வன்னியில் காயமடைந்த 300க்கும் மேற்பட்டவர்களை வவுனியாவுக்கு கொண்டுவரும் முயற்சி பலனளிக்கவில்லை – ஐ.சி.ஆர்.சி.யுடன் சென்ற வாகனங்கள் மீண்டும் திரும்பின

redcrose2801.jpgவன்னியில் காயமடைந்த 300க்கும் மேற்பட்டவர்களை வவுனியாவுக்கு கொண்டுவரும் முயற்சி பலனளிக்கவில்லை – ஐ.சி.ஆர்.சி.யுடன் சென்ற வாகனங்கள் மீண்டும் திரும்பின

முல்லைத்தீவில் உடையார்கட்டு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நாள் முழுவதும் இடம்பெற்ற அகோர ஷெல் தாக்குதலில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையிலுள்ள 300க்கும் மேற்பட்டவர்களை மேலதிக சிகிச்சைக்காக வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டுவர நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட முயற்சி கைகூடவில்லை. படுகாயமடைந்தவர்களை வவுனியாவுக்கு கொண்டுவர புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி நோக்கி நேற்றுக் காலை17 அம்புலன்ஸ்களுடனும் ஐந்து பஸ்களுடனும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி.) சென்ற போதும் புதுக்குடியிருப்புக்கு தெற்கே கடும் மோதல்கள் நடைபெற்று வருவதால் இவர்களால் ஆஸ்பத்திரிக்குச் செல்ல முடியவில்லை.

திங்கட்கிழமை காலை முதல் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் உடையார்கட்டு முதல் தேவிபுரம் வரை அரசால் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப் படுத்தப்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கில் ஆட்லறி ஷெல்கள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதனால் 300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துமுள்ளதாக “புதினம்’ மற்றும் “தமிழ் நெற்’ இணையத்தளங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் படுகாயமடைந்த நூற்றுக்கணக்கானோர் ஆபத்தான நிலையிலிருப்பதால் அவர்களுக்கு மேலதிக சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் அவர்களை வவுனியாவுக்கும் வேறு ஆஸ்பத்திரிகளுக்கும் கொண்டு செல்ல உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி நிர்வாகம் ஐ.சி.ஆர்.சி.யிடம் அவசர கோரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து வவுனியா ஆஸ்பத்திரியில் நான்கு வார்ட்கள் ஒதுக்கப்பட்டதுடன் இரு சத்திரசிகிச்சை பிரிவுகளும் முழு அளவில் தயார்படுத்தப்பட்டதுடன் புதுக்குடியிருப்புக்குச் சென்று, காயமடைந்த 300பேரை வவுனியாவுக்கு கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. மன்னார் ஆஸ்பத்திரியிலிருந்து அவசரமாக ஐந்து அம்புலன்ஸ்கள் வவுனியா ஆஸ்பத்திரிக்கு வரவழைக்கப்பட்டதுடன் அங்கிருந்து 17 அம்புலன்ஸ்களும் 5 பஸ்களும் ஐ.சி.ஆர்.சி.யின் வழித்துணையுடன் நேற்றுக் கலை புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி நோக்கிச் சென்றன.

இவை மாங்குளம் முல்லைத்தீவு வீதியால் புதுக்குடியிருப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போதும் புதுக்குடியிருப்புக்கு தெற்கே கடும் சமர் நடைபெறுவதால் அவர்களால் தொடர்ந்து பயணம் செல்லமுடியவில்லை. அங்கு நீண்டநேரம் காத்திருந்தும் அது சாத்தியப்படவில்லை. இதையடுத்து அப்புலன்ஸ்களும் பஸ்களும் நேற்று பிற்பகல் வவுனியாவுக்குத் திருப்பின

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • padamman
    padamman

    இந்த சண்டை தேவையா? யாருக்காக? மக்களுக்கு என்றால் மக்களை பாதுகாப்பது முக்கியம் ம்க்களை பாதுகாப்பன இடத்தில் வைத்து விட்டு சண்டையிடலாம் தலைவர் பாதுகாப்பாக இருக்க மக்கள் மடியவேன்டியுள்ளது சரி காயப்பட்ட மக்களைத் தன்னும் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப உதவிசெய்யலாம் அதுவும் இல்லை அப்போது எதுக்கு பெய்சொல்லி பணத்தை மட்டும் இங்கு சேற்கவேண்டும் பணம் கொடுக்கும் யாரவது கேட்டிர்களா? உங்களால் கேட்கமுடியுமா?

    Reply
  • lavan
    lavan

    வன்னியில் காயமடைந்த மக்களை அழைத்துவருவதற்குச் சென்ற ஐ.சி.ஆர்.சி. மற்றும் ஐ.நா. பிரதிநிதிகளுக்கு புலிகள் அனுமதி மறுப்பு
    புலிகள் தடுத்து வைத்துள்ள 300க்கும் அதிகமான மக்கள் மரணத் தருவாயில்–தேனீ

    Reply
  • Mr. Cool
    Mr. Cool

    வன்னியில் காயமடைந்த மக்களை அழைத்துவருவதற்குச் சென்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளை முல்லைத்தீவுக்குள் உட்செல்ல விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லையென இராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. வன்னி மோதல்களில் காயமடைந்து புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் 300பேரை வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துவரும் நோக்கில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. பிரதிநிதிகள் வன்னிக்குச் சென்றதாகவும், எனினும் காயமடைந்தவர்களை அனுமதிக்க விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லையெனவும் இராணுவம் கூறுகிறது.

    Reply
  • santhanam
    santhanam

    ஐ.சி.ஆ ர்.சி யும் ஐ.நாவும் முட்டாள்கள் அல்ல அவர்கள் ஏதோ காரணங்களிற்காகதான் வன்னிக்கு அம்புலன்சை அனுப்பியது. அவர்கள் திருப்பி அனுப்புவார்கள் என்று அவர்களிற்கும் தெரியும். இதன் விளைவு பின்புதான் தெரியும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஐ.சி.ஆ ர்.சி யும் ஐ.நாவும் விடும் அறிக்கைகள் புலிகளை எவ்வளவிற்குப் பாதிக்கும் என்று புலிகள் இன்னும் சிந்திக்கவில்லை. இவர்களின் இப்படியான நடவடிக்கைகளினால்த் தான் எந்த வெளிநாடும் எமது பிரைச்சினையைத் திரும்பிப் பார்ப்பதுமில்லை. போதாக் குறைக்கு வெளிநாடுகளில் போராட்டங்கள் நடாத்தும் எம்மவர்களும் புலிப்பிரசாரமாகவே அதனைச் செய்வதாலேயே எவரும் ஆதரவு தருவதுமில்லை.

    Reply