30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வட, கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு தமிழ்க் கூட்டமைப்பு அழைப்பு

tna.jpgவன்னியில் இடம்பெறும் இனப்படுகொலையை நிறுத்தக் கோரி  30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  வடக்கு, கிழக்குப் பகுதிகள் முழுவதிலும் பூரண ஹர்த்தாலுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்;

வன்னி நிலப்பரப்பில் இடம்பெயர்ந்துள்ள அப்பாவிப் பொதுமக்கள் மீது குறிப்பாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் தங்கியிருந்த பொதுமக்கள் மீது இராணுவம் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் ஷெல் மற்றும் விமானத் தாக்குதலில் இதுவரை 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாய மடைந்தவர்களுக்குக் கூட போதிய மருத்துவ வசதிகள் இல்லை. வைத்தியசாலைகளிலும் ஷெல் மற்றும் விமானத் தாக்குதலினால் கடமைகள் மேற்கொள்ள முடியாதுள்ளது. இறந்தவர்களின் சடலத்தை கூட மரணச் சடங்குகள் செய்ய முடியாமல் தொடர்ச்சியான விமான, ஷெல் தாக்குதல் இடம்பெற்றுவருகின்றது.

உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூர்ந்தும் தாக்குதலைக் கண்டித்தும் உயிர்காக்கும் மருந்துகளை அனுப்பக் கோரியும் அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விமான மற்றும் ஷெல் வீச்சுகளை நிறுத்தக் கோரியும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கு தமிழர் தாயம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றது. இத்தினத்தில் பாடசாலைகள், காரியாலயங்கள், வர்த்தக நிலையங்கள், போக்குவரத்து என அனைத்தையும் நிறுத்தி எதிர்ப்பு நடவடிக்கைக்கு தாயகத்தில் உள்ளவர்கள் ஆதரவு வழங்குமாறு வேண்டிக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வன்னி நிலைமை; ஐ.நா. பிரதிநிதிக்கு தமிழ் கூட்டமைப்பினர் விளக்கம்

இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு பிரதிநிதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை சந்தித்து நேரில் முறையிட்டனர்.  கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் இணைப்பாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பில் உள்ள வதிவிடப் பிரதிநிதி நீல்புகுணேவை சந்தித்துப் பேசினர்.

வன்னியில் நடைபெறுகின்ற போரின் பொதுமக்கள் கொல்லப்படுவது மற்றும் படுகாயமடைவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கவலையும் கண்டனமும் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக நீல்புகுணே கூறியுள்ளார்.  போரில் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற இழப்புகள், அவலங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தகவல்களை பெற்று வருவதாகவும் நீல்புகுணே தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு மணித்தியாலமாக நடைபெற்ற இச்சந்திப்பில் அல்லற்படும் மக்களுக்கு உதவிகள் வழங்குவது தொடர்பாக அமெரிக்க தலைநகர் நியூயோர்க்கில் விரைவில் கூட்டம் ஒன்று நடைபெறும் என்றும் நீல்புகுணே கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இடம்பெயர்ந்து செல்கின்ற மக்கள் மீது படையினர் வேண்டுமென்றே ஷெல் தாக்குதல் நடத்துவதாகவும் இதன் காரணமாகவே பெருமளவிலான மக்கள் கொல்லப்படுகின்றனர் என்றும் நீல்புகுணேக்கு எடுத்து விளக்கியதாக மாவை சேனாதிராஜா கூறினார்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருந்துகள் இல்லை எனவும் ஷெல் பீரங்கி தாக்குதலில் மருத்துவமனைகள் அனைத்தும் சேதமடைந்துவிட்டது என்றும் நீல்புகுணேக்கு விளக்கமளித்ததாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார். காயமடைந்த மக்களை வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் காயமடைந்தவர்களை ஏற்றிச்சென்ற ஒன்பது வாகனங்கள் படையினரால் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்தும் விளக்கமளித்ததாக மாவை சேனாதிராஜா கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • padamman
    padamman

    ஹர்த்தாலுக்கு பதிலாக பதவியை துறந்தால் உடனடியாக உலகம் தலையிடும்.

    Reply
  • kanapathi
    kanapathi

    இந்தியாவில் இருந்துகொண்டு சுரேஸ் பிரேமச்சந்திரமன் சிவாஜிலிங்கம் செல்வம் அடைக்கலநாதன் அன் கோ வினர் வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு சொல்லுங்கள் எங்கள் எம்பிமாரே

    Reply
  • latha
    latha

    40வரசமாக கூட்டணி என்ற பெயரிலும் பின்னர் கூட்டுமுன்னணி என்ற பெரிலும் எங்களை கடையை பூட்டு கடையை திற எண்டும் அப்ப்ப இயக்கம் எண்டு காசு கொள்ளியும் எங்களை வாழ்க்கையை நாசமாக்கிப் போட்டு இப்ப வந்திட்டாங்கள் ஒரு கொஞச நாள் மூச்சு விட்டோம் புலித் தலையிடி போச்சு எண்டுபார்தால் இப்ப கேட்கிறாங்கள் கடையை பூட்டு பள்ளிக் கூடம் போகாதே எண்டு

    இவ்வளவு காலமும் நடந்த மக்களின் அழியேக்க காட்டாத அக்கறையை இப்ப ரிஎனடஏக்கு ஏன் வந்தது. எல்லாம் தனது பா -உ பதவிக்கும் புலிப்பாட்டுக்கும் மட்டமே வன்னி மக்களுக்காக அல்ல.

    இவங்கள் வன்னி மக்களில் அக்கறை என்றால் புலியிடம் பேசி புலியை கண்டித்து மக்களை வெளியேற அனுமதிப்பதே.

    இப்ப ஆட்கள் இல்லாத கிளிநொச்சிக்குப் போய் புலி தன்ர வீரத்தை காட்டி சண்டைபிடிக்கலாம் தானே ஏன் மக்கள் செறிந்த இடத்தில் சண்டை பிடிக்கவேணும் இதனால் மக்கள்தானே சாகிறார்கள்.

    வன்னி மக்களுக்குமட்டும் என்ன இவர்கள் பாதுகாப்பு கொடுப்பது ஏன் யாழ்பாணத்தவர்கள் கிழக்கு மாகாணத்தவர்களுக்கு எங்கே பாதுகாப்பு அங்குள்ள தமிழ் மக்கள் தமிழர்கள் இல்லையா அவர்களுக்கு எப்படி புலிகள் பாதுகாப்பு கொடுக்கிறார்கள் தெற்கில்வாழும் தமிழர்களுக்கு யார்பாதுகாப்பு

    வன்னிக்கு வெளியே உள்ள தமிழ்மக்களின் பாதுகாப்பில் ரி என் ஏ அக்கறை காட்டலை. ரிஎன்ஏக்கும் வன்னி மக்கள் மட்டும் தான் ஸ்பெசலா

    Reply
  • gajan
    gajan

    இப்ப உள்ள சரியான வழி பாராளுமன்ற கதிரைகளை முழு ரிஎன்ஏ எம்பிமாரும் ராஜினாமா செய்து சர்வதேசத்திற்கு தமது எதிர்ப்பை காட்டி வன்னிக்குள் சென்று சுதந்திர தமிழீழத்தை பிரகடனப்படுத்த வேண்டும்.

    இவ்வளவு நடந்த பிறகும் இந்தியா ஏதும் செய்யும் எண்டு பார்த்துக் கொண்டிருப்பதோ அல்லது அவர்களிடம் உதவி கேட்பதோ பிரயோசனமற்றது. நேரமுமில்லை. உடனடியாக சுதந்திர தமிழீழத்தை பிரகடனப்படுத்த வேண்டும்.

    Reply
  • mathan
    mathan

    மொத்தத்தில் சனங்கள் எண்டைக்குமே நிம்மதியாய் வாழ விடமாட்டாங்கள். ஒருத்தன் மாறி ஒருத்தன் அரியண்டம்தான்.

    Reply
  • padamman
    padamman

    மக்களை வெளியில் விட்டால் ஹர்த்தால் என்ற பேச்சுக்கே இடம் இல்லை உங்களுடைய இருப்பை காட்டுவதர்கு ஹர்த்தால் என்ற நாடகம் வேண்டாம் வண்னி மக்கள் உங்களை நன்கு அறிவர். உங்கள் நடிப்பு எப்படிபட்டது என்று உலகத்தமிழர் அனைவருக்கும் தெரியும் அதேநேரத்தில் புலிக்கும் தெரியும்.

    Reply
  • SUDA
    SUDA

    ஏதோ தங்களின்ர கதைய இந்த சனங்கள் இன்னும் கேட்கும் கன்ட நினைப்பு? ஒருக்காலும் இல்லை. வேண்டுமென்டா ஒரு நாளஞ்சு நிரந்தரமாப் பூட்டப்பட்ட கடைகள மீடியாவில படம் காட்டிப்போட்டு முழுத்தமிழ்ச் சனமும் தங்களுக்குப் பின்னாலதான் என்று கதை விடுவியள். அவ்வளவுதான் நடக்கும் வெண்டுமென்டா இருந்து பாருங்கோ.

    ஹர்த்தாலாம் ஹர்த்தால். ஹர்த்தால் போட்டா அடுத்த நிமிடமே எங்களின்ர பிரச்சினைக்கு தீர்வு கிட்டிடும் போல? சும்மா கதை விடாம தங்களின்ர பதவிய ராஜினாமாச் செஞ்சு போட்டு சவுண்டு குடுங்கோ நம்புறம்.

    Reply
  • Mr. Cool
    Mr. Cool

    நாளை வெள்ளிக்கிழமை சிறிலங்கா அரசின் தமிழினப்படுகொலைக்கு எதிராக தமிழர் தாயகப் பகுதியில் இடம் பெறவுள்ள பணிப் புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவாக புலம் பெயர்ந்து வாழும் தமிழ் அமைப்புக்கள் பலவும் ஆதரவு தந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    Reply
  • அருட்செல்வன்
    அருட்செல்வன்

    வடக்கு கிழக்கில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் பூரண ஹர்த்தாலுக்கு அனைத்து மக்களும் ஆதரவு வழங்கிதங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில்:

    தமிழரின் தாயக பூமியை இராணுவ வல்லாதிக்கம் கொண்டு கபளீகரம் செய்யும் நோக்கில் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை காரணமாக தமிழரின் தாயக பூமியில் இன்று இரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. எம் உடன்பிறப்புக்கள் இன்று யாருமே இல்லாத அநாதைகள் போல் தமது சொந்த மண்ணிலேயே அநாதைகளாக்கப்பட்டு இராணுவ இயந்திரத்தின் அராஜகத்திற்குள் அகப்பட்டுத் தினந்தோறும் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றார்கள்.

    சர்வதேசத்தில் வாழும் எம் உறவுகள் எம்மக்களுக்காக குரல் கொடுத்தாலும் சர்வதேச நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் எம்மக்களின் இன்னல்களுக்கு அறிக்கைகளை விடுவதோடு தங்களது பணிகளை மட்டுப்படுத்திக்கொள்கின்றன.

    எம்மக்கள் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் அகப்பட்டு அடுத்தவேளை உணவின்றியும் பல இன்னல்களை எதிர்கொண்டும் வாழ்கின்றார்கள். மறுபுறம் இளவயதினர், முதியோர், சிறுவர்கள் என்று வயது வேறுபாடின்றி ஆயுதங்களுக்கு இரையாகிவரும் வேளையில் எம்மக்களின் படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியாதவர்களாகவும் எம்மக்களுக்கு உதவ முடியாதவர்களாகவும் நாம் இன்று நிற்கின்றோம்.

    இந்த நிலையில் எம்மக்கள் மீது மேற்கொள்ளப்படும் காட்டுமிராண்டித்தனமான இராணுவ செயற்பாடுகளையும், எம்உறவுகளின் படுகொலைகளையும் அரசு உடன் நிறுத்தவேண்டும் எனக்கேட்பதோடு வன்னியில் அல்லலுறும் மக்களுக்கு போதிய உணவு வசதிகளை அரசு செய்துகொடுக்க வேண்டும் எனவும், அம்மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகளையும் ஏனைய வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்குமாறும் இவ்வேளையில் நாம் கோரிக்கை விடுகின்றோம். இந்தவேளையிலே நாளை வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அப்பாவி தமிழ் மக்களின் படுகொலைகளை கண்டிக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ள பகிஸ்கரிப்பு முயற்சிக்கு எமது முழுப்பங்களிப்பையும் வழங்குவோம்.

    Reply
  • puvanan
    puvanan

    இன்றைய புலிகளின் மன நிலை செஞ்சோலைப் படுகொலை போன்று தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகச் சாகவேண்டும் என்பதும் அதை வைத்து தங்கள் அழிவைத் தடுக்க முடியும் என்பதும் தான். மதி கெட்டுஇ தறி கெட்டு நடந்து தங்களுக்கு தங்களே புதைகுழி தோண்டிவிட்டுஇ இப்போ அதில் இருந்து மீளுவதற்கு சொந்த இனத்தின் அழிவின் மூலம் வழி பிறக்குமா என்று கணக்குப் போடுகிறார்கள். இனி இவர்களுக்காக யார் குரல் எழுப்பியும் ஒன்றும் நடைபெறப் போவதில்லை ஏனெனில் அந்த அளவுக்கு வினைகள் செய்துள்ளார்கள். நாங்கள் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும். அது போல புலிகள் முன்பு விதைத்தவைகளை இன்று அறுவடை செய்கிறார்கள்..

    பாசிசம் என்றால் என்ன என்று விடை தேடியபோது விக்கிப்பீடியா இணையத்தளத்தில் பின்வருமாறு இருந்தது ‘தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் (குயளஉளைஅ) எனப்படும்’. இது புலிகளுக்கு மிகவும் பொருந்தும். அதனால் தன் புலிகளை பாசிசவாதிகள் என்று அழைக்கிறார்கள் பாசிசவாதிகள் நிலைத்ததாக வரலாறு இல்லை. அதற்கு உதாரணம் முசோலினிகிட்லர் இடிஅமின் போல்போட் அண்மையில் சதாம் உசையின் அந்த வரிசையில் இன்று பிரபாகரனும் அவரது கட்டமைப்புக்களும் அழிவின் விழும்பில் வந்து நிக்கிறது இது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. அவர்களின் மமதைஇ கொலைகளால் எதையும் சாதித்து விடலாம் என்ற அறிவு கெட்டதனம் வரலாறுகளைத் திரும்பிப் பார்க்க மறுத்தது. அதனால் காலம் தனது தீர்ப்பை சொல்லியுள்ளது. இனி இதிலிருந்து மீண்டு வருவார்களா அல்லது அழிவு தீர்க்கமனதா என்பதையும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். தேனி-

    Reply
  • ashroffali
    ashroffali

    வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் எங்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் மக்கள் புலிகளை மட்டுமல்ல புலிஆதரவாளர்களான கூட்டமைப்பினரையும் மொத்தமாக நிராகரித்து விட்டார்கள் என்பது தெளிவாக நிரூபமாகியுள்ளது.

    பாவம் தமிழ்க்கூட்டமைப்பினர் எதையோ நினைத்து எதையோ இடித்த கதைதான். தன் தலையில் மண்ணை தானே வாரிப்போட்டுக் கொண்டால் யாரும் எதுவும் செய்ய முடியாது. இனியாவது யதார்த்தம் என்னவென்பதை உணர்ந்து அரசியல் செய்வதே கூட்டமைப்பின் இருப்பைப் பாதுகாக்க உதவும்.

    மேலதிகமாக ஒரு தகவல்.—
    கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கீழ் இணைந்து அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தனக்கு நெருக்கமான பலரிடம் கூறியுள்ளார். புலிகள் இனி தலையெடுக்க முடியாது என்றும் அவர் கூறினாராம். தான் மீண்டும் ஆனந்த சங்கரி ஐயாவிடம் செல்ல முடியாத காரணத்தால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் அரசாங்கத்துடனும் இன்னும் சிலர் திருவாளர்களான சங்கரி மற்றும் டக்ளஸ் போன்றோருடன் இணைந்து கொள்ளவும் இன்னும் சிலர் தனித்து நிற்கவும் முடிவெடுத்திருப்பதாகவும் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துவாரகாவை மணம் முடித்து இளவரசுப் பட்டம் சூட்டிக் கொள்ளும் கனவு கண்ட கஜேந்திரன் மற்றும் எந்த முடிவை எடுப்பது என்று தெரியாமல் தடுமாறுவதாக கேள்வி. அவரும் பெரும்பாலும் அரசாங்கப் பக்கம் தாவப்போவதாகவும் அது தொடர்பில் ஒரு அமைச்சரைத் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகவும் அப்படி தான் அரசாங்கத் தரப்புக்கு வந்தால் யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சுப் பதவி மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைமைப் பதவி என்பன தனக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    சிவாஜிலிங்கம் அவர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பாக இந்தியாவில் வசிப்பதற்காக இந்திய அரசியல்வாதிகளிடம் தனக்காக சிபாரிசு செய்யுமாறு அரசாங்கத்தின் முக்கிய புள்ளி ஒருவரிடம் தொலைபேசியில் கெஞ்சியுள்ளார். தான் ஒரு போதும் அரசாங்கத்துக்கு எதிரானவன் அல்லவென்றும் ஆயுத மிரட்டலுக்குப் பயந்தே தான் அப்படி நடந்து கொண்டதாகவும் அவர் ஒப்புதல் வாக்குமூலமே அளித்துள்ளார்.

    இப்படியிருக்க இவர்கள் மக்களை மென்மேலும் முட்டாள்களாக்கும் விதத்தில் இப்படியான அறிவித்தல்களையும் வேண்டுகோள்களையும் விட்டுக் கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது.

    Reply
  • kanapathi
    kanapathi

    எல்லா எம்பிமாரும் யாழ்ப்பாணத்வர் ஆனால் அவர்கள் இருப்பதோ சொகுசாக கொழும்பிலும் இந்தியாவிலும் அல்லது ஐரோப்பாவிலும். அவர்களது பிள்ளைகள் படிப்பது இந்தியாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும். அவர்கள் போராடுவதோ யாருக்கு?…..

    Reply