ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் டுபாயில் குண்டுவெடிப்பு!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபி மற்றும் அதன் சுற்றுலா மையமான டுபாயில் இரண்டு தனித்தனி வெடிப்பு சம்பவம் நேற்று (31.08.2020) இடம்பெற்றுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று பொலிஸார் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

தலைநகரில் நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக அபுதாபி அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

அபுதாபி சம்பவத்தில் பல சிறிய அளவிலான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கட்டிடம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை டுபாயில், நேற்று அதிகாலை உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டுபாயில் நடந்த குண்டுவெடிப்பில் கட்டிடத்தின் தரை தளம் சேதமடைந்தது என்பதோடு தீ 33 நிமிடங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • ஜெயபாலன் த

    நேற்று ஓகஸ்ட் 31 2020, நீண்ட வரலாற்று இடைவெளிக்குப் பின் இஸ்ரேலில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு விமானப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. இஸ்ரேல் உடன் அரபுலகம் மீண்டும் தொடர்புகளை வளர்த்துக்கொள்வதில் பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் பெரும் அதிருப்தியயையும் கண்டனத்தையும் வெளியிட்டு இருந்தன.

    இஸ்ரேல் இருதேசக் கொள்கையை தீர்வாக முன்வைக்காது தொடர்ந்தும் பாலஸ்தீனத்தை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் வரை அரபுலகம் இஸ்ரேலுடன் கைகுலுக்கக் கூடாது என்பதில் பாலஸ்தீனிய மக்களுக்கு சார்பானவர்கள் தீவிரபோக்கைக் கொண்டுள்ளனர்.

    அமெரிக்க தேர்தலில் தன்னை ஒரு சமாதான துதூவனாகக் காட்ட ட்டொனால்ட் ட்ரம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தையும் இஸ்ரேலையும் இந்த விமானப் போக்குவரத்தை ஆரம்பிக்க கடும் பிரயத்தனம் மேற்கொண்டது. இந்த இஸ்ரேலில் இருந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சென்ற முதலாவது விமானத்தில் டொனால்ட் ட்ரம்மின் மருமகன் ஜெரி குஸ்னர் மற்றும் அமெரிக்க இராஜதந்திரிகள் மற்றும் இஸ்ரேல் ராஜதந்திரிகள் ஆகியோர் சென்றிருநந்தனர்.

    மேலும் நீண்ட வரலாற்று இடைவெளிக்குப் பின் இஸ்ரேலிய விமானம் சவுதியரேபியாவின் வான்பரப்பினூடாக பறக்க அனுமதிக்கப்பட்டு இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

    ஈரானை தனிமைப்படுத்தும் இராஜதந்திர நகர்வாக இஸ்ரேலும் அமெரிக்காவும் இந்த கூட்டு முயற்சியில் இறங்கி உள்ளன.

    இவற்குப் பதிலடியாகவே இக்குண்டு வெடிப்புகள் இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகின்றது. சமாதானத்துக்கான இந்தப் பயணம் அரபுலகில் மற்றுமொரு போர்மேகம் சூழ்வதற்கான சூழலை உருவாக்கலாம் என்ன அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

    Reply