பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ‘Think 2 Wise’ சிறிதரன்


forgotten-people0

 Think 2 Wise அமைப்பின் நிறுவனர் சிறிதரன் அவ்வமைப்பின் கிழக்கு லண்டனில் நடைபெற்ற சலங்கை ஒலி நிகழ்வில் ஆற்றிய உரையின் தொகுப்பு இது. Think 2 Wise அமைப்பு வட மாகாணத்தில் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0

 

வாள் கண்டு சாயாததலையெங்கள்  -தலை

யாழ் கண்டு சாயும் சிவசங்கரா..

வேல்கண்டுசாயாத படையெங்கள் – படை

யாழ் கண்டு சாயும் சிவசங்கரா..

மேல் அந்து போனாலும் தோல் வெந்து போனாலும்

சூல்கொண்டு வருவோமே சிவசங்கரா..

நாள் வந்தபின்- அந்தநாள் வந்தபின்

யாழ் கொண்டு வருவோமே சிவசங்கரா..

தீ என்று சொன்னாலும் தீபங்கள் என்றாலும்

தீ என்பதொன்றுதான் சிவசங்கரா..

நான்என்றுசொன்னாலும்-நீ என்று சொன்னாலும்

நம் சக்தி ஒன்றுதான் சிவசங்கரா..

எல்லாம் வல்ல பெருமானின் திருவடிகளை போற்றி உங்கள் அனைவருக்கும் எனது தாழ்மையான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் நிகழ்சிகளை பார்ப்பதற்காக வந்துள்ளீர்கள். உங்களின் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை.எனினும் Think 2wiceAssociation அறக்கட்டளை சார்பில் இந்த நிகழ்ச்சியை நாங்கள் நடத்தி கொண்டிருபதினால் எமது அமைப்பு சார்பான சில நிலைபாடுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுளேன் .நாங்கள் யார் என்ன செய்தோம் , என்ன செய்கிறோம் போன்ற விடயங்களை நீங்கள் எமது இணையதளத்தில் அல்லது எமது முகநூல் வாயில்களாக அறிந்திருப்பீர்கள். பொதுவாக இப்ப மக்களுக்கு அமைப்புகள், கட்சிகள் மீது இருக்கிற நம்பிக்கை குறைந்து கொண்டு போகிறது.ஒருசிலர் விடுகிற தவறுகளினால் மக்கள் எலோரையும் சந்தேக கண்ணோடு பார்க்கிறார்கள். ஓடுற நரிகளில் ஒரு நரி குள்ளநரியாக இருக்கலாம்.

அதற்காக எல்லாமே குள்ளநரி என்ற முடிவுக்கு வர முடியாது. பால் போல கள்ளும்முண்டு நிறத்தாலே இரண்டும் ஒன்று. நாமென்ன கள்ளா பாலா   நீங்கள் தான் சொல்ல வேண்டும். குளத்தோடை கோவிச்சுக் கொண்டு செய்ய வேண்டிய அலுவல்களை தள்ளிப் போடேலாது. நாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டிய நேரத்தில் செய்யத்தான் வேண்டும். சரியானவர்களை இனம்கண்டு அவர்களோடு சேர்ந்து செய்ய வேண்டும்.எல்லாமே முடிஞ்சு போட்டுது என்று சொல்லிப் போட்டு சாய்மனை கதிரையில் இருந்து கொண்டு சரவணன் மீனாட்சி பார்க்க ஏலாது. ஏனென்று சொன்னால் அங்கே  அவர்கள் சிந்திய வேர்வை அவர்கள் சித்திய இரத்தம், அவர்கள் செய்த தியாகங்களை தான் நாங்கள் வெளிநாடுகளில் வசதிகளாக,வாய்ப்புகளாக அனுபவித்துக் கொண்டிருகிறோம் என்பது ஒரு தர்க்கரீதியான உண்மை. இது எல்லோருக்கும் பொருந்தா விடினும், பெரும்பாலானோருக்கு பொருந்தும் என நான் நம்புகிறன்.S o this is our pay back time. We have moral and social responsibility to help them.

எங்களுடைய அமைப்பை பொறுத்தவரை இங்கை காசு சேர்த்து அங்கை வன்னிமக்களுக்கு உதவுவதுதான் எங்கள் அமைப்பின் ஒரேயொரு குறிக்கோள் மட்டுமல. “ஈழத்தமிழர்” என்ற எமது சமூகம் சார்ந்த பல பிரச்சனைகள் குறைபாடுகள் அது எமது சொந்த நாட்டில் என்றாலும் சரி புலம்பெயர் நாடுகளில் என்றாலும் சரி- மீளாய்வு செய்யப்பட வேண்டிய, சிந்திக்கப்பட வேண்டிய , திருத்தபட வேண்டிய விடையங்களாக உள்ளன. அவற்றை எல்லாம் Think 2wice Association ஒரு தனியமைப்பாக நின்று சாதித்து விட முடியாது. இத்தகைய பிரச்சனைகள் தொடர்பாக நாங்கள் மற்றைய சமூக முற்போக்குள்ள சிவில் அமைப்புகளுடன் இனணந்து செயற்படஆயத்தமாக உள்ளோம்.

தாயகத்திலை இருக்கக் கூடியவர்களின் நலன் கருதி இங்கே இருக்ககூடிய அமைப்புகள் இதய சுத்தியோடு புரிந்துணர்வு அடிப்படையில் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் .அது சரட்டிகள் ஆக இருந்தாலும் சரி, சங்கங்கள் ஆக இருந்தாலும் சரி பள்ளிக்கூடங்கள ஆக இருந்தாலும் சரி, பழைய மாணவர் சங்கங்கள ஆக இருந்தாலும் சரி , கோவில்களாக இருந்தாலும் சரி, கிராமிய ஒன்றியங்கள் ஆக இருந்தாலும் சரிதங்களுக் கிடையில் ஒரு இணைப்பை ஏற்படுத்தி தன்னலம் அரட்ட ஒரு இயங்குவெளியை உருவாக்க வேண்டும். பட்டங்கள், பதவிகள், நீ பெரிது, நான் பெரிது என்ற அற்பத்தனமான அடவடிதங்க்களை விட்டு எமது சமூகம் என்ற அடிப்படையில் ஒரு விசாலமான வேலைத் திட்டத்தில் சங்கமிக்க வேண்டிய அவசியம் என்றும் இல்லாத வாறு இன்று தேவைபடுகிறது. Basically we need to have federation of Tamil civil societies. அது ஆக்கபூர்வமான முறையிலை மிகவும் அர்ப்பபணதுடன் செயற்படகூடியதாக இருத்தல் வேண்டும். இதற்கான முயற்சியில் சிலர் ஈடுபட்டு கொண்டிருபதாக அறிகிறோம்.அவர்களின் முயற்சிக்கு ஆதரவு கரம் கொடுக்க நாங்களும் தயாராகவுளோம்.

ஒரு சமூகத்தின் இருப்பு அதன் வளர்ச்சி பற்றி நாங்கள் பார்க்கும் போது, அந்த சமூகம் சார்பான அரசியல், பொருளாதாரம், சமயம், மொழி ,கலை கலாச்சாரம் போன்ற பல விடயங்களை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் எமது கடந்த காலங்களை நாங்கள் திரும்பி பார்ப்போமானால் பொருளாதரத்தில், கலை கலாச்சாரத்தில் சில குறிபிடத்தக்க முன்னோட்டத்தை அல்லது வளர்ச்சியை காணக்கூடியதாக உள்ளது. அனால் அரசியல் , மதம், மொழி சார்பான எத்தகைய வரவேற்க்கதக்க மற்றங்கள் எதனையும் எட்டப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

1948 இல் இருந்து எமது அரசியலை – அது மிதவாத அரசியல்ஆகட்டும், தீவிரவாத ஆயுதப் போரட்டம் ஆகட்டும் – நாம் மீள் ஆய்வு செய்வோமானால், நாங்கள் ஒரு ஆரோக்கியமற்ற அருவருக்கத்தக்க அரசியலைத்தான் நடத்திக் கொண்டு இருக்கிறோம் என்பது எனது கருத்து. எமது மக்களுக்கு சுபீட்சமான, சுதத்திரமான, ஒரு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்கக் கூடிய வகையில் எமது அரசியல் செயற்பாடுகள் அமைந்திருக்கவில்லை. மாறாக தங்களின் கட்சிகளயும், அமைப்புகளையும் பலபடுத்துவதாகவும் தங்களின் இருப்புகளை முன்னிலைபடுத்துவதாகவுமே எமது மக்களை, ஆயிரமாயிரம் வீரர்களை, உடன்பிறப்புககளை காவு கொடுத்திருக்கிறோம். முள்ளிவாயக்காளில் ஒரு மாபெரும் மனித அவலத்தை பேரழிவை எம் கண்முன் கண்டபின்னுமும் கூட நாங்கள் பழையபடியும் முருங்கை மரத்தில்ஏற முற்படுவது முட்டாள்தனமானது .

எமது கடந்தகால அரசியலை முற்றுமுழுதாக மீளாய்வு செய்து, உலகளாவிய சமகால அரசியல் மாறுதல்களை கருத்தில் எடுத்து எமது மக்களுக்கு நிரந்தரமானதும், நிம்மதியானதுமான தீர்வை பெற்றுக் கொடுக்க நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு முன்வரவேண்டும். ஈழத்மிழர்களில் கிடத்தட்ட  1/3 பகுதியினர் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுடய ஆக்கபூர்வமான பங்களிப்பு இல்லாமல் ஈழத்தில் இருக்ககூடிய 2/3 தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு சாத்தியப்பட மாட்டாது. அதே நேரத்தில் எங்களுடய ஆக்கபூர்வ்ம இல்லாத, விவேகமில்லாத, முட்டாள்தனமான அரசியல் செயற்பாடுகள் அங்கே இருக்ககூடிய எமது உறவுகளுக்கு ஏதிர்மறையான, பாதகமான விளைவுகளைத்தான் கொடுக்கும் என்பதனையும் கருத்தில் கொள்ளவேண்டும். மற்றவர்களை துரோகி என்று சொல்லிக்கொண்டு நாங்கள்து ரோகிகளாக மாறகூடாது. சிங்களவனை மோட்டுசிங்களவன் என்று சொல்லிக் கொண்டு நாங்கள் மோடர்ஆகக்கூடாது. சர்வதேசத்தின் கரிசனையில் இருக்கக்கூடிய சாதகபதாக விளைவுகளை மிகவும் மதிநுட்பத்துடன்அணுகவேண்டும். எமது இளைய தலைமுறையினருக்கும் தாயகத்திலை இருபவர்களுகுமிடையில் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் .பல பன்முகப்படுத்தப்பட்ட திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

யதார்த்த ரீதியாக எமது அரசியலை ஆய்வு செய்து நடைமுறை சாத்தியமான தீர்வை எட்ட துறைசார் வல்லுனர்கள் ஒன்றுகூடிஒரு THINK TAN Kஅமைப்பை உருவாக்க வேண்டும்.  இவர்கள் தாயகத்தில் இருக்கக்கூடிய சிவில், அரசியல் அமைப்புகளுடன் இணைந்து பயணிக்க வேண்டும்.வினைத்திறனும்அரசியல் விழிப்புணர்வும் கொண்ட இளைஞர்களை உள்வாங்கி புதிய மக்கள் மயபடுத்தப்ப்ட்ட வழிமுறைமைகள் கண்டறியப்படவேண்டும்

இத்தகைய முயற்சிக்கு அனைத்து அமைபினரும் சகல தரப்பினரும் முழுஒ த்துழைப்பு வழங்க வேண்டும். அந்த வகையில் Think 2wice Association தனது முழு ஆதரவையும் வழங்கும்.

அடுத்ததாக மதம். ஒரு ஏ ழையின் சிரிப்பில்தான் கடவுளைக் காண முடியும் என்று சொனார்கள். இது சரியா இல்லை தவறா என்று நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். இன்றைக்கு புலம்பெயர் தேசங்களில்எத்தனயோ கோவில்கள் இருகின்றன. அண்மையில் ஐரோப்பிய நாடொன்றில் தேர் வலம்வரும் போது வீதியை மறித்து 5000 சிதறு தேங்காய்கள் அடித்து சாதனை படைத்தார்கள் என்றுகேள்விப்பட்டேன். தாயகத்தில் எமது உறவுகள் இவ்வளவு கஷ்டப்படும் போது தனக்கு 5000 தேங்காய் அடிப்பதை எந்த கடவுளும் விரும்ப மாட்டார் என நான் நினைகிறேன்.  நான் யாரையும் புண்படுத்துவதற்க்காக சொல்லவில்லைமிகவும் வேதனையுடன் சொல்லுறன். வீழ்ந்து விட்ட இனம் என்ற வலியில் சொல்லுகிறேன்.

வேரோடு பிடுங்கப்பட்ட இனம் என்ற வேதனையில் சொல்லுகிறேன் பல ஆலயங்கள் அறப்பணிக்கு முக்கியத்துவம் கொடுகிறார்கள். வரவேற்க வேண்டிய விடையம். புலம்பெயர் தேசங்களில் உள்ள எல்லா கோவில்களும் அறப்பணிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் ஈழத்தில் எவரும் ஏழைகள் இல்லை. எவரும் அனாதைகள் இல்லை.எங்கள் இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் எமது மண்ணில் அனாதைகளாக ,அபலைகளாக, ஆதரவு அற்றவர்களாக அலைகிறார்கள். உதட்டில் புன்னகை புதைத்து, உயிரை உடலுக்குள் புதைத்து வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகிறார்கள்.இவர்களுக்கு நேசக்கரம் கொடுக்க வேண்டியது எங்களின் கடமை.

இது இன்றைக்கு நேற்று உள்ள பிரச்சினை இல்லை. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே அடங்கன் சித்தர் அழகாக குறிப்பிட்டுள்ளார்.

தாய்மொழி பேணார் நாட்டினை நினையார்

தம்கிளை நண்பருக்கிரங்கார்

தூய்நல்அன்பால் உயிர்க்கெலாம் நெகிழார்

துடிப்புறும் ஏழையர்க்கருளார்

போய்மலைஏறிவெறுங் கருங்கற்கே

பொன்முடி முத்தணி புனைவார்

ஏய்ந்தபுன்மடமை இதுகொலோ சமயம்?

ஏழையர்க்கிரங்குமென்நெஞ்சே?

நீங்களே என்ன செய்ய வேண்டும் என்பதை தயவு செய்து Think 2Wice பண்ணிப் பாருங்கள்.

அடுத்தபிரச்சனைமொழி.  ஒரு இனத்தின் இருப்பு அதன் மொழியின் வளர்ச்சியில்தான் பெரிதும் தங்கியிருகிறது.இன்றைக்கு இருக்ககூடிய சூழ்நிலையில் நான் முன்பு கூறிய மாதிரிசுமார் 2/3 பங்கு மக்கள்தான்எமது தாயகத்தில் இருக்கிறார்கள். அங்குள்ள கணிப்புகளின்படி தற்போதைய தமிழர்களின் கருவள விகிதம் மற்ற இனங்களை விடகுறைவாக உள்ளது. மற்றும் திட்டமிட்ட முறையில் நடத்தபடுகின்ற குடி எங்கள் , கலா ச்சார சீரழிவுகள் போன்றன எமது மொழியின் இருப்புக்கு பெரும் சவாலாக உள்ளன.

புலம்பெயர் தேசங்களில் வாழக்கூடிய எமது குழந்தைகளில் மிகவும் குறைந்த அளவு பிள்ளைகள்தான் தமிழை கற்றுக் கொள்கிறாக்கள். உண்மயில் பிள்ளைகள் ஆர்வம்காட்டவில்லை என்று சொல்வதைவிட பெறோர் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் மிகவும் வேதனையான விடயம். ஒருசிலர் கேட்கிறார்கள் தமிழை படிக்கிறதிலை எங்களுக்கு Futur eஎன்ன பிரயோசனம் என்று.  நான் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன் தமிழ் வந்து எங்கட மொழி மட்டுமில்லை. அதுதான் எங்கடIdentity .நாங்கள் எங்கட தாய்மொழியை மாத்தினாலும் எங்கடதோல் நிறத்தை மாத்த முடியாது. புலம்பெயர் வாழ்கை என்பது வாடகை வீட்டில் இருக்கிற மாதிரித்தான். Idiyamin சொன்னான் ” Africa for Africans. Kick them out all bloody Asians”

அதை மாதிரி statement நாங்கள் இருக்கிற நாடுகளில்லை வரமாட்டது என்பதற்கு ஏந்த உத்தரவாதமும் இல்லை. நாங்கள் எங்கு வாழ்ந்தாலும், என்ன பாஸ்போர்ட் வைத்திருந்தாலும், நாங்கள் ஈழத்தமிழர் என்பதில் மாற்றமும் இல்லை. .இதை பிள்ளையளுக்கு புரியவைப்பது பெற்றோரின் கடமை.

எனக்கு தெரியும். இங்கை தமிழ் படிப்பிகின்ற ஆசிரியர்கள் கனபேர் வந்து இருக்கிறார்கள். உண்மையில் உங்கட  சேவையை போற்றத்தான் வேண்டும். இந்த நாடுகளில் எமது குழந்தைகள் வளர்கிற சூழலில் அவர்களுக்கு தமிழ் படிப்பிப்பது மிகவும் கடினமான காரியம். நான் உங்களிடம் கேட்கிறேன் தமிழை ஒருமொழியாக மட்டும் இலாது ஒருஅமுதாக ஊடிவிடுகள் – உயிரோடு ஒட்டிவிடுங்கள். ஏனென்றால் தமிழோடு நாங்கள் கொண்ட உறவுஅவ்வளவு புனிதமானது. “விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவு”

 

தமிழை,தமிழ் கலைகளை கற்பிக்கின்ற போது மாணவர்களுக்கு “ஒழுக்காற்று”கல்வியையும் சேர்த்து கற்பிப்பது மிகவும் அவசியம் ஆகவுள்ளது. நாங்கள் தமிழை சொல்லிக் கொடுகிறோமோ, சமஸ்கிரதத்தை சொல்லிக்கொடுகிறோமோ என்பது முக்கியமில்லை. நல்ல பிரசைகளை- GOOD CITIZENS உருவாக்கிறோமா என்பதுதான் முக்கியம்.  MAHADMA GANDHI SAID “KNOWLEDGE WITHOUT CHARACTER IS ONE OF THE SOCIAL SINS. படித்திருந்தும் அவனுக்கு மனிதனுக்கு இருக்க வேண்டிய பண்புகள் இல்லவிட்டால் ஒரு பிரயோசனமும் இல்லை.CHARACTER BUILDING  MUST BE PART OF THE  EDUCATION.

எங்களின் சமூகத்தில் எத்தனையோ புத்திஜீவிகள், ஆற்றல் மிக்கவர்கள், ஆளுமை படைத்தவர்கள் உள்ளார்கள். ஆனால் அதில் பலர் தங்களை சமூகசேவையில் ஈடுபடுத்திக்கொள்ள தயங்குகிறார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஒரு காலகட்டத்தில் அவர்களுக்குரிய சுயாதீன இயங்குவெளி மறுக்கப்பட்டுஅல்லது மட்டுப்படுததப்பட்டிருந்தது. இன்றைக்கு சூழ்நிலை மாறியுள்ளது. இன்றைய நிலையில் அவர்களின் தேவை, சேவை எமது சமூகத்துக்கு அவசியமாக உள்ளது. “KNOWING IS NOT ENOUGH; YOU MUST APPLY. BEING WILLING IS NOT ENOUGH; YOU MUST DO! .எமது மக்களின் விடிவை நோக்கிய இந்த புனித பணியில் எல்லோரும் இணைந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

இறுதியாக எமது இனத்தையும் , எமது மொழியையும் முன்னிலை படுத்தி வாழக்கூடிய எமது உறவுகளின் வாழ்வியல் மேம்பாட்டுக்காக Think 2wice Association அமைப்பு தொடர்ந்தும் நேசக்கரம் நீட்டும். மொழியாகி, எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழின் மேல் இது உறுதி.

மிகவும் இக்கட்டான காலப்பகுதியில், இழப்புகள், துன்பங்கள்,  துயரங்கள், வலிகள் எல்லாவறையும் தாண்டி புதியதோர் உலகத்தை படைத்திட நினைப்பவன் தான் உண்மையான சமூகசெயற்பாட்டாளன். எமது அமைப்பும் மாற்றங்களோடு கூடிய புதிய அத்தியாயத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.உங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் எமது பயணம் தொடரும்..

ஆயிரம் கைகள் கொண்டு யார் மறைத்தாலும்ஆதவன் மறைவதில்லை.ஆணைகள் இட்டு யார் தடுத்தாலும்அலைகடல் ஓய்வதில்லை.

அதுபோல் எத்தகைய இடையூறுகள் வந்தாலும் எமது பணி தொடரும் எனக்கூறி உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன்.

நன்றிவணக்கம்.

A.R.SRITHARAN (MAVADY SRI)

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு