டுரையிலிருந்து….
    “மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுமாரி பொழிந்து சிறீலங்கா விமானங்கள், கொலைத் தாண்டவம் நடாத்திய போதும், குழந்தைகள் முதியவர்கள் என்று எந்த வேறுபாடுமின்றி தமிழ் பேசும் ஒரே காரணத்திற்காக கொலை செய்யப்பட்டுத் தெருக்களில் வீசப்பட போதும், ஏன் புலியழிப்பின் பேரால் இலங்கையில் வளரும் பாசிசத்திற்கெதிராகக் குரல் கொடுத்த சிங்கள மக்கள் மத்தியிலிருந்த அறிவு ஜீவிகள், பத்திரிகையாளர்கள் போன்றோர் கடத்தப்படுக் கொலை செய்யப்பட்ட போதும், மகிந்த அரசிற்கு ஆதரவளிக்கும் அரச கைக்கூலிகளான இந்தப் புலியெதிர்ப்பாளர்கள் மக்கள் பக்கம் சாராத மக்கள் விரோதிகளே.”

    Reply
  • hg
    hg

    Navalan:
    1. புலியெதிர்ப்பென்பது பேரின வாத அரசின் அடக்குமுறையை ஆதரித்தல் என்ற பொதுவான கருத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியவர்கள் இவர்களே.

    2. பேரினவாத அரசிற்கு ஆதரவு வழங்கி அதன் பாசிசத்தை வளர்க்கத் துணை போகிறவர்களும் இவர்களே.

    3. புலிகள் தவிர அரசிற்கெதிரான எழும் எந்த எதிர்ப்புக் குரலையும் அரச ஆதரவுக் குரல் என்று அடையாளப்படுத்தி, அரசிற்கெதிரான மாற்று அரசியற் சக்தி உருவாவதை சிந்தனைத் தளத்தில் சிதைத்தவர்களும், இதனூடாக அரச பாசிசத்தையும், புலிகளின் பாசிசத்தையும் வளர்க்கத் துணை போனவர்கள் இவர்களே.

    4. அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பெருந்தேசிய அடக்குமுறைக் கெதிராக சிங்கள மக்கள் மத்தியிலுள்ள, இடது சாரிகள், முற்போக்காளர்கள் போன்றோரிடையிருந்து வரும் எதிர்ப்பை தமிழ் ம்க்கள் சார்பில் நசுக்கியவர்களும் இவர்களே.

    5. அரசின் அடக்கு முறைக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் இந்தக் கூட்டம், அரசியற்தீர்வுக்கான அனைத்து வழிகளையும் நிராகரித்து போரையும் மக்களின் அழிவையும் முன்நிறுத்தியவர்கள்.

    Logan, இது மக்கள் virotham illa viddal ethu மக்கள் virotham. Lolan nenkalum intha catagory thane,? Tbc, thenne and you the meian perserns of this catogory

    இதற்காக புலியெதிர்ப்பாளர்கள மக்கள் விரோதிகள் என்பது அப்படியே புலிகளின் குரலாகவே கேட்கிறது! மாறிப்பார்க்க முடியவில்லை!!.

    Reply
  • indiani
    indiani

    மக்கள்வெகு ஜன அமைப்புக்களை கட்டியெழுப்பி மக்கள் போராட்டத்திற்கு தயார் படுத்தியே மக்களுக்கான போராட்டம் மக்களால் வழிநடாத்தப்பட வேண்டும் என்று முன் மொழிந்தவர்கள் கொல்லப்பட்டது புலிகளால்

    சிங்கள மக்களுடன் கூட்டுறவை வலுப்படுத்தி எமது போராட்ட நிஜாயங்களை எடுத்துரைத்து சிங்கள மக்களின் ஆதரவை பெற்று போராட்டம் நடாத்தப்பட வேண்டும் என்றவன் புலிகளால் கொல்லப்பட்டான்.

    தமிழ் மக்களின் பிரச்சினை ஒரு தனியான மாகாணத்தை உருவாக்கவதே அதை இந்திய அரசின் உதவியுடன் செய்து கொள்ளலாம் என்றவன் கொல்லப்பட்டான்

    தமிழர்கள் கேட்காத தமிழீழத்தை தமது சுயநனல நோக்கத்திற்காக அரசியலாக்கி பாராளுமன்ற கதிரைக்கு மக்களை பலியாக்கிவன் கொல்லப்பட்டான் தான் தனது தனிமனித தலைமையில் மக்களுக்காக போராட்டம் செய்வோம் என்று முன்பள்ளி அறிவைக் கூட பயன்படுத்தாத புலிகள் தமது கொலைகளால் பழிவாங்கல்களால் இராணுவ நடத்தைகளால் மட்டும் தமிழர்கள் தமிழீழம் பெறலாம் என்ற தம் இச்சைப் போக்கினால் இன்று வரை தோற்றுப் போயிருந்த கொலை வெறி கிளிநொச்சியைவிட்டு விட்டு ஒடியது போராட்ட தோல்வியல்ல இது புலிகள் போன்ற கொலை வெறி தனிமனித பித்தலாட்டங்கள் என்றுமே போராட்டமாகாது என்பதை இந்திய பிராந்தியத்திற்கு மீளவும் உறுதிபடுத்தியுள்ளது.

    மக்கள் வெகுஜன அமைப்புக்களை உருவாக்கி மக்கள் போராட்டம் நடத்தப்பட்டால் மட்டுமே அந்த போராடும் மக்கள் தொடர்ந்து போராட்டத்தை தொடர முடீயும். புலிகளின் போராட்டம் இப்படியான மக்கள் அமைப்புக்களை மக்களால் உருவாக அனுமதித்திருந்தால் அந்த அமைப்புக்கள் கிளிநொச்சியில் இலங்கை இராணுவம் என்ன? அமெரிக் இராணுவம் வந்தாலும் எதிர் கொண்டு தமது வாழ்வைத் தொடர்ந்திருப்பார்கள் – புலிகள் மக்கள் அமைப்புக்களை கட்டினார்கள் என்று கதைவிடுபவர்கள் மக்கள் அமைப்பு என்ன என்ன என்பதை அறிந்திருக்கவில்லை என்றே கருதவேண்டும்.

    புலிகள் கட்டிய மக்கள் அமைப்பு என்ற புலிகளின் உளவு அமைப்புக்கள் புலிகள் கிளிநொச்சிளை விட்டு ஓடும் போது புலிகளுடன் ஓடுவதும் அல்லது புலிகள் அமைப்பை கை விட்டு எதிரியிடம் சரணடைவது தற்போது நடைபெறுகிறது புலிகள் இவர்களைத் தேடி முல்லைத்தீவில் மக்களிடம் கேட்டலைகிறார்கள்

    கடந்த 30 வருடங்களாக நடந்தவைகள் என்ன?(போராட்டமா? பயங்கரவாதமா?) புலிகள் மக்களிடம் கறந்த பணங்களின் பெறுமதி (முழு இலங்கையையும் அபிவிருத்தி செய்திருக்க முடியும்) கொலை செய்த சமூக சேவையாளர்கள்? துரோகிகளாக்கப்பட்டு இனிமேல் சமூகத்தில் யாருமே பொது சேவைகள் செய்ய முன்வராமல் செய்யப்பட்ட பெரிய சமூகத் துரோகம் இல்லையா? வாழவேண்டியவர்களை துரோகத்தனமாக கொலைக்களத்திற்கு அனுப்பி கொலை செய்தது. தமிழீழம் கிடைக்கும் என்ன நம்பி களத்திற்கு அனுப்பியது?

    இது எல்லாவற்றையும் விட மிகப் பெரிய துரோகம் இரண்டாம் பெரும்பான்மை இனமாக இருந்த தமிழ் மக்களை மூன்றாவது பெரும்பான்மை இனமாக மாற்றியதும் அந்த மக்கள் தமது சாதாரண வாழ்வைக் கூட இனிமேல் சுதந்திரமாக நிம்மதியாக வாழ முடியாது செய்தது.

    யாழ்ப்பாணத்திலிருந்து மக்களை வெளியேற்றும் போது அந்த மக்கள் திரும்பி போவார்கள் என்று தெரியாவிட்டால் இப்போது தெரிந்து கொள்ள வேண்டும் அப்படி திரம்பி போனவர்கள் தமது தேவைகளை நிவர்த்தி செய்ய எந்த அரசு இயந்திரத்திடம் சரி போயே தீரவேண்டும் இன்று தமது பசிதீர போக் கொண்டிரக்கிறார்கள் புலிகளின் துரோகத்தை வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டனர்.

    இது கிளிநொச்சி மக்களுக்கும் நடக்கும் அவர்களும் திரம்ப போயே தீர்வார்கள் புலிகளின் துரோகத்தை வெளிப்படையாக கதைப்பார்கள் (தமது பிள்ளைகளை வலக் கட்டாயமாக இழுத்துப் போனதை மன்னிக்கவே மாட்டார்கள் அந்தப் பிள்ளைகளுக்காகவே புலிகளின் பிரதேசத்திற்கு தமது பிள்ளைகள் இருக்கும் பிரதேசத்திற்கு அவர்களும் இடம் பெயர்கிறார்கள் அவர்களுக்கு தமது வாழ்வு மட்டுமே இப்போ முக்கியம் பிள்ளைகளை விட்டு விட்டு என்ன வாழ்க்கை?

    புலிகள் மீண்டும் தவறு விடுவது மன்னிக் முடியாதாகவே மாறிவிடும் நிலை உருவாகியுள்ளது. (இலங்கை இந்திய ஒப்பந்தம்- சந்திரிகா அரசின் முயற்ச்சி – ஜனாதிபதி மகிந்த முயற்ச்சி ……..

    மாற்று இயக்கத்தின் மீது கொலைகளை பிரபாகரனின் உத்தரவின் பேரில் ஆரம்பித்ததும் தமிழர் போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டு விட்டது.

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    “மக்கள் வெகுஜன அமைப்புக்களை உருவாக்கி மக்கள் போராட்டம் நடத்தப்பட்டால் மட்டுமே அந்த போராடும் மக்கள் தொடர்ந்து போராட்டத்தை தொடர முடீயும்”
    1986வரை புலிகள் தவிர்ந்த மற்றைய அமைப்புக்கள் உருவாக்கிய மக்கள் வெகுஜன அமைப்புக்கள் ஏன் புலிகளிடம் இருந்த அவர்களை பாதுகாக்கமல் விட்டது.
    புலிக்கே ஈடுகொடுக்க முடியாத போராட்ட குணம்சமற்றவர்கள் ” இலங்கை இராணுவம் என்ன? அமெரிக் இராணுவம் வந்தாலும் எதிர் கொண்டு தமது வாழ்வைத் தொடர்ந்திருப்பார்கள்” என்று கதையளப்பதற்கு ஒன்றும் குறைச்சலில்லை.

    Reply
  • PRO-TAMIL
    PRO-TAMIL

    இலங்கையின் தேசிய இனச் சிக்கலில் அப்பாவி மக்களின் அழிவின்மேல் அரசியல் இலாபம் காணும் மக்கள் விரோத சக்திகள் தம்மை வெளிப்படையாக அடையாளம் காட்டிக்கொள்கின்றனர். இவர்கள் பல வகைப்படினும் பிரதானமாக நான்கு வகைக்குள் அடக்கிவிட முடியும்.

    1. புலிகளும் அதன் ஆதரவு சக்திகளும்.
    நாவலன் உங்கள் காலத்து புலிகள் எல்லாம் செத்துவிட்டார்கள்.அல்லது பலர் விலகி வெளிநாடு வந்து விட்டார்கள்.இப்போது தலைமையும், வேறு 10 தலைகளும் தான் பழைய புலிகள். மிகுதி தமிழ் மக்களில் இருந்து வந்த புலித்தலைமைகள் தான். அவர்கள் தான் போராடுகிறார்கள். 2 ஜெனரேசன் புலிகளில் மாறிவிட்டது. இப்போது 3வது ஜெனரேசன் கட்டாயமாக இணைக்கப்பட்ட போராளிகளுக்கும் போராட்டம் மாறிவிட்டது. இப்ப உள்ள புலிகளுக்கு துரொகிகளென அரசுடன் நிற்கும் தேவானந்தாக்களையும், சங்கரியையும், சித்தார்த்தனையும், சுகுவையும், தான் தெரியும். வேறு ஒருவரையும் தெரியாது. வரதரையும், ராஜனையும் அவர்கள் அறிந்திருக்க சந்தர்ப்பமே இல்லை. இங்கு புலம் பெயர்ந்தநாட்டில் உள்ள பழையதுகளுக்கு தான் உங்களையும் மிகுதிபெரையும் தெரியும். 98வீதத்தினருக்கு இங்கு மாற்று கருத்து வைக்கும் எவரையும் தெரியாது. இங்கே தான் புலிகளின் ஆதரவு சக்திகளின் சக்தி என்ன என்பது தெரியும். புலிகளின் ஆதரவு சக்தி என்பது ரோபோக்கள் அல்ல. அவர்கள் மக்கள் சக்தி. அதேபோல் புலிகளும் அதே மக்கள் கூட்டத்திலிருந்து தான் வந்தவர்கள். அதுதான் புலிகளின் ஆதரவு தளம் மேலோங்கி உள்ளது.

    இந்த மாற்று கருத்து வைப்பவர்கள் 40பேர் கொண்ட மேடையிலும், 40 கட்டுரைகளுடன் அடங்கி விடுகின்றன. எழுத்தில் எழுதுபவற்றையும், மேடையில் பேசுபவற்றினையும் செயல்முறைக்கு கொண்டு போய் பார்த்தால் தான் தெரியும். தமிழ் மக்களின் உண்மைநிலை. ஒன்றுமே செய்யாமல் கதைக்கவும் எழுதவும் இதமாகவும் சுவையாகவும் இருக்கும்.அதனை அப்பிளை பண்ணிப்பார்த்தால் தான் தெரியும். தமிழ் மக்கள் நிறையவே மாறிவிட்டார்கள். 20 வருடங்களுக்கு முன்னர் இருந்த தமிழ் மக்கள் கூட்டமல்ல.இப்போது வட கிழக்கில் இருப்பவர்கள்,.ஜெனரேசன் மாறிவிட்டது. அதனை இப்போது போய் மக்கள் போராட்டம் மாக்சிசம் என கதைத்தால் கிலோ என்ன விலை என்று தான் மக்கள் கேட்பார்கள். புது ஜெனரேசன் தமிழ் தேசிய போராட்டம் ஏன் ஆரம்பிக்கபட்டது என்றே கேட்கும் நிலைதான் யாழ்ப்பாணத்தில் இருக்கு. இதைதான் தேவானந்தாக்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இன்னும் 10வருடம் சென்றால் கிழக்கிலும் இதேனிலையை கருணாக்கள் ஏற்படுத்தி விடுவார்கள். வெறும் பிரபாகரனிலும் புலியிலும் பழியைப்போட்டு விட்டு பேசக்கூடாது. நீங்கள் இந்த 20வருடமாக மக்களுக்கு என்ன செய்தீர்கள். மக்களின் துன்பதுயரத்தில் என்ன பங்கெடுத்தீர்கள்? பிரபாகரனால் இவ்வளவுநாளும் எல்லா எதிர்சக்திகளுக்கும் எதிர்நீச்சல் போட தெரிந்தால் ஏன் உங்களால் முடியாமல் போனது. ஏன் சகோதர யுத்தத்தை நீங்களும் செய்து புலிகள் மாதிரி பாசிசமாக ஆகிவிடுவீர்கள் என்று பயப்பிட்டீர்களா? புலிகளின் தோல்விக்கு உங்கள் போன்றவர்களின் இயலாமை பயம் வீரமின்மையும் தான் காரணம்…….

    Reply
  • palli
    palli

    காது கேளாத புலிக்கும்;
    கண் தெரியாத சிங்கத்துக்கும்;
    இலங்கயில் பிரச்சனை;
    அதை வாய் பேச முடியாத
    பல பிராணிகள் இங்கு ஒப்பாரி.
    பரதேசிகள் மல்லுகட்டுகிறார்கள்.
    மக்கள் கஸ்ரற்றபடுகிறார்கள்.
    இதைதான் நாவலன் தான் படித்த படிப்பை வைத்து கட்டுரை எழுதவில்லை; செய்திருக்கிறார். இருப்பினும் அரசின் வாலை பிடிப்பதே அறிவுஜீவிகளுக்கு பெருமை என பல ஆய்வாளர்கள் கருதும் போது. நடுனிலையாக ஒரு கட்டுரையை நாவலன் செய்தது பாராட்டபட வேண்டியது.
    என்ன சில இடங்களில் 83ல் இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வித்துவான்கள் பேசியது போல் உள்ளது. இருப்பினும் பாராட்டுக்கள்.

    பல்லி.

    Reply
  • palli
    palli

    //1986வரை புலிகள் தவிர்ந்த மற்றைய அமைப்புக்கள் உருவாக்கிய மக்கள் வெகுஜன அமைப்புக்கள் ஏன் புலிகளிடம் இருந்த அவர்களை பாதுகாக்கமல் விட்டது./

    அது கூடவா தெரியாது?? உம்மை போன்ற பலர் ஆயுதத்துக்கு மாலை போட்டதால்.எம்மை போன்ற சிலர் பலருக்கு (பிண்ணத்துக்கு)மாலை போட்டோம். உமது கேள்வியை பார்த்தால் சோமாலியாவில் பிறந்து தற்போதுதான் ஈழ பிரச்சனை பற்றி ஆய்வு நடத்த நடந்து வந்தது போல் உள்ளது. மக்கள் மிருகத்திடம் இருந்து தம்மை பாதுகாப்பதே திண்டாட்டம். அதுக்கை இயக்கத்தை காக்கிறதோ??? எங்குதான் இந்த வில்லதனம்மெல்லம் படித்து வாறியளோ தெரியவில்லை.

    சாமத்து பல்லி.

    Reply
  • indiani
    indiani

    மாற்றுகருத்துதோழர் நீர் எழுதிய கருத்து : 1986வரை புலிகள் தவிர்ந்த மற்றைய அமைப்புக்கள் உருவாக்கிய மக்கள் வெகுஜன அமைப்புக்கள் ஏன் புலிகளிடம் இருந்த அவர்களை பாதுகாக்கமல் விட்டது.

    முதலாவது உமத பெயரை புலிக்கருத்துவால் என்று உமது பெயரை மாற்றம் செய்து கொள்ளும் காரணம் உமக்கு இன்னும் மாற்றுக்கருத்து என்பது என்ன அதற்கும் ஜனநாயகத்தக்கும் உள்ள தொடர்பு என்ன? இது எப்படி இனங்களுக்கிடையிலான மற்றும் வேறுபட்ட கருத்துக் கொண்டவர்களை கூடியிருந்து பேச வைப்பது போன்ற விடயங்களை உங்கள் தலைவர் அல்லது உங்கள் கொலைக் கூட்டம் உங்களுக்கு சொல்லித் தந்திருக்காது என்றே கருதுகிறேன்.

    நீர் எழுதியது போல அஸ்ரப் அலி என்றால் என்ன? இலங்கை உளவுப் படையினர் என்றால் என்ன இந்த தேசம்நெற்றில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாலேயே அவர்கள் வந்து எழுதுகிறார்கள் தமக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்துடன் அந்த சுதந்திரம் மற்ற எழுத்தாளர்களின் கேவலப்படுத்தாமல் ஆனால் உங்கள் தலைவரின் இயக்கம் பத்திரகைகள் .இப்படி எழுத அனுமதித்ததா? மற்ற எழுத்தாளர்களை பலி எடுத்துள்ளது.

    உங்கள் தலைவரும் தற்போது லண்டனில் உள்ள சில முன்னாள் புலிகளும் சேர்ந்து எடுத்த உயிர்ப் பலிகளில் ஒன்று தோழர் சுந்தரம் (புதிய பாதை சுந்தரம்) இந்த தோழரின் மக்கள் அமைப்புக்கள் உருவாக்கம் பற்றி உங்கள் புலிக் கூட்டத்தினரிடம் கேட்டுப்பாருங்கள் ஏன் கொலை செய்தார்கள் என்று அவரடைய சிந்தனையில் எழுந்த மக்கள் அமைப்பில் ஒன்று காந்தீயம் இந்த காந்தீயம் மலையகத்திலிருந்து விரட்டி யடிக்கப்பட்ட மலையகத் தமிழரை வடக்கில் குடியமர்த்தி அவர்களையும் மற்றவர்கள் போல் வடக்கில் வாழ வழிவகை செய்யும் அமைப்பு அந்த அமைப்பு மக்களை வாழ வைக்கும் அமைப்பு இதற்கும் பெயர் போராட்டம் என்பதை புலிகள் எப்போதாவது நினைத்துப் பார்த்தார்களா? இன்றும் அந்த மக்கள் வவுனியாவில் இந்த தோழர்களின் நினைவுடன் வாழ்கின்றார்கள்

    ஒன்று கொலைகாரப் புலிகளினால் ஒன்றுமட்டும்தான் இளம் தமிழ் சந்ததியினருக்கு சொல்லி கொடுத்தது அது ஆயுதம் அடுத்தது கொலை. அடுத்தது வெளிநாட்டில் உள்ளவர்களக்கு பணம் சேரிப்பு அதில் 10 வீதம் சேகரிப்பாளர்க்கு இப்படியான மோசமான விடங்களைளே போராட்டம் என்று எழுதியும் மாவீரர் தினங்களில் பேசியும் வந்துள்ளனர்

    இப்போது தான் இவர்களின் துரோகம் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்துள்ளது

    இது எல்லாவற்றையும் விட்டு விட்டு தேசம் ஆசிரியர்களுக்கு படிப்பிக்க வேண்டாம் யார் யாரை எழுத அனுமதி அனுமதியாதே என்று தேசம் ஆசிரியர்கள் உம்போன்ற புலிக் கும்பல்ககளை எழுத அனுமதித்ததே பெரிய விடயம் எங்கே உங்கள் புலிப்பத்திரகையில் ஒருவிடயத்தை கொண்டுவரவும் புலியை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதப்பட்டிருப்பதை.

    கதையளப்பதற்கு ஒன்றும் குறைச்சலில்லை.

    நீங்கள் புலிகள் அமைப்பினர் இன்றுவரையில் கதை அளப்பதில் ஒன்றும் குறைச்சல் இல்லை அது இப்போ நல்லா தெரியவருகிறது.

    அஸ்ரப் அலி மற்றும் பலரின் எழத்துக்களை திரும்ப படித்துப்பார்க்கவும் எப்படி மற்றவர்களின் கரத்தை மதித்து பதில் எழுதுகிறார்கள் என்று உமது எழுத்தில் செய்யும் சாகஸங்களை எமக்கு தெரியாது அல்லத தேசம்நெற் ஆசிரியர்களுக்கு தெரியாது என்ற நினைப்போ?

    இப்ப விளங்கிக் கொள்ளும் மக்கள் அமைப்புக்களை கட்டி எழுப்பிய மாற்று இயக்கத் தோழர்களை அவர்களது சிந்தனை ஆரப்பிக்கும் போதே உங்கள் புலிகளின் தலைவரின் ஆணைப்படி கொல்லப்பட்டுள்ளர் இந்தப் பயப் பீதி தொடர்ச்சியாக மக்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது இதன் காரணமாகவே மக்கள் போராட்ட விடங்களில் ஒதுங்கி வாழ்ந்துள்ளனர் இதனாலேயே இறுதிக்காலத்தில் புலிகள் போராட்டத்தின் கொலைக் களத்திற்கு பலவந்தமாக இளம் பராயத்தினரை கடத்தி செல்கின்றனர் அவர்களே இன்று புலிகளை எதிரிக்கு காட்டிக் கொடுக்கின்றனர்.

    உம்மடைய புலிச்சிந்தனைக்கு இப்ப விளங்குதா? மக்கள் அமைப்புக்கும் – மக்கள் அமைப்பின் போராட்ட வழிமுறைக்கும் உள்ள வித்தியாசங்கள் புளொட் இயக்கம் ஆயுதம் தரித்து மக்களுக்காக போராடும் இயக்கமாக – ஒளித்திரந்து இலங்கையில் உள்ள சிங்கள மக்களை எதிரிகள் என்று சொல்லிக் கொண்டு போராட்டம் நடாத்த ஆரம்பிக்கப்பட்ட இயக்கமல்ல -இந்த புளொட் ஆரம்ப காலம் வெகு ஜன மக்கள் அமைப்பாகவே இருந்து தொழிலாளர்கள் – விவசாயிகள் அமைப்பாகவே செயற்பபடடது எப்போ புலிகள் அதன் முக்கிய தலைவர்களில் ஒருவரான புதிய பாதை சுந்தரத்தை ஒரு மக்களி உன்னத தோழனை சித்திரா அச்சகத்தில் வைத்து பத்திரிகை பிறின்ட் பண்ணப் போனபோத கொலை செய்தனரோ? அதன் பின்னரே புளொட் தலை மறைவு இயக்கமாக மாற்றம் கண்டது.

    இப்ப விளங்குதா கொலைகாரப் புலிகளே மக்களின் விரோதிகள் என்று புலிகளே மக்கள் அமைப்புக்ளை துடைத்தெறிந்த துரோகிகள் என்று.

    உங்கள் மர மண்டையில் ஆணி அடித்து எழுதுங்கள் புலிகளே தமிழரின் போராட்டத்தை காட்டிக் கொடுததவர்கள்

    ஞாபகம் உண்டோ சிறீசபா பத்மநாபா விஸ்வா ஜெகன் ஒபரேய் தெவன் மனோ மாஸ்டர் சுந்தரம் கேதீஸ்வரன் ரொபேட் (ரஞ்சன்)நீலன். தலைவர் அமிர்தலிங்கம். யோகேஸ்வரன் செல்வி ரஜனி திராணஷகம என்ன காரணத்திற்காக புலிகளால் கொல்லப்பட்டனர் 300 ரெலோ போராளிகள் 210 ஈபி ஆர் எல் எப் போராளிகள்.150 மாத்தையாவின் புலிப்போராளிகள் 600 கிழக்கு மக்கள்புலிகள் மானபங்கப் படுத்தப்பட்ட கிழக்கு பெண் மக்கள்புலிப் போராளிகள்

    புலிகள் என்றுமே மக்களுக்காக போராட வில்லை

    Reply
  • ashroffali
    ashroffali

    கட்டுரையாசிரியருடன் ஒத்துப் போவதை விட முரண்படுதவற்கான சந்தர்ப்பங்களே நிறைய இருக்கின்றது. அதற்காக என்னை மன்னிக்கவும்.

    போராட்டம் என்று வந்த பின்பு சக தோழர்களை சிங்கள தலைமைகளிடம் காட்டிக் கொடுத்த துரோகத்தனத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் புலிகள் தான். இறந்து போன மனிதர்களின் நல்ல விடயங்களை மட்டுமே பேச வேண்டும் என்பது எனது கொள்கைகளில் ஒன்று. ஆயினும் சற்று அந்தக் கொள்கைக்கு அப்பால் சென்று விளக்கங்களை முன்வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    அண்டன் பாலசிங்கத்தின் அறிவுரைக்கு இணங்க பிரேமதாசவுடன் கூட்டுச் சேர்ந்து தமிழர் உரிமைக்கு ஆப்பு வைக்க முதலில் துணிந்தவர்கள் புலிகள்தான். 1983ம் ஆண்டின் ஜுலைக் கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்ட அரக்க அரசாங்கத்தின் முக்கிய புள்ளியான பிரேமதாசவுடன் சுயமரியாதையை அடகு வைத்து விட்டு புலிகள் கூட்டுச் சேர்ந்த காரணத்தால் தான் ஆயிரக்கணக்கான போராளிகளின் உயிர்த்தியாகங்கள் மற்றும் இந்திய மக்களின் தார்மீக ஆதரவு என்பவற்றினை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டது. மாவீரர் தின உரையில் அடிக்கடி 1983ம் ஆண்டுக் கலவரத்தை ஞாபகப்படுத்தி தமிழ் மக்களுக்கு பூச்சாண்டி காட்டும் பிரபாகரன் ஒரு போதும் அந்தக் கலவரத்துக்குக் காரணமானவர்களுடன் தான் கூட்டுச் சேர்ந்து கும்மாளமிட்டதை கொஞ்சி மகிழ்ந்ததை எண்ணிக் கவலைப்பட்டதில்லை.சுய விமர்சனம் செய்து கொண்டதில்லை.

    ஆனால் தமிழ் மக்களின் எதிர்கால நலன் கருதி ஆயுதங்களைக் களைவதற்கு முன்வந்த ஆயிரக்கணக்கான போராளிகளை நிராயுதபாணிகளான நிலையில் கோழைத்தனமாக கொன்றொழித்ததை வீரமாகக் கருதி பின்னூட்டமிடுபவர்களை நினைத்து கவலைப்படுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.ஒரு புறாவுக்காக தனது உடம்பையே வெட்டிக் கொடுத்த வீரத்தமிழன் பரம்பரையில் வந்தவர்கள்தானா நாங்கள் என்று எங்களை நாங்களே கேட்டுக் கொள்ள வேண்டியதாகிப் போயுள்ளது. ஒரு கன்றுக் குட்டிக்கு நடந்த அநியாயத்திற்காக தன் ஒரே வாரிசை தேர்க்காலில் இடற வைத்த நீதி தவறாத மனிதன் எங்கள் தமிழினத்தைச் சேர்ந்தவன் தானா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியதாகிப் போயுள்ளது.

    //புலிக்கே ஈடுகொடுக்க முடியாத போராட்ட குணம்சமற்றவர்கள் ” //

    என்றவாறெல்லாம் எங்கள் உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக தமது இளமையையும் இன்னுயிரையும் அர்ப்பணிப்பதற்கு வந்த அந்த ஆயிரக்கணக்கான வீரப்புருஷர்களுக்கு இதை விட நிந்தனை வேறெதுவும் இருக்க முடியாது.எதிரி நிராயுதபாணியாகிப் போன நிலையில் அவனைக் கொல்ல விரும்பாத வீரப்புருஷன் எங்கள் இனத்தைச் சேர்ந்தவன் என்று பெருமை பாராட்டிக் கொள்ளும் நாங்கள்தான் நிராயுதபாணிகளாக இருந்த நிலையில் பாசிச வெறியர்களால் கொல்லப்பட்ட எமது சக உறவுகளை போராட்ட குணமற்றவர்கள் என்று நன்றி கெட்டதனமாக கொச்சைப்படுத்துகின்றோம். அவர்களின் அர்ப்பணிப்புகளுக்கு நாம் செய்யும் கைமாறு இதுதானா? அப்படியெனில் எந்நன்றி கொன்ற மகற்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்று போதிக்கும் திருக்குறளுக்கு தீ வைத்துக் கொளுத்தி விடுவோம். வீர புருஷனாக இராமனைச் சித்தரிப்பதை விடுத்து சமயோசித புத்தியற்றவனாக சித்தரிக்கத் தொடங்குவோம்.

    இப்படியாக தாங்கள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தும் சித்தாந்தவாதிகள் பற்றி மரியாதைக்குரிய சபா நாவலன் அவர்கள் போதுமான விமர்சனங்களை முன் வைக்கத் தவறியுள்ளார்.அவர்களின் தவறுகளை உரிய முறையில் சுட்டிக் காட்டத் தயங்கியுள்ளார்.ஆனால் அவர் செய்யத் தயங்கிய விடயத்தை துணிச்சலுடன் மேற்கொண்டு வருகின்றவர்களுக்கு அரச ஆதரவு சக்திகள் என்று பட்டம் சூட்ட மட்டும் அவரால் முடிந்துள்ளது. அப்படியெனில் அவ்வாறான நிலைப்பாட்டைத் தொடக்கி வைத்த புலிகளை முதலில் விமர்சிக்க வேண்டாமா? அல்லது புலிகள் முதலில் மாற்றுக் கருத்தாளர்களை படுகொலை செய்வதை நிறுத்தச் சொல்லுங்கள். அதன் பின் ஜனநாயக தமிழ் அரசியல் வாதிகளும் யாருடனும் கூட்டுச் சேராமல் தனித்துவ அரசியல் செய்யத் தயங்க மாட்டார்கள். அதை விட்டு அரசாங்கத்தை ஆதரிக்காதே என்று உபதேசம் செய்வதில் பலனில்லை.அப்படி அரசாங்கத்துடன் சேராமல் தனது சமூகம் மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்த பெருந்தலைவர் அமிர்தலிங்கத்திற்கு என்ன நடந்தது? தமிழ் இளைஞர்கள் தானே என்ற நம்பிக்கையில் உள்ளே அழைத்து விருந்தோம்பிய நிலையில் அவரது வீட்டில் தேநீர் குடித்த கோப்பையின் ஈரம் ஆறுமுன்னே அந்தப் பெருந்தலைவரின் இரத்தத்தால் நிலத்தை நனைத்தவர்கள் புலிகள் என்பது யாருக்கும் அவ்வளவு இலகுவில் மறக்க முடியுமான விடயமல்ல.அரசாங்கத்தை ஆதரிக்கும் இன்றைய தமிழ்த் தலைவர்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கா விட்டால் ஒரு அரசியல்வாதியையும் புலிகள் உயிரோடு விட்டு வைத்திருக்க மாட்டார்கள். நிராயுதபாணிகளை கொன்றொழிக்கும் கோழைகளை தமிழ் மக்களின் ஆபத்பாந்தவர்களாகச் சித்தரிக்க முயலும் கருத்தியல்வாதிகள் இந்த விடயத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

    //“சிங்கள-பௌத்த பெறுமானங்களைப் பயங்கர வாதிகளிடமிருந்து பாதுகாப்பதே எமது கடமை” – //

    ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அப்படியானதொரு கருத்து இடம்பெற்றிருக்கவில்லை என்பதை என்னால் ஆணித்தரமாக கூறமுடியும். இல்லாத ஒரு விடயத்தை சொல்லாத ஒரு விடயத்தை இட்டுக்கட்டி எங்கள் வாதத்தை வலுப்படுத்த முனைவது எங்களது கருத்துக்களின் நம்பகத்தன்மையைச் சிதைத்துவிடும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

    Reply
  • thevan
    thevan

    hg!
    நேர்மையான அரசியல் எது என்பதை அவனவன் தீர்மானிக்கட்டும் யாரும் யாரையும் எந்தப் பக்கத்திலும் தள்ளிவிழுத்தப் போகவேண்டாம்.

    கிளிநொச்சிப் பற்றைக்க இருந்து போட்டுஒழிச்சு வந்து முதுகில குத்திப் போடுவாங்கள் எனற் பயம் சனத்துக்கு இருந்தது தான் இல்லையெண்டில்ல.

    சனமிப்ப துணிஞ்சிட்டுது. இந்த ஊட்டுக்கயே கிழக்கயும் வடக்கையுமெண்டு ஆறேழு(6-7) கர்த்தால் ஊர்வலங்கள் சனம் திரண்டு செய்து போட்டுது.

    இதில் இரண்டு ஊடகங்களும் ஒரு தனி மணிசனும் மட்டும் தான் புலியெதிர்ப்பில் கண்ணுக்குப் பட்டதா?

    ஒன்றை ஏற்பது எப்போ எதிர்ப்பது எப்போ எனத்தொpயாத தற்குறிகளல்ல அவர்கள்!! விரோதி/ துரோகி என்ற விசுக்கோத்துக் கதைகளுக்கு விண்ணாருமளவுக்கு குழந்தைத் தனம் போய்விட்டவர்கள்!

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    ….. சுந்தரத்தின் மரணத்தின் பின் புளொட் தப்பியோடி தலைமறைவானதென்றவரிகள் புளொட் போராளிகளை கொச்சைபடுத்தியுள்ளது.1986வரை புளொட் ஈரோஸ் ஈபீஆர்எல்எப்.. போன்ற இயக்கங்கள்தான் மக்களிடையே அதிக அரசியல் வேலைதிட்டத்தை முன்னெடுத்து பிரபல்யமாகவிருந்தன. மேற்குலகிற்கு ஒப்ப பட்டப்படிப்பு/ உயர்டிப்ளோமா போன்று அரசியல் பாசறைகளுக்கூடாக அரசியல் வகுப்புக்களும் மக்களிடையே செயற்பட்டு அனுபவமும் பெற்றனர். எங்களுர் வாலிபர்கள் புளொட்பாசறை என்று சொல்லி பலவருடங்கள் உருத்திரபுரம் 8ம் வாய்க்காலை அண்டியுள்ள பிரதேசத்தில் தங்கி அரசியல் படித்தது இன்னமும் என் ஞாபகத்திலிருக்கிறது. ஆனால் அவர்களின் பலவருட உழைப்பு/படிப்பு ஏன் ஏட்டு சுரக்காயானதென்பதை முழுமையாக தெரியாத நிலையில் கேள்வி கேட்டால் சுந்தரத்தின் மரணத்தின் பின் புளொட் தப்பியோடி தலைமறைவானதென்கிறீர்கள்.

    காந்தீயத்திற்கு ஒட்டுமொத்தமாக புளொட் உரிமை கோரமுடியாது.டொக்டர் இராஜசுந்தரம் போன்றோரின் வழிகாட்டலில் இயங்கிய தமிழ் அகதிகள் நலன் பேணிய சுயாதீன அமைப்பு காந்தீயம். அவர்களின் பண்ணைகளை தமது ஆரம்பகால தலைமறைவு வாழ்கை மற்றும் அரசியல் வேலைத்திட்டங்களிற்கு புளொட் பாவித்ததே தவிர அதொன்றும் புளொட் மட்டும் சொந்தம் கொண்டாடும் அமைப்பல்ல. இதெல்லாம் நான் செவி வழியாக அறிந்த செய்திகள். காந்தீயத்தின் ஆரம்ப செயற்பாட்டாளர்கள் தேசம்நெற் வாசகர் வட்டத்தில் இருப்பார்கள் தயவுசெய்து அப்பெரியவர்கள்தான் காந்தீயம்பற்றிய மேலதிக விபரங்களை பதிவிலிட வேண்டும்.

    விழ விழ எழுவதுதான் போராட்டம். விழுந்ததை சாட்டாக வைத்து களத்திலிருந்து விலகுவது தப்பி ஒட்டம். ஒரு சுந்தரத்தின் இழப்புடன் புளொட் வெகுஐனதளத்திலிருந்து விலகியதாக(?) நீங்கள் சொல்வதிலிருந்தே உமது போராட்ட குணம்சமற்ற மனநிலையை காட்டிவிட்டீர்.
    புலியை ஆரம்பித்திலேயே பிரித்தார் உமா. சீலன் செல்லக்கிளி பண்டிதர் என பிரபாகரன் சகாக்கள் ஆரம்பத்திலேயே மரணித்தபோதும் தாக்குபிடித்தனர் புலிகள். தனது திருமண ஆசைக்காக புலியில் உட்கட்சி ஐனநாயகமில்லையென பொய்குற்றசாட்ட சொல்லி விலகினர் இன்னொருவர்…. இப்படி எத்தனையோ சிக்கல்களிலிருந்து மீண்டதுதான் புலியமைப்பு. மக்களின் ஆதரவு தளமில்லாத புலிகளால் எப்படி 31 வருடங்கள் போராட்ட களத்தில் தாக்குபிடிக்கிறார்கள் என்று ஒரு தடவையாவது சிந்தித்து பாருங்கள்.

    Reply
  • hg
    hg

    Devan “சனமிப்ப துணிஞ்சிட்டுது. இந்த ஊட்டுக்கயே கிழக்கயும் வடக்கையுமெண்டு ஆறேழு(6-7) கர்த்தால் ஊர்வலங்கள் சனம் திரண்டு செய்து போட்டுது”
    devan! EPDP and Karuna party organize கர்த்தால் ஊர்வலங்கள் in jaffna and East. I am not a Tiger Supporter. You try to stemple me as a tiger. I never suport tiger. But u have Tiger Feber.
    Lolan and Devan; why dont u tell us open, u are a government/EPDP subpeoter. U do not need Marxist mask.
    “பாட்டாளி வர்க்க புரட்சி பற்றி பேசிய புரட்சியாளர்கள் எவரும் எங்கும் பேரினவாத ஒடுக்குமுறை அரசுகளின் ஆதரவாளர்களாக இருந்ததான சான்றுகள் எங்கும் இல்லை. லோகன் தயவு செய்து பாட்டாளி வர்க்க புரட்சியென்றெல்லாம் கதைத்து மாக்ச்சியத்தை கொச்சைப்படுத்தவேண்டாம்.”

    Reply
  • PRO-TAMIL
    PRO-TAMIL

    முகுந்தன் – உமா புலிகள் அமைப்பில் 77இல் சேர்ந்து 79 செப்ரம்பரில் வெளியேறிவிட்டார். வெளியேற்றப்பட்டார். இதில் பிரதான காரணமாக சுந்தரம் இருந்தவர். ஆனால் 1980 யூனில் புலிகளில் இதே சுந்தரம் இன்னும் 12 பேரை துணைக்கு அழைத்துக்கொண்டு புலிகளை உடைத்துக்கொண்டு போனார். தனிநபர் பயங்கரவாதம் கூடாது. கொள்ளையடிக்க கூடாது என்ற கோசத்தை வைத்து புலியிலிருந்து வெளியேறிய சுந்தரம் என்ற சிவசண்முகமூர்த்தி புலிகளில் இருந்து ஊர்மிளா பிரச்சனையை பெரிதாக்கி பிரபாகரனுக்கு கொள்ளி எடுத்து கொடுத்தவர் உமாவை சந்ததியார் மூலம் தொடர்பு கொண்டு புளோட்டை உருவாக்கினவர்கள்.புளோட் உருவாகும் வரை புதியபாதை பத்திரிகை மூலம் புலியை சீண்டிக்கொண்டு இருந்தவர். மட்டுமல்ல தனிநபர் பயங்கரவாதம் பேசிய சுந்தரம் தியாகராஜா கொலை, வட்டுக்கோட்டையில் கொள்ளையடித்தவர். புலிகளில் இருக்கும் போது ஏற்பட்ட தொடர்புகளை தமது புளோட் அமைப்புக்கு பயன்படுத்தமுற்பட்டவர். காந்தீயம்,ராஜசுந்தரம், டேவிட் ஜயா, பேபி, போன்றோரே முன்னோடிகள்.கென் டொலர் பாம் உருவாக்கத்திலும் இவர்களுக்கே பங்குண்டு. சுந்தரத்துக்கு புலிகள் அமைப்பில் இருக்கும் போதே இந்த தொடர்பும் ஏற்பட்டது.பின்னர் புளொட் உருவாகிய போது அதில் வேலை செய்த பலரை இணைக்க காந்தீயம் உதவியது. சுந்தரம் கொல்லப்பட்டபோது சுந்தரம் புலிப்படை என்ற பெயரிலேயே முகுந்தன் இரங்கற்பா றோனீயோ பிரதியாக வெளியிட்டார். இப்போது கருணா புலியைநீக்க சொல்வது மாதிரி சுந்தரமும் புலி சோழ சாம்ராஜ்யத்தின் ஏகாதிபத்திய சின்னம் அதனால் புலி என்ற சின்னத்தை நீக்க கோரியவர். பன்றியை சின்னமாக வைக்க சிபார்சு செய்தவர் சிவசண்முகமூர்த்தி. அதே சுந்தரத்துக்கு அஞ்சலியில் சுந்தரம் புலிப்படை தளபதியின் மரணம் என அப்பிரசுரத்தில் தலைப்பிடப்பட்டிருந்தது.

    Reply
  • Logan
    Logan

    அரசும்/ புலிகளும் மக்களெதிரிகள் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இருக்க நியாயமில்லை.இரண்டு எதிரிகளும் இணைந்து நின்ற சந்தர்ப்பமும் எமது இலங்கை வரலாறு சொல்லும். அப்பொழுது ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இருவகைப்பட்ட எதிரிகளை எதிர்க்கவேண்டிய தேவை!
    இது இன்று இலகுபடுத்தப்பட்டுள்ளது!

    எதிர்pகள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு சாகிறார்கள்(பிரபாகரனும்/மகிந்தாவு என்பதல்ல அவை வெறும் அடையாளங்கள்)இதன் போது ஏதாவது ஒன்றின் அழிவையோ வலுக் குறைப்பையோ ஊக்குவித்தே ஆகவேண்டும்.

    இது தப்பான போக்கு என்று கருதுபவர்கள் கருதிக்கொண்டிருக்கட்டும். இது பாட்டாளி மக்களது பார்வைக்கும் ஒன்றும் தவறான நடைமுறையல்ல.
    இந்த யுத்தத்தில் புலிகள்மட்டும் தோற்கவில்லை போpனவாதமும் தோற்கிறது.யுத்தத்தால் அடைந் வெற்றியை சிங்கள மக்கள் தொடர்ந்து சொண்டாடப் போவதில்லை தொண்டையை நெருடும் அளவுக்கு போரின் பொருளாதார இழப்புக்கள் அவர்களை நெருங்கிவிட்டது. இதற்காக எதிர்காலத்து ஆட்சிகள் இனவாதத்தை மட்டும் முட்டாயாகக் கொடுக்கமுடிலாத அளவுக்கு கணிசமான வளர்ச்சி தென்னிலங்கையிலும் ஏற்பட்டேயாகும். இது தான் என்னுடை நம்பிக்கையும் செயற்பாடும்

    எம்மை யாரும் மாக்ஸிட்டுக்கள் என்று முத்திரை குத்தத் தேவையேயில்லை!!!!!
    நாம் அதை வைத்தப் பிழைப்பு நடத்துபவர்களுமில்லை. சிவப்பு சேட்டுப் போட்டுக் காட்டித் திரியவேண்டிய தேவையுமில்லை. ஒருவனுடைய தொடர்ச்சியான பணிகளும் கருத்துமே அவனை என்ன “இஸ்டு” என்று இனம் காட்டும்.

    எதிரியின் பாசறைக்குள்ளும் எதிரிக்கெதிரான கருத்தோடும் மனவுறுதியோடும் செயற்பட்ட பல தலைவர்கள் போராளிகள் வரலாறுகள் உண்டு. இவர்கள் சில அவசரங்களால் குற்றஞ் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட வரலாற்றுப் பதிவுகள் உண்டு. எனவே இந்த அவசரங்கள் எமக்கொன்றும் புதிதுமல்ல அச்சப்படுத்துவதுமல்ல தொடருங்கள்!!!

    Reply
  • samaran
    samaran

    //அரசும்/ புலிகளும் மக்களெதிரிகள் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இருக்க நியாயமில்லை.இரண்டு எதிரிகளும் இணைந்து நின்ற சந்தர்ப்பமும் எமது இலங்கை வரலாறு சொல்லும். அப்பொழுது ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இருவகைப்பட்ட எதிரிகளை எதிர்க்கவேண்டிய தேவை!//
    -லோகன் ஆஹா என்னே ப்ல்டி என்னே பல்டி!!

    Reply
  • navam
    navam

    திரு.சபா.நாவலன் !

    உங்கள் கட்டுரையின் ஆழமும் அர்த்தமும் அளவிட முடியாதவை.நீங்கள் ஒரு பாசிசபுலி எதிர்ப்பாளராக இருந்தாலும் இன்றைைய யுத்த சூழலை சிங்கள பெளத்த பேரினவாத அரசு எப்படி தன் சூழ்ச்சிக்கும் -திட்டமிட்ட வேலைத்திட்டங்களுக்கும் பயன்படுத்துகின்றதென்பதை விலாவாரியாக விலாசித்தள்ளிவிட்டீர்கள்.உங்களைப்போன்றோர் எங்கு பாசிசம் நடந்தாலும்-எங்கு கொலை நடந்தாலும்-எங்கு ஆக்கிரமிப்பு நடந்தாலும் தட்டிக்கேட்கும் நிலையும்>அவற்றை அம்பலப்படுத்தும் துணிச்சலுடன் செயற்படுவது பாராட்டப்படக்கூடியதும்>இன்றைய காலகட்டத்தில் தேவையானதுமாகும்.

    ஆனால் சென்ற வாரம் பி.பி.சி வானொலியில் கிளிநொச்சி ஆக்கிரமிப்பு பற்றி அதன் செய்தியாளர் பலபேரை பேட்டிகண்டதில்>பலபேர் அங்குள்ள யதார்த்தத்தையும் அவலங்களையும் வெளிப்படுத்தியிருந்தாலும் புலம்பெயர் நாடொன்றில் வாழும் ஒருவர் சிங்கள ராணுவத்தின் வெற்றியானது தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றியாக -தமிழ் மக்களுக்காகவே இந்த மகிந்த அரசும் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களும் நடந்து கொள்வதாக மிக குதூகலத்துடன் மகிந்தாவின் வெற்றியை தனது வெற்றியாக கொண்டாடினார். இவரைபற்றி பின்பு தான் விசாரித்ததில்>இவர் ஒரு மாக்சியவாதியாகவும்>பாசிச எதிர்ப்பாளராகவும் தன்னை வெளிக்காட்டிக்கொள்பவரென அறிந்தேன்.உண்மையில் இவரைப் போன்றோர் பாசிசத்தை எதிர்ப்பதாயிருந்தால் அனைத்து பாசிசத்தையும் எதிர்கட்டும். அதைவிடுத்து புலியெதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு நீங்கள் சொன்ன மாதிரி அரசபயங்கரவாத்தையும் அதன் வெற்றியையும் அவர்களோடு சேர்ந்து இங்கிருந்து கொண்டாடுவது அங்குள்ள எம்மக்களுக்கு இவரைப் போன்றோர் செய்யும் துரோகமாகும். எனவே உங்களைப் போன்றோரின் கருத்துக்களைக் கேட்டாவது இவர்களைப் போன்றோர் சிந்திக்க வேண்டும்

    Reply
  • Kumaralinkam
    Kumaralinkam

    என்ன தான் போராட்டம் என்ற போதும் இலங்கையின் வர்த்தக மையம் கொழும்பாகத் தான் இன்னும் பேணப்படுகிறது. விவசாயிகளிகள் சந்தையில் முதல் ஆனைமடுவ இரண்டாவது கிளிநொச்சியாக அன்று பார்க்கப்பட்டது.

    இந்த சந்தையிலிருந்து வாரமிரு தடவை ஆயிரக்கணக்கில் வாழைக்குலை மரக்கறி வடபகுதியிலிருந்து மீன் கருவாடு விவசாய விளை பொருட்களான கிழங்கு வெண்காயம் இவையெல்லாம் கொழும்புக்குத் தான் போனதே தவிர அங்கிருந்து வரவில்லை.

    இதனால் நன்மை அடைந்த மக்கள் 25 ஆண்டுகளின் பின் அதே நன்மையடையப் போகிறார்கள் அது தமிழருக்குக் கிடைத்த நன்மையில்லையா?

    இடைவெளி கிடைத்தபோதெல்லாம் யார் தூண்டுதலுத் இல்லாமல் கொடுமையான அரச இராணுவத்தின் பகுதிக்குள் மக்கள் வருகிறார்களே? இதை வைத்து இதைவிடக் கொடுமை ஒன்றை அவர்கள் அநுபவித்துள்ளனர் என்பதைத் தவிர வேறு ஏதாவது முடிவுக்கு வரலாமா??????

    கிளிநொச்சி விடுவிக்கப்பட்டு ஏ9 பாதை திறந்தது தமிழருக்குத் தான் வெற்றி என்பதில் என்ன சந்தேகம் வேண்டிக் கிடக்கிறது?

    அதைவிட இது பிபிசி வானொலியும் அந்தப் பேட்டியாளரும் தொடர்பானது அதை நானும் கேட்டேன் நால்வாpல் யார் பெயரும் குறிப்பிடவில்லை. அவ்வளவு துல்லியமாக நீர் கண்டறிந்தால் அவரோடு பேசவேண்டியது தானே.

    Reply
  • anathi
    anathi

    தொண்டையை நெருடும் அளவுக்கு போரின் பொருளாதார இழப்புக்கள் அவர்களை நெருங்கிவிட்டது. இதற்காக எதிர்காலத்து ஆட்சிகள் இனவாதத்தை மட்டும் முட்டாயாகக் கொடுக்கமுடிலாத அளவுக்கு கணிசமான வளர்ச்சி தென்னிலங்கையிலும் ஏற்பட்டேயாகும்.”

    இதற்கு ஆரம்ப கட்டியம் கூறுவது சண்டே லீடர் பத்திரிகையாளனின் படு கொலையாகும்.மகிந்த அரசின் அடக்குமுறைகளை எதிர் கொள்ள சிங்கள மக்களும் தயாராக வேண்டிய காலம் வருகிறது.ஏனென்றால் புலி அழிந்த பின்னால் அடுத்து செய்வதற்கு அரசுக்கு என்ன இருக்கிறது?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நவம் புலி செத்துப்போயிற்று என்று ஒப்பாரி வைப்பதாய்யிருந்தால் வன்னிக்கு போய் மாரடிக்கவேண்டியது தானே! வன்னிமக்களுக்கு தலையிடிக்காவது புலிகள் மருந்து கொடுத்திருக்கிறார்களா? ஒருமூட்டை விதைநெல்லாவது கொடுப்பதற்கு உதவி செய்திருக்கிறார்களா? இருந்தகாலம் முழுவதும் வாங்கியது கப்பமும் கொடுத்தது தலையிடியும் தான். எனிமேல்காலத்திலாவது வன்னியில்லுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளை எண்ணி நின்மதி பெருமூச்சை விடட்டும். திருந்தவேண்டியது பேரினவாதிகள் அல்ல திருந்தவேண்டியது நாமே. எம்மைநாமே முதலில் திருத்திக் கொள்ள வேண்டும். பேரினவாதிகளைவிட பலமடங்கான துன்பங்களை புலிகளின் பெயரில் தமிழ்மக்களுக்கு கொடுத்துவிட்டோம். அதிலும் புலம்பெயர்தமிழ் மக்கள் தமது தாய்நாட்டுமக்களுக்கு சொல்லொண்னாத் துன்பத்தை கொடுத்துவிட்டார்கள். இனிமேலாவது சிந்தித்து செயலாற்றுங்கள். லோகநாதன் பாராட்டுக்குரியவரே. அவர் வழிநடக்க கற்றுக்கொள்ளுங்கள்.

    Reply