புலிகளிடம் பணம் வாங்கினேனா?- பாரதிராஜா ஆவேசம்


bharathiraja.jpgவிடு தலைப் புலிகளிடம் நாங்கள் பணம் வாங்கியதாக எந்த அரசியல்வாதியாவது நிரூபிக்க முடியுமா என சவால் விட்டுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. பாரதிராஜா தலைமையில் ராமேஸ்வரத்தில் இலங்கைத் தமிழர் ஆதரவுப் போராட்டம் தொடங்கிய பிறகு தமிழகத்தில் உணர்ச்சிமயமான பல காட்சிகள் அரங்கேறின. அதுவரை மௌனம் காத்தவர்கள் கூட பாரதிராஜாவுக்குப் பிறகுதான் வெளிப்படையாக இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கினர்.

ஆனால் இங்குள்ள சில அரசியல்வாதிகள், பாரதிராஜாவும் மற்றவர்களும் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் இப்படி ஆதரவாகப் போராட்டங்கள் நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டினர். இதனால் கொதித்துப் போன பாரதிராஜா, நான் பணம் வாங்கியதாக எந்த அரசியல் தலைவராவது நிரூபிக்க முடி்யுமா? இதை நான் ஒரு சவாலாகவே விடுகிறேன். முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள் பார்க்கலாம் என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

உங்கள் கருத்து
 1. Sarani on January 10, 2009 4:58 am

  கொழும்பில் நடந்த பல தாக்குதல்கள் பஸ் குண்டுவெடிப்பு இவைகளில் சிங்கள மக்களைக் கூடக் கூலிக்கமர்த்திய போது புலிகள் பற்றுச்சீட்டுப் பெற்றுக்கொண்டு பணம் கொடுத்தார்களா என்ன?
  அடுத்து தென்னிந்திய திரைத்துறை மிதக்கப் போவதே புலிகளின் பணவெள்ளத்தில் என்பதால் கூட அக்கறை நியாயமானது தானே?
  இதுவரை எத்தனை இடைஞ்சல்கள் இலங்கையில் சிறுபான்மைக்கு??
  இயற்கை அனர்த்தங்கள்???!
  எதற்கும் ஏற்படாத எழுச்சியும் அக்கறையும் திடீர் சீற்றத்தோடு புறப்பட்டால் சந்தேகமும் நியாயமானது தானே???


 2. palli on January 10, 2009 11:45 am

  சரனிக்கு பாரதிராஜா பதில் சொல்வாரா?? எம் ஈழத்து தமிழரை இனிய முகத்துடன் ஏமாற்றலாமா??


 3. thambi on January 10, 2009 3:23 pm

  Not only you in the past your dad too received the money form the LTTE in future your kids will do the same : you all behind the money not for the srilankan tamils – but thank you fot cheating us


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு