பிற விற நாட்கள்


birth

 

 

 

 

 

 

 

 

அழுதலில் தொடங்கிய பிறப்பு

அளவிடுப்போகும் இறப்பு
பிறப்பு இறப்பு இரண்டுக்கும் இடையில்
வாழ்க்கையின் வளர்ப்பு.
திண்டு ஆடுகிறது
திண்டாடும் வாழ்க்கை
கொதிக்கும் குளம்பின்மேல் கூத்தாடுகிறோம்
சிவனையும் கூத்தாடியாய் குறை கூறுகிறோம்
வாழ்கையே கூத்துத்தானே கூத்தா.
ஆத்தாமேல் கூத்து -பின்
ஆத்தாவுள் கூத்து
ஆத்தாவுள் குத்து
ஆத்தாது பிறப்பு
கிழக்கெழுவான் எழுமுன்னே
கிளர்ந்தெழுவான் போக்கறுவான்
போக்கு வாக்குத்தெரியாது
பழக்கம் வழக்கமாகி
கோ-வ(ண-க)ம் கொண்டு
கோடிபழிகள் தீரக்கும்பிட்டு
குடும்பி பிடித்து
தேங்காய் உடைத்து
சாதம் படைத்து
அது பிரசாதமாக்கி
பிற ஏழைகளுக்குக் கொடுத்து
போதும் என்று பெருவயிறு கூற
சுற்றம் சூழ கொற்றம் மீழும் பிறந்தநாட்கள்.
போர்வந்து பாருளுது
ஏரெறிந்து ஊரெரிய
எறிகணைகள் எறிந்து நாடெரிய
அனுமானின் அவல விஜயம்- ஆனால்
காணவில்லை இராமனை.
யார்யாரோ உடல்கள்
எங்கள் வயல்களில் புதைந்து
எலும்புகள் விளைந்து
பிறந்தநாட்கள் மறந்து
இறந்தநாட்களாய் போனது.
இன்று
உற்றது ஒன்றும்
பிறமொழி தத்தெடுத்த
பெற்றது இரண்டும்
சுற்றி நின்று பிறதோர் மொழில்
பிறந்தநாள் பாடி
சின்னக் கேட்கை சிறிதாய் வெட்டி
சிறுதுண்டுகளாய் ஊட்டி
கூட்டமற்றுக் கூடக் கொண்டாடும்
புலத்துப் பிறந்தநாட்கள்.
சிறுத்துப்போனானே மனிதன்
குறிகிப்போயின
மனிதருடன் மனங்களும் மொழியும்.
மொழியை மொழியென மொழிந்தாலும்
மொழியை மொழியாக மொழிவாயோ தமிழா!!
பி.கு:- வாழ்க்கை போகும் இடம் அறியாதது இதனால் நாம் போக்கறுந்தவர்கள். மனிதன் போக்கறுவான்.
தமிழனாய்
நோர்வே நக்கீரா.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு