“இலங்கையில் பயங்கரவாத குற்றச்சாட்டு தொடர்பான விடயத்தை எதிர்கொள்ளும் போது மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்” – ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பானர் ஹனா சிங்கர் சுட்டிக்காட்டு !

“இலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு, பயங்கரவாத குற்றச்சாட்டு தொடர்பான விடயத்தை எதிர்கொள்ளும் போது மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்” என ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக இலங்கையில் உள்ள குற்றவியல் நீதி அமைப்பு, பயங்கரவாத குற்றச்சாட்டு தொடர்பான விடயத்தை எதிர்கொள்ளும் போது மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆகவே குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பின்வரும் பிரச்சினைகளையும் ஹனா சிங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் முதலில் சட்டம், பயங்கரவாதத்தின் வரையறை மற்றும் வழக்குகளின் பின்னிணைப்பை நிவர்த்தி செய்வது உள்ளிட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தைத் தடுக்கும் நோக்கில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் அந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டவர்களுக்கு நியாயமான விசாரணை மற்றும் உரிய செயன்முறையை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பயங்கரவாத குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினரின் மீதும் பாகுபாடு காட்டுவது மற்றும் களங்கம் விளைவிப்பது போன்ற விடயங்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக, பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட அல்லது தண்டிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வை வழங்குவதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *