நஞ்சுண்டகாடு: ஒரு போரிலக்கிய நாவலின் மீள் உயிர்ப்பு -என்.செல்வராஜா (நூலகவியலாளர், லண்டன்)


01.A aenaiஏணைப்பிறை என்ற பெயரில் வன்னியில் 2004-2006 காலப்பகுதியில் கையெழுத்துப் பிரதியாக உலவிய ஒரு நாவல், விரிந்த வாசகர் பரப்பினை நோக்கி பத்தாண்டுகளின் பின் நஞ்சுண்டகாடு என்ற பெயரில் மீளவும் உயிர்பெற்றுள்ளது.

2009க்கு முன்னர் வன்னி மண்ணில் பிரசவித்த பல இலக்கியங்கள்; வெளியுலகம் காணாமலேயே மறைந்துவிட்ட அவலம் வரலாற்றில் என்றென்றும் ஒரு வடுவாகவே இருக்கப்போகும் ஒரு சோக நிகழ்வாகும். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தணிக்கைக்குள்ளானவை உள்ளிட்ட ஈழத்தமிழரின் பல இலக்கியப் படைப்புக்கள் வன்னி மண்ணில் தோன்றி அங்கேயே மௌனிக்கப்பட்டு புதைக்கப்பட்டு விட்டன. இதற்கு இனவாதத்தையோ, சிங்கள அரசையோ குறைசொல்லிக்கொண்டிருக்க முடியாது. படைப்பாளிகளும், பதிப்பாளர்களும் தான் இவ்விழப்பிற்கு முக்கிய காரணிகளாகின்றனர்.

தங்கள் படைப்பை வெளியுலகம் அறியவிடாது தமக்குள்ளேயே பதுக்கிவைத்துக்கொண்டிருக்கும் படைப்பாளிகளை நாம் அன்றாடம் காண்கின்றோம். சொந்தப் படைப்பிலேயே தன்னிடம் ஒரு பிரதிதன்னும் பார்வைக்கு வைத்திருக்காத பொறுப்பற்ற எழுத்தாளர்களையும் இன்று நாம் சந்தித்து வருகின்றோம். எமது படைப்பை நாம் பரந்த வாசகர் உலகிற்கு எடுத்துச்செல்ல கடுகளவும் முனையாது, யாரோ ஒரு “தேவன்” வந்து அதனைத் தனது முயற்சியில் செய்துமுடிக்கட்டும் என்ற அக்கறையின்மையே இதற்கெல்லாம் காரணம். தென்னிலங்கையை விட்டுவிடுங்கள். வன்னிப் படைப்புக்களை தமிழர் தாயகமெனக் கருதும் வடபுலத்திலோ, கிழக்கிலங்கையிலோ, எங்காவது ஒரு நூலகம் இன்றளவில் முழுமையாகப் பேணிப்பாதுகாத்திருக்கின்றதா? இல்லை என்பது வெள்ளிடைமலை!

பாரிசில் வாழ்ந்து,  அண்மையில் மறைந்த  கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் முயற்சியில் மறக்கப்பட்டதொரு வன்னி நாவல் இன்று விரிவான வாசகர் பரப்பிற்குக் கிட்டியுள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்நூலின் ஆசிரியர் இன்று புகலிடத்தில் வாழ்வதால் இந்நாவல் மீள் உயிர்ப்பிற்கு வழிகண்டிருக்கிறது. எதிர்காலத்தில் துரிதமாக மறக்கப்பட்டுவரும் வன்னியின் போர்க்கால இலக்கியங்கள் சில ஒருவேளை மீளுயிர்ப்பினைக் காணலாம் என்ற நம்பிக்கையின் ஒளிக்கீற்றை கி.பி.அரவிந்தனின் அப்பால் தமிழ் பதிப்பகம் காட்டியுள்ளது. இதற்காக தமிழ்கூறும் நல்லுலகம் முதலில் அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

நஞ்சுண்ட காடு நாவலுக்கும் ஒரு வரலாறு உண்டு. அதுபற்றி இந்நூலுக்கான முன்னுரை எழுதியுள்ள வே.பாலகுமாரன் அவர்கள் விரிவாக எடுத்துரைக்கின்றார்.

1950களில் மார்க்சியச் சித்தாந்த அடிப்படையில் அமைந்த புதிய சமூக முறைமையினை இலங்கை முழுவதும் உருவாக்கலாம் என்ற புதிய பாய்ச்சலை நிகழ்த்த முற்பட்ட முற்போக்கு இலக்கிய இயக்கம் பெரும் பின்னடைவைக் கண்டது. இலங்கைத் தேசியத்தின் வீழ்ச்சியாகவும், தமிழ்த் தேசியத்தின் எழுச்சியாகவும் இது பார்க்கப்படுகின்றது என்கிறார் பாலகுமாரன். 1960களில் இந்நிலைமைகளைத் தம் பட்டறிவால் உணர்ந்துகொண்ட சில முன்னோடிப் படைப்பாளிகள், இன்றைய போரிலக்கியத்திற்கான முன்னோடிகளாகத் தம் பெயரை வரலாற்றில் பதிவுசெய்திருக்கிறார்கள்.

50களின் பிற்பகுதிகளிலே புதிய நிலைப்பாடொன்றை முன்வைத்த மு.தளையசிங்கம் ஒரு தனிவீடு என்ற நாவலை உருவாக்கினார். எல்லாம் அரசியல், எதிலும் அரசியல் என்றுவிட்டு இக்காலத்தில் மனிதன் ஒதுங்கியிருக்க முடியாது என்ற கட்டாயத்தில் அரசியலும் இக்கதையில் நிறையவே இடம்பெற்றுள்ளது. ஒரு தனிவீடு, என்ற அபிலாஷை நிறைவேறியவுடன் அதனை சாசுவதம் ஆக்கிக்கொள்ள ஒரு தனிநாடு என்ற இலட்சியமும் கதாநாயகனுக்கு ஏற்படுகிறது. தனித் தமிழ் ஈழ இயக்கங்களின் தொடக்கக் காலத்தில் அதற்கான அவசியம் ஏற்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளை மிகத் தெளிவாகச் சொல்கிறது ஒரு தனிவீடு என்ற கதை.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் ஆரம்பகாலக் கவிதைகளின் தொகுப்பாக தமிழன் கனவு1968இல் வெளிவந்தது. தமிழரின் உரிமைப் போராட்டமும் அவர்தம் அங்கலாய்ப்புகளும் தமிழன் கனவுக்குப் பொருளாய் அமைந்தன. படைநடத்தியாவது தனக்கென ஒரு தனிநாடு காணும் உரிமை வேட்கை கொழுந்துவிட்டெரியும்வண்ணம் மிகப் பக்குவமாக அறுபதுகளிலேயே மூட்டப்பட்ட கனற்பிழம்பாகக் காட்சி தருகின்றன காசி ஆனந்தனின் கவிதைகள்.

வெளியார் வருகை என்ற நெடுங்கவிதையைசண்முகம் சிவலிங்கம் அக்காலகட்டத்தில் எழுதியிருந்தார். சண்முகம் சிவலிங்கத்தின் நெடுங்கவிதையும் அக்கால தனிநாட்டு அரசியல் வேட்கைக்கான ஆரம்பப் புள்ளிகளாக அமைந்தவையே.

இவர்களைத் தொடர்ந்து, பிரான்சிஸ் சேவியர், தி.ச.வரதராஜன் என்ற வரதர், அ.செ.முருகானந்தன், வ.அ.இராசரத்தினம் கவிஞர் முருகையன், சு.வில்வரத்தினம், உ.சேரன்,வ.ஐ.ச.ஜெயபாலன், கே.ஆர்.டேவிட், சாந்தன், சோ.பத்மநாதன், புதுவை இரத்தினதுரை, அ.யேசுராசா, எம்.ஏ.நுஃமான் எனத் தொடரும் நீண்டதொரு வரிசையில் ஆரோக்கியமான தடத்தில் கவிதை, புனைகதைத் துறையில் படைப்புக்களை வழங்கிய ஈழத்துப் படைப்பிலக்கியவாதிகளின் போரிலக்கியப்படைப்பாக்கம் பின்னாளில் தொடர்ந்தது.

இவ்வாறாக 70களின் பின்னான புதிய எழுச்சிகண்ட போரிலக்கியம் 1983 ஜுலைஇனவழிப்பின் பின்னர் மிகத்தெளிவான தீவிரமான பாதையில் பயணிக்கத் தொடங்கியது. இக்கட்டத்தில் போராளிகளும் படைப்பிலக்கித்துறையில் தமது பாதங்களைப் பதிக்கத் தொடங்கினர். தமது அனுபவங்களைக் கதைகளாக, கவிதைகளாகத் தாமே எழுதினார்கள். பாரம்பரிய இலக்கிய வரம்புகள் மீறப்பட்டன. இருப்பினும் பயிற்சிப் பாசறைகள், போர்க்களங்கள் என்பன படைப்பிலக்கியத்தின் புதிய இலக்கியத்தளங்களாகியமையால், மரபுமீறல்கள் பற்றி படைப்பாளிகளோ, வாசகர்களோ அலட்டிக்கொள்ளவில்லை. புத்துணர்வுடன் கள நிலைமைகள் கதைகளாகின. ஈழத்தவரின் போரிலக்கியம் புதுவடிவம் பெற்றது.

அக்காலகட்டத்தில் பெரிதும் போற்றப்பட்ட ஒரு கதை ரஞ்சகுமாரின் கோசலை என்ற சிறுகதையாகும். இன்று ரஞ்சகுமார் ஈழத்து இலக்கியத்தளத்தில் அமைதியாகிவிட்டாலும், உலக இலக்கியங்களுள் வைத்துப் பார்க்கப்படவேண்டிய தரத்தைக் கொண்டதென பலராலும் பாராட்டப்பெற்ற வண்ணம் இன்றும் கோசலை – என்ற அவரதுசிறுகதை வாழ்கின்றது.

வே.பாலகுமார் தனது முன்னுரையில் ஓரிடத்தில் கூறுகிறார் “வழிகாட்ட, துணைநிற்க, எவருமற்றும் எதுவித ஆயுத்தமுமற்றும் கையில் எதுவுமற்ற நிலையிலும் தமிழீழத்தாயின் புதல்வர்கள் போருக்குக் கிளம்பினர். எவருமற்ற வெளிகளிலே அலைந்தனர். அருகில் அணைந்து படுத்துக்கிடந்த பிள்ளைகளைக் காணாமல் தாய்மார்கள் நடுநிசியில் ஓவென அலறினர். வயிற்றிலே நெருப்பைக் கட்டியதுபோல் பதறினர். இவ்வாறாகத்தான் ஈழவிடுதலைப் போராட்டம் ஆரம்பித்தது”.

நான் இங்கு வே.பாலகுமாரனின் கூற்றாகக் குறிப்பிட்ட இந்த வரலாற்றுப் பதிவை ரஞ்சகுமார் என்ற அப்படைப்பாளி கோசலையில் அழகாகப்  பதிவுசெய்கின்றார். மோக வாசல் என்ற அவரது சிறுகதைத் தொகுப்புநூலில் கோசலை கதையும் இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தாயினதும் அவளது புதல்வர்களினதும் விசும்பல், அலைதல், படுகாயமுற்று அவயவம் இழந்து குற்றுயிராதல், மண்டையோடுகள் சிதறிக் கிடத்தல், பயிற்சிக்காகக் கண்காணாததேசம் போதல்,பிரிவுத்துயர், அலைந்துழலல்,அவர்களிடையே வளர்ந்து வந்த போராட்ட ஓர்மம் என்பன கோசலையின் வரிகளில் தெளிவாகக் காணமுடிந்தது.

இவ்வாறு அன்னையின் மடியில் இதமான சூட்டில் இருந்து விலகியவர்கள் என்னவானார்கள்? எங்கே போனார்கள்? என்ன செய்தார்கள்?என்ன எண்ணினார்கள்? எவ்வாறு கொடிய தனிமை நிரம்பியகானக வாழ்வுக்குத் தம்மைப் பழக்கப்படுத்திக்கொண்டார்கள்? எவ்வாறு முன் கண்டறியாத சக போராளிகளை, சமூகத்தின் வெவ்வெறு தளங்களிலும் இருந்து விடுபட்டு வந்து சேர்ந்துகொண்ட முன்பின் அறியாத இளைஞர்களைத் தம் உயிர்த்தோழர்களாக்கிக் கொண்டார்கள்? அவர்களது பயிற்சிமுகாம் வாழ்வில் பட்ட கஷ்டங்களை எவ்வாறு தாங்கி ஏற்றுக்கொண்டார்கள்? தீவிர பயிற்சிகளுக்கும் தண்டனைகளுக்கும் எவ்வாறு முகம்கொடுத்தார்கள் என்பன போன்ற கேள்விகளுக்கு ஏணைப்பிறை என்ற நஞ்சுண்டகாடு மிக விரிவாகப் பதில் சொல்கின்றது. வெறும் பயிற்சிமுகாம் வாழ்க்கை மாத்திரமல்ல, அதற்காகத் தாம் கைவிட்டுவந்த கிராமத்து வாழ்க்கையும் உடன்பிறந்தாரும் அவர்கள் பற்றிய நினைவுகளும் இந்நாவலில் முக்கிய இடம்பெறுகின்றன.

பயிற்சி முகாம் இருந்த ஏகாந்தமான நஞ்சுண்டான் காட்டின் நடுவே ஒரு பக்கமாக இருந்து மரத்தடிகளால் செய்யப்பட்ட இருக்கையான வரிச்சுத் தடியில் அமர்ந்திருந்து சுகுமாரும் கதைசொல்லியும் கதைப்பவை மிக ஆழமான மனவிசாரங்களைக் கொண்டவை. கதையில் ஓரிடத்தில் ஒரு உரையாடல் வருகின்றது. அது சுகுமாரின் வாய்வழி வரும் வார்த்தைகள் “இங்கிருந்து பார்க்கும்போது வானத்தில் நிலா குழந்தையின் ஏணையைப் போலத் தெரிகின்றது. எல்லோரையும்தாலாட்ட வானம் ஏணைகட்டி வைத்திருக்கின்றது. வானத்தில் நிலவு ஏணைபோலத் தெரியுது, இதில் ஏறிப் படுத்துத் தூங்க எத்தனை பேருக்குத் தெரியும்?”என்று வினா எழுப்புகின்றான். இதுவே கதையின் மூலத் தலைப்பான ஏணைப்பிறை என்ற பதத்தைத் தெரிவுசெய்யக் காரணமாகியுள்ளது.

கதாசிரியர் குணா கவியழகன் இந்நாவலை எழுதிய மிக இளைய வயதிலேயே முதிர்ச்சியான அறிவையும், மனதையும் பெற்றிருக்கிறார் என்பதை கதையில் இழையோடும் சம்பாஷணைகளிலிருந்து அனுமானிக்கமுடிகின்றது. பிறரது அனுபவங்களை, அவர்களது குணவியல்புகளை, நடையுடை பாவனைகளை நன்கு பகுத்தாய்வு செய்யும் ஒரு விவேகியாக பயிற்சிமுகாமில் இருந்த போராளிகளை, பயிற்சி முகாமை வழிநடத்திய பொறுப்பாளர்களை, பயிற்சியாளர்களை வருணிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் மெல்லிய நகைப்புடன் அவர் விபரிக்கும் பாங்கு மிக நேர்த்தியாக இருக்கின்றது. அதேவேளை எத்தகைய பல்வேறுபட்ட பின் புலங்களிலிருந்து போராளிகள்வரகின்றனர் என்கின்ற உப கதையையும் உரையாடல்களினிடையே வெளிவரச் செய்து விடுகின்றார்.

நஞ்சுண்டகாடு நாவல் முழுவதும் ஒருவகையான நெருஞ்சி முள்வலி பரவிக்கிடக்கக் காணப்படுகின்றது. போராளிகளின் வாழ்வின் இருண்ட பக்கங்கள், வறுமை, இல்லாமை என்கின்ற பெரும் துயர், இதற்குள் எப்படியாவது வாழ்ந்துவிடத் துடிக்கும் ஆசை என்பன மனதை நெருடுகின்றன. தமக்கையின் சின்னச் சின்ன ஆசைகளைக் கூட நிறைவேற்றுவதற்காக- கதாநாயகனான சுகுமார் எவ்வளவு கடினமாக உழைக்கவேண்டி ஏற்படுகின்றது என்பதை வாசிக்கும் போது அங்கே சத்தியவார்த்தைகளே வாசகருக்குத் தெரிகின்றன. போலித்தனமும், பாசாங்கும், கற்பனையும் நாவலில் எவ்விடத்திலும் துருத்திக் கொண்டிருக்கவில்லை. அனைத்தும் வெகு யதார்த்தமாக பதிவுகளின் தொகுப்பாகின்றன. மானிடத்தின் தேடலின் ஒரு பகுதிதான் நஞ்சுண்டகாடு என்றால் மிகையாகாது.

144 பக்கம் கொண்ட நஞ்சுண்டகாடு நாவலின் முதல்116 பக்கங்களும் இரண்டு அத்தியாயங்களில், இளைஞர்கள் பயிற்சி முகாமக்குள் நுழைவது முதல்,போராளிகளாகச் செதுக்கப்பட்டு வெளியேறுவது வரையில் விரிந்து செல்கின்றது. கதாசிரியர் அங்கு சக போராளியாகத் தன்னை இனம்காட்டிக்கொண்டு கதைசொல்லியாகவும் இருக்கிறார்.

நாவலின் 3ம் அத்தியாயம், 117ஆம் பக்கத்தில் தொடங்குகின்றது. இது ஒன்றரை ஆண்டு இடைவெளிகளின் பின்னர் தொடரும் சம்பவங்களின் சமகாலக் கோவைகளாகின்றன.குணா கவியழகன் குறிப்பிடாவிட்டாலும்கூட நாவலில் இரண்டாம் பாகமாக இதனைக் கொள்ளலாம்.

இப்போது கதைசொல்லி நஞ்சுண்டகாட்டுப் பகுதியின் பயிற்சி முகாமில் இல்லை. அவர்கள் அங்கிருந்து வெளியேறி ஒன்றரையாண்டுப் பணியின் இடைவெளியில் தனது கதையைத் தொடர முனைகிறார். பயிற்சி முகாம் தோழன் சுகுமாரின் தொடர்பு மீண்டும் சடுதியாகக் கிட்டுகின்றது. அவன் இப்போது கரும்புலியாகி தன் பணியைமுடிக்கப் புறப்படத் தயாராகின்றான். தான் இயக்கத்துக்காக விட்டு வந்த சகோதரியையும் குடும்பத்தையும் நேரில் பார்த்து அவர்களது நலனைக் கண்டறிந்து உதவும் பெரும் பொறுப்பை இப்போது கதைசொல்லி மானசீகமாக ஏற்கின்றார். தேடிப்பிடித்து சுகுமாரின் வீட்டை அடையாளம் காண்கிறார். அங்கு சுகுமாரின் அன்புச் சகோதரி, உறவகளை இழந்து வறுமையின் பிடிக்குள் சிக்குண்டு, நாதியற்றுக் கிடப்பதையும், சுகுமாரின் பெற்றோர் சகோதரர் அனைவரும் காலத்தின் கோரத்தால் படிப்படியாக உயிரிழந்து போனதையும், சுகுமாரின் அன்புக்குரிய சகோதரி மாத்திரம் கதியற்று நிற்பதனையும் கண்டு நெஞ்சம் குமுறுகிறார்.

அதுவரை இறந்த காலத்தில் பேசப்பட்டுவந்த சுகுமாரின் அக்கா நிகழ்காலத்தில் இவ்வத்தியாயத்திலிருந்து காட்சிப்படுத்தப்படுகிறார். அவர் தன் குடும்பக் கதையை, முன்னர் சுகுமார் விட்ட இடத்திலிருந்து கதைசொல்லியிடம் முறையிடத் தொடங்குகின்றார்.

இறுதியில் தலைவருக்கு நிலைமையை இரண்ட பக்கத்தில் விளக்கிக் கடிதமொன்றை எழுதிச் சேர்ப்பிப்பதுடன் கதை நிறைவடைகின்றது. இக்கதை எழுதப்பட்டது 2004இல் நோர்வே அரசினால் முன்னெடுக்கப்பட்ட சமாதான காலத்திலாகும். பல்வேறு தடைகளையும், சிக்கல்களையும் தாண்டி 2014இல் தான் நூலுருவில் வெளிவந்துள்ளது. 2004இல் எழுதப்பட்ட இக்கதையின் இறுதிப்பகுதி, பத்தாண்டுகளின் பின்பான இன்றைய முன்னாள் போராளிகளின் குடும்பத்தினரின் முகாம் வாழ்க்கையையும், பின்னதான வன்னியின் அவலம் மிகுந்த கூடார வாழ்க்கையையும் எதிர்வுகூர்வதாக அமைந்திருப்பது நாவலாசிரியரின் தீர்க்கதரிசனமாக இருந்திருக்க வாய்ப்பில்லாத போதிலும் வாசகன் என்ற பார்வையில் இப்படைப்பிலக்கியம் உயிர்ப்புள்ளதொரு நாவலாகவே எம் கண்களை பனிக்கச் செய்கின்றது.

இன்று 2014இல் இக்கதை காலம் தாழ்த்தி வெளிவந்திருந்தாலும், அதில் சொல்லப்பட்ட செய்தி காலத்தால் அழியாத வரலாறு என்பதை எவரும் மறுக்கமுடியாது. போர்க்கால இலக்கியவகையறாக்களுக்குள் முக்கியமானதொரு படைப்பாக நஞ்சுண்டகாடு நிச்சயம் நின்று நிலவும். ரஞ்சகுமாரின் கோசலை போன்று இந்நாவலும் போரிலக்கியம், போர்க்கால இலக்கியம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வோர், தேடித்திரிந்து பெற்று வாசிக்கமுனையும் ஒரு நாவலாக அமையும் என்பது எனது கருத்தாகும்.

ஈழ விடுதலைப் போராளிகளால் எழுதப்பட்ட போர் இலக்கியம் என்று பார்த்தோமானால்,லங்காராணி என்ற பெயரில் அருளர் என்ற போராளி (பின்னாளில் ஈரோஸ் அமைப்பில் இணைந்து இயங்கிய அருட்பிரகாசம் அவர்கள் சென்னையிலிருந்து கனல் வெளியீடாக டிசம்பர் 1978இல் 256 பக்கங்களில் எழதி வெளியிட்ட ஒரு நாவலை முதன்மையானதாகக் குறிப்பிடலாம். இந்நாவல் 1977 இனக்கலவரத்தின் பின்னர் தென்னிலங்கையிலிருந்து வடபுலத் தாயகம் நோக்கி தமிழரை ஏற்றிவந்த லங்காராணி என்ற கப்பலை மையமாக வைத்து, இனவழிப்பின் சாட்சியங்களைத் திரட்டி ஒரு நாவலாகத் திறம்படக் கையாண்டிருந்தார். லங்காராணியின் கடற்பிரயாணத்தின் பின்னணியில் அதன் பிரயாணிகளின் உணர்வலைகளின் ஊடாக ஈழத்து இனப்பிரச்சினையின் பூதாகாரத் தன்மையையும் விடுதலைப் போராட்டத்தின் தேவையையும் அருளர் நியாயபூர்வமாகச் சித்திரித்திருந்தார். பல தமிழ் இளைஞர்களை ஆரம்பத்தில் விடுதலைப் போராட்டத்தின்பால்இழுக்கக் காரணியாக இருந்த லங்காராணி பின்னர் யாழ்ப்பாணம்: ஈழப்புரட்சி அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் 2வது பதிப்பினை 1988இல் வெளியிடப்பட்டது.

சுபாஷ் என்ற பெயரில் விடுதலைப் போராட்ட அமைப்பின் போராளியாக வாழ்ந்த காலத்தில், தா.பாலகணேசன் எழுதியதும்,92 பக்கங்களில் விடுதலைப்புலிகள் வெளியீடாக வெளியிடப்பட்டதுமான விடிவுக்கு முந்திய மரணங்கள் என்ற நாவல் 1986இல் வெளிவந்தது. 13.2.1985இல் நிகழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கொக்கிளாய் இராணுவமுகாம் தாக்குதலை விளக்கும் போராட்ட வரலாற்று நூல் இதுவாகும். பின்னர் இந்நாவல் விடியலுக்கு முந்திய மரணங்கள் என்ற தலைப்பில், 1988இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 112 பக்கங்களில் தமிழகத்திலும் வெளியிடப்பட்டது.(நெய்வேலி 12: ஈகம் பதிப்பகம், சரோசினி நாயுடு சாலை. அச்சகம்-குறிஞ்சிபதி: அழகிரி அச்சகம்).

கப்டன் மலரவன் என்ற போராளியால் (இயற்பெயர் காசிலிங்கம் விஜித்தன்) போர் உலா: பயணக்குறிப்பு என்ற நாவல் 1993இல்எழுதப்பட்டது. மணலாற்றிலிருந்து மாங்குளம் முகாம் வரை லியோ என்ற புலி வீரனின் பயணக் குறிப்பாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மணலாற்றிலிருந்து மாங்குளம் முகாம் தகர்ப்புக்கெனச் சென்ற புலிவீரர்அணியில் இடம் பெற்றிருந்த கப்டன் மலரவன் தனது பயணத்தின் போதும், முகாம் தகர்ப்பிற்கான சண்டைகளின் போதும் தான் தரிசித்த நிகழ்வுகளையும், பெற்ற அனுபவங்களையும் நூலுருவில் தந்திருந்தார். இந்நூலும் பின்னாளில் ஏப்ரல் 1994இல் ஐக்கிய இராச்சியத்திலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் வெளியீட்டுப் பிரிவினரால் 132 பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக புதியதோர் உலகம் என்ற நாவல், கோவிந்தன் என்ற முன்னாள் போராளியால் எழுதப்பட்டு மே 1985இல் தமிழகத்தில் 365 பக்கங்களில் வெளியிடப்பட்டது. பெப்ரவரி 15, 1985 இல் தான் அங்கம் வகித்த தமிழீழ விடுதலை அமைப்பில் (PLOTE)  இருந்து வெளியேறிய தோழர்களுடன் தானும் சேர்ந்து கொண்டு; வெளியேறிய பின்பு தம்மை அழிப்பதற்காகத் தேடிய அவ்வியக்கத்தவரிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொண்டு இரு மாதங்கள் தலைமறைவாக இருந்தவேளையில் இந்நாவல் படைக்கப்பட்டது. தமிழீழவிடுதலைப் போராட்டத்தில் ஒரு வருடகாலமாக நடைபெற்ற உண்மைச் சம்பவங்களிலிருந்தே இந்நாவல் உருப்பெற்றுள்ளது. இந்நாவலும் பின்னர் தனது 2வது பதிப்பினை கோவை, விடியல் பதிப்பகத்தின் ஊடாக1997இல் 244 பக்கங்களில் மீள்பதிப்பினைக் கண்டது.

இதன் பின்னர், மருத்துவப் போராளியான தூயவன், பெண் போராளிகளான மலைமகள், தமிழ்க்கவி எனப் பல போராளிப் படைப்பாளிகள் ஈழத்தின் போர்க்காலப் படைப்புலகத்தில் தமது போர்க்கள அனுபவங்களை இலக்கியமாக்குவதில் வெற்றிகண்டார்கள். இப்பட்டியல் மிக நீண்டதும் தனியானதொரு ஆய்வுக்குமுரியது. இவ்வழியில் தொடரும் நஞ்சுண்டகாடு நாவலின் வருகை ஈழத்துப் போரிலக்கியப் படைப்புகளில் கணிசமான பார்வையைப் பெறும் என்று நம்புகின்றேன்.

உங்கள் கருத்து
 1. vanni arrahchi on March 16, 2015 6:12 pm

  சிலவற்றை திரும்ப திரும்ப படிக்க வேண்டிய தேவை ஏற்படும்.

  ஒரு சிலவற்றில் இந்த உணர்வுகள் அறவே ஏற்படாது.

  வாசிப்பதில் எவனும் பாதகனாக ஆகிப்போவதில்லை. மேலும் அவன் புடமிடப்பட்டு மினுக்காகவே வெளிவருகிறான்.

  போர் இலக்கியங்கள் என்றால் என்ன?

  நாம் யாரோடு போர் தொடுத்தோம்?.

  இது யாழ்பாண அரசியல்வாதிகளும் சிங்களயரசியல்வாதிகளும் கொண்ட உறவால் எற்பட்ட நிலையல்லவா?.

  1983-2009 என்பது ஒரு முக்கிய வரலாறாக பதியப்பட்ட போதிலும் இந்த கிளர்ச்சியை ஆயுதபோராட்டமாக வடிவமைக்க கூடிய சக்திகள் எதுவாக இருந்தது என்பதில் இதுவரைக்கும் எந்த இலக்கியமும் இல்லை.

  ஆகவே சோகம்தான் வரலாறு-இலக்கியம் என வரையறுக்க வேண்டிய தேவை யாருக்கும் இல்லை என்பதே விடையாக இருக்கும்.


 2. சிறுவன் on March 18, 2015 9:30 am

  என்.செல்வராஜாவின் இந்த கட்டுரையினை பற்றி ஒரு மதிப்பீடு செய்வதற்கு அவர் இங்கே குறிப்பிடும் இலக்கியங்களை வாசித்திருக்க வேண்டும். எனினும் இந்த கட்டுரை இப்பிடி இலக்கிய புத்தகங்கள் இருக்கின்றன அதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை தெரிவிக்கின்றது.

  தொடர்ந்து எழுதுவது இக்கட்டுரை தொடர்பானது இல்லை. அது தேசம் ஆசிரியர் ஜெயபாலனுக்கு ஒரு வேண்டுகோள்.

  \\ 1983-2009 என்பது ஒரு முக்கிய வரலாறாக பதியப்பட்ட போதிலும் இந்த கிளர்ச்சியை ஆயுதபோராட்டமாக வடிவமைக்க கூடிய சக்திகள் எதுவாக இருந்தது என்பதில் இதுவரைக்கும் எந்த இலக்கியமும் இல்லை.\\ vanni arrahchi on March 16, 2015 6:12 pm

  எனக்கு இலக்கியம் தொடர்பாக கருத்துக்கூற தற்போது முடியாது. அதற்கான தயாரிப்பு தேவை. எனினும் vanni arrahchi எழுதியது ஜெயபாலனிடம் ஒரு வேண்டுகோளை விடுக்க தூண்டுகின்றது.

  கடந்த காலங்களில் vanni arrahchi தேசத்தில் எழுதிய கருத்துக்கள், “ஆயுதபோராட்டமாக வடிவமைக்க கூடிய சக்திகள் எதுவாக இருந்தது என்பதில்” இதுவரை இல்லாத இலக்கியமாக இருக்கலாம்.

  ஜெயபாலன் முயற்சி எடுத்து இந்த கருத்துக்களை தொகுத்து ஒரு இலக்கிய புத்தகமாக வெளியிட வேண்டும். அதற்கு “வன்னியாராச்சி சந்திரன்ராஜா மாவோ” இலக்கியம் என்ற தலைப்பினை வழங்கும் படி வேண்டுகின்றேன்.

  ஜெயபாலன் இதை யார் வாசிப்பது என்று கேட்டால் அதற்கு vanni arrahchi யின் பதில்: “சிலவற்றை திரும்ப திரும்ப படிக்க வேண்டிய தேவை ஏற்படும்.ஒரு சிலவற்றில் இந்த உணர்வுகள் அறவே ஏற்படாது.”

  எதுக்கும் இது பற்றி ஜெயபாலன் சிந்திக்கவும்


 3. சிறுவன்[வான்கோழி] on May 11, 2016 2:04 pm

  ஜெயபாலன் வான்கோழி தானே கத்துது எண்டு கவனிக்காமல் இருந்தால் தமிழ் மக்களுக்கு பெரிய இழப்பு.

  “என்னத்தை ஆராய்கிறார் என்று தெரியவில்லை. அவருடைய ஆராய்ச்சி முடிவில்” என்று பின்போடாமல் ஜெயபாலன் செயலூக்கம் கொண்ட பத்திரிகையாளனாக வேண்டும்.

  ஒரு வருடத்திற்கு முன்னர் நான் எழுதியது:

  [[ கடந்த காலங்களில் vanni arrahchi தேசத்தில் எழுதிய கருத்துக்கள், “ஆயுதபோராட்டமாக வடிவமைக்க கூடிய சக்திகள் எதுவாக இருந்தது என்பதில்” இதுவரை இல்லாத இலக்கியமாக இருக்கலாம்.

  ஜெயபாலன் முயற்சி எடுத்து இந்த கருத்துக்களை தொகுத்து ஒரு இலக்கிய புத்தகமாக வெளியிட வேண்டும். அதற்கு “வன்னியாராச்சி சந்திரன்ராஜா மாவோ” இலக்கியம் என்ற தலைப்பினை வழங்கும் படி வேண்டுகின்றேன்.

  ஜெயபாலன் இதை யார் வாசிப்பது என்று கேட்டால் அதற்கு vanni arrahchi யின் பதில்: “சிலவற்றை திரும்ப திரும்ப படிக்க வேண்டிய தேவை ஏற்படும்.ஒரு சிலவற்றில் இந்த உணர்வுகள் அறவே ஏற்படாது.”

  எதுக்கும் இது பற்றி ஜெயபாலன் சிந்திக்கவும்.]]

  ஜெயபாலன், “ஆராய்ச்சி” முடியும் மட்டும் காத்திருக்க வேண்டாம்.


 4. சிறுவன்[வான்கோழி] on August 2, 2016 6:49 am

  கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தோழர் வன்னியாராச்சியசந்திரன்ராசமாவோ கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தேசம் இணைத்தளத்தில் கொட்டிய குப்பையினை ஒரு இலக்கியமாக அங்கீகரிக்க வேண்டும், அதனை ஒரு புத்தகம் அல்லது காவியமாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்க படுகின்றது.

  அதனை ஜெயபாலன் தொடர்ச்சியாக நிராகரித்து வந்திருக்கின்றார். அதற்கான காரணம் தோழர் வன்னியாராச்சியசந்திரன்ராசமாவோவின் அற்புதமான கருத்துக்கள் ஜெயபாலனின் சமீபத்திய புத்தகத்தினை செல்லாக் காசக்கிவிடும் என்ற பயமாக மட்டும்தான் இருக்க முடியும்.

  இந்த பயம் நியாயமானதே. ஜெயபாலனின் எழுத்துகள் புலி இறைச்சிக் கறிக்கு அல்பிரேட் துரையப்பா பாவித்த சரக்குத்தூள் மட்டும் பாவித்து சமைக்க பட்டது. வன்னியாராச்சியசந்திரன்ராசமாவோவின் புலிக்கறி ஒரு மாவோவாத, இரகசியமான ஏகாதிபத்திய எதிர்ப்பு விசேட வாசனைத்திரவியம் சேர்த்து சமைக்கப்பட்டது.

  ஜெயபாலனின் புத்தகம் தற்போது வெளிவந்து விட்டது. அடுத்ததாக வன்னியாராச்சியசந்திரன்ராசமாவோவின் காவியத்தினை அவர் வெளிக்கொண்டுவர வேண்டும்.

  வன்னியாராச்சியசந்திரன்ராசமாவோ இந்த கட்டுரைக்கு முதலாவதாக March 16, 2015 6:12 pm கருத்து சத்தி எடுக்கையில், “இது யாழ்பாண அரசியல்வாதிகளும் சிங்களயரசியல்வாதிகளும் கொண்ட உறவால் எற்பட்ட நிலையல்லவா?.” என்று கேட்டிருந்தார்.

  அவர் இன்று தனது மிகவும் கடுமையான சித்தாந்த ஆய்வுகள், படிப்புக்களால் யாழ்ப்பாண அரசியல்வாதி மண்லஸ்டக்லஸ், சிங்கள அரசியல்வாத மகிந்த குடும்பம் கொண்ட உறவு இந்த நிலைக்கு காரணம் இல்லை என்பதை நிறுவியுள்ளார்.

  ஜெயபாலன் பொறாமைப் படாமல் ஆவன செய்து இந்த பெரும் புத்தகத்தினை வெளியிடவும். விழாவுக்கு தேரர் தோழர் BC யினை தலைமை தாங்க நியமிப்பதை மறக்க வேண்டாம்.


 5. vanni arrachi on August 2, 2016 6:31 pm

  என்னமா கருத்துக்களை அள்ளிகொட்டுகிறான் இந்த சின்னப்பயல்.

  ஒருகாலத்தில் இந்த வேலைகளை செய்தவர்கள் ரோகன் சாந்தன் என்கிற கல்விவட்டாரத்தை சேர்ந்த யாழ்ப்பாண அறிவாளிகள்.

  வான்கோழி இதை முறையடித்து விடுவார் போல் இருக்கிறது.

  கமோன் சிறுவா!.


 6. சிறுவன்[வான்கோழி] on August 3, 2016 7:34 am

  தோழர் வன்னியாராச்சியசந்திரன்ராசமாவோ புகைக்குண்டு அடித்து பார்ப்பது சரி வராட்டால் வேறை எங்கேயாலும் போய் அலம்புவது.

  வேறு என்ன செய்யமுடியும், அட்டகாசமாக ஏகாதிபத்திய எதிர்ப்பு ”நெஞ்சளுத்தில் எழும்பிக் கொண்டிருக்கு” இந்தா வெடிக்க போகுது எண்டது பராவின் படுக்கை அறையில் விளக்கு பிடிச்சதோடை முடிந்தது.

  விளக்கு பிடித்த பழைய நினைவுகளின் மயக்கத்தில் தான் மேலே எழுதிய சித்தாந்தம் அவ்வளவு இறுக்கமா இல்லை.

  இப்ப வேட்டிக்கே இருந்து சித்தாந்த சிந்தனை மும்மரமாக நடக்குது அடுத்த புகைக்குண்டுக்கு ஒருத்தரும் தப்பேலாது.


 7. BC on August 3, 2016 7:23 pm

  //என்னமா கருத்துக்களை அள்ளிகொட்டுகிறான் இந்த சின்னப்பயல்.//

  ஜெயபாலன் தான் வழங்கும் அளவற்ற ஊடக சுதந்திரம் என்ற தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டு தேசம்நெற்றை எப்படியாக ஒரு வழி பண்ண வேண்டும் என்ற நோக்கில் வேட்டிக்குள் சிவலிங்கம் தேடும் ஒரு இன சேர்க்கையாளன் சிறுவன் வான்கோழி தேசம்நெற்றில் இறக்கபட்டுள்ளான் என்பதை உணரவேண்டும்.


 8. சிறுவன்[வான்கோழி] on August 4, 2016 8:10 am

  ஊடக சுதந்திரம் இருக்க வேண்டும். ஆனால் அது இலங்கை தீவின் அரசினதைப் போன்று இருக்க வேண்டும்.புலியினை பத்தேக்கை தேடுதல் என்ற பெயரில் அரச பிரச்சாரம் செய்வதற்கு பூரண சுதந்திரம் வேண்டும்.

  மகிந்த அரசாங்கம் தேர்த்தலில் தோல்வியுற்ற பின்னரும், முன்னரும் இங்கே அந்த ஆட்சியின் சொறி நாய்களாக “கருத்து” எழுதுபவர்களின் ஆட்டம் கேள்விகுறியாக்கப் பட்டால் அதனை, “ஜெயபாலன் தான் வழங்கும் அளவற்ற ஊடக சுதந்திரம் என்ற தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டு” தடை செய்ய வேண்டும்.

  ஊடக சுதந்திரத்தின் அளவு என்ன என்பதை இலங்கையில் போதுபலசேன தீர்மானிப்பது போன்று தேசம் இணைத்தளத்தில் தோழர் BC தேரரும், தோழர் வன்னியாராச்சியசந்திரன்ராசமாவோ என்ற இருவரும் தீர்மானிக்க அதிகாரம் வழங்குவது தான் உண்மையான ஜனநாயகம்.

  இந்த இருவரும் கடந்த பல வருடங்களாக இங்கே மகிந்த, மன்லஸ்டக்லஸ் என்ற வேட்டி அணியும் அரசியல் வாதிகளின் கொலைகள், கொள்ளைகளை நிபந்தனை இன்றி நியாயப்படுத்துவதை, இவர்களுக்கு இருக்கும் நாய் விசுவாசத்தினை,இந்த அரசியல்வாதிகளின் வேட்டிக்குள் அரசியல் வாழ்க்கை நடத்துபவர்கள் என்பது ஒரு அரசியல் விமர்சனம்.

  இவர்கள் இருவரும் இந்த அடிமை அரசியலில் இருந்து வெளிவர போவதில்லை. “வேட்டிக்குள் சிவலிங்கம் தேடும்” முயற்சியினை கைவிட போவதுமில்லை.ஜெயபாலனின் பத்திரிகை சுதந்திரம் அனுமதிக்கும் மட்டும் இந்த பதம் இங்கே எழுதுவது கடைசி தரமில்லை.

  BC தேரர் வேட்டிக்குள் சிவலிங்கம் பற்றி சலசலக்கின்றார்.தோழர் வன்னியாராச்சியசந்திரன்ராசமாவோ “கயிறு திரிப்பதை” பற்றி,”என்னமா கருத்துக்களை அள்ளிகொட்டுகிறான் இந்த சின்னப்பயல்” என்று ஆச்சரிய படுகின்றார்.இதை விட வான்கோழி எழுதுவது ஒன்றும் இவர்களுக்கு தெரிவதில்லை.

  எப்ப ஊசிபோட்டு மகிந்த அரசு மகத்தானது என்று காட்டப் போறியள்? இதுக்கு விடையில்லை இன்னொரு கட்டுரை (வடலி)இங்கே தேடி காலைத்தூக்குங்கோ.


 9. சிறுவன்[வான்கோழி] on August 4, 2016 9:00 am

  ” ஒரு இன சேர்க்கையாளன் சிறுவன் வான்கோழி தேசம்நெற்றில் இறக்கபட்டுள்ளான் என்பதை உணரவேண்டும்.”

  இரண்டு வருடங்களுக்கு முன்னர் கோத்தபாயவின் பொதுபலசேன இலங்கையில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு மேல் இனவாத தாக்குதல் செய்த போது BC தனது முஸ்லீம் விரோத கருத்துக்கள் மூலம் இந்த தாக்குதல்களில் பங்குபற்றியதை தேசம் இணைத்தளத்தின் ஆவணப் பகுதியில் இன்றும் இருப்பதை நீங்கள் “உணரவேண்டும்.”

  இந்த சேவைக்காக பொதுபலசேனா அவரை மொட்டை அடித்து, காவி அணிந்து தேரராக்கியது.

  உலகம் முழுக்க ஒரு இன சேர்க்கையாளர்கள் அங்கீகரிக்கப்பட்டு திருமணம் செய்வதற்கு, குழந்தைகளை தத்து எடுப்பதற்கான சட்டங்கள் உருவாக்கப் படுகின்றன. இந்தியா, இலங்கையிலும் இதன் எதிரொலிகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக உரிமைகள் கோரப்படுகின்றன.

  முஸ்லிம்களுடன் சேர்த்து ஒரு இன சேர்க்கையாளர்கள் மீதும் BC தேரர் கொண்டிருக்கும் கொலை வெறியின் வெளிப்பாடு தான் சிறுவன் வான்கோழி ஒரு இன சேர்க்கையாளன் என்பது.பொது பலசேனாவின் அடுத்த கொலை வெறி நடனம் BC தேரரின் பங்களிப்புடன் இவர்களை நோக்கி இருப்பதற்கான முன்னறிவிப்பு இது.

  சிறுவன் வான்கோழி ஒரு இன சேர்க்கையாளன் என்று இங்கே ஏன் எழுதவேண்டும்? BC தேரர் சிறுவன் வான்கோழியின் படுக்கை அறையில் விளக்கு பிடிச்சவரோ? தேசம் இணையத்தளத்தின் வாசகர்கள் ஒரு இன சேர்க்கைக்கு எதிர்ப்பாளர்களோ? அவர்கள் என்னை வெள்ளைவானிலை வந்து கடத்த போகினமோ?

  ஒரு இன சேர்க்கை கேவலமானதும் இல்லை அது அரசியலும் இல்லை. மகிந்த, மண்லஸ்சின் வேட்டிக்குள் இருந்து கொண்டு உலகம் இது தான் என்று செய்யும் அரசியல் கேவலமானது தான்.


 10. ரஞ்சு on August 4, 2016 9:57 am

  /ஒரு இன சேர்க்கையாளன் சிறுவன் வான்கோழி தேசம்நெற்றில் இறக்கபட்டுள்ளான் என்பதை உணரவேண்டும்/

  இதிலை ஒரு இன சேர்க்கையாளன் எண்டதை ஒரு மனம் கெடுத்தித் திட்டிற மாதிரி பாவிச்சிருக்கிறீங்கள் பிசி அண்ணை? ஆம்பிளையளுக்குப் பொம்பிளைப் பேர் சொல்லி மானம் கெடுத்திற ஆணாதிக்கப் பிசாசு ஒண்டு உலாவுது. இப்ப ஒருத்தர் எப்பிடி தன்ரை பாலுறவு விருப்பங்களை வச்சிருக்கிறார் எண்டது உங்களுக்கு கேவலப்படுத்திறதுக்கு ஒரு வழியாய்ப் போச்சு!

  /ஜெயபாலன் தான் வழங்கும் அளவற்ற ஊடக சுதந்திரம் என்ற தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டு/

  அட மகாராசா!

  அளவற்ற ஊடக சுதந்திரமோ? ஜெயபாலன் அண்ணையின்ரை தணிக்கைக்குழுவில்லை நீங்களும் சேரப்போறியள் போலை கிடக்கு!


 11. vanni arrachi on August 4, 2016 9:59 am

  //சிவலிங்கம் தேடும் ஒரு இன சேர்க்கையாளன் சிறுவன் வான்கோழி// பீசி

  இந்த ஞானி நிஷ்டையில் இருந்தால் சிவலிங்கமே மனத்தில் தெரியும்.பார்க்கும் இடம் நோக்குமிடம் எல்லாம் சிவலிங்கமயம்.

  இந்த யோகி அரசியல் கதைப்பதில்லை என்பதை விட இவருடன் அரசியல் பற்றி விவாதிப்பது மிகமிக தவறானது.

  இவருக்கு குரு நிச்சியம் பராவாக இருக்க முடியாது.இவர் சுயமாக கற்று சுயம்புலிங்கம் தேடும் முயற்சியே!


 12. சிறுவன்[வான்கோழி] on August 4, 2016 12:09 pm

  தோழர் வன்னியாராச்சியசந்திரன்ராசமாவோ எழுதுவது சிறுவன் வான்கோழி “ஒரு இன சேர்க்கையாளன் சிறுவன் வான்கோழி” என்ற BC தேரரின் கண்டு பிடிப்பை ஒரு மாதிரி “ஞானி நிஷ்டை”,”யோகி அரசியல்”, “சுயம்புலிங்கம் தேடும் முயற்சி” எண்டு சொல்லுகளாலை சளாப்பி தேரருக்கு பிணை எடுக்கும் முயற்சி.

  அதை விட தோழர் வன்னியாராச்சியசந்திரன்ராசமாவோ உங்களுக்கு வகுப்பு எடுக்கின்றார். அரிவரி சொல்லித்தருகின்றார் எப்பிடி இரண்டு நாட்களுக்கு முன்னர் எழுதியதை கயிறாக மாற்றுவது என்று. கவனமாக படித்தால் தான் அவர் மேற்ப்படிப்பு உங்களுக்கு படிபீப்பார்.

  இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறுவன் வான்கோழி குருவினை அவமதித்து என்று, “இந்த அநியாயம் எல்லாம் அப்பன் பராவுக்கு செய்யும் கிரிகையா?” எண்டு ”நெஞ்சளுத்தில்” எரிமலை எழுப்பிய தோழர் வன்னியாராச்சியசந்திரன்ராசமாவோ இன்று, “இவருக்கு குரு நிச்சியம் பராவாக இருக்க முடியாது.” என்று வெடிக்கிறார்.

  எப்பிடி இவர் இதை செய்கின்றார்? தனிய அவரது பாரம்பரிய மகிந்த, மண்லஸ் வேட்டிக்குள் மட்டுமல்ல அவர், “பார்க்கும் இடம் நோக்குமிடம் எல்லாம் சிவலிங்கமயம்.”


 13. சிறுவன்[வான்கோழி] on August 4, 2016 12:21 pm

  தோழர் வன்னியாராச்சியசந்திரன்ராசமாவோ,”இந்த யோகி அரசியல் கதைப்பதில்லை என்பதை விட இவருடன் அரசியல் பற்றி விவாதிப்பது மிகமிக தவறானது.”

  உங்களுடன் ஒரு போதும் அரசியல் விவாதிக்கவும் இல்லை. விவாதிக்க போவதும் இல்லை.

  நீங்கள் இருவரும் இங்கே தெரிவிப்பது அரச விசுவாச, அடிமைக்கருத்துக்கள் என்பதை திருப்பி திருப்பி இங்கே குறிப்பிடுவேன்.

  அதை யாரும் ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள்ளட்டும் அல்லது நிராகரிக்கட்டும்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு