பிரிட்டனில் ஒரு தாசாப்த காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இருபது லட்சத்துக்கும் சற்று குறைவான எண்ணிக்கையினர் தற்போது இங்கு வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.
இது பிரிட்டனின் வேலைவாய்ப்புச் சக்தியின் 6.3 வீதமாகும்.
அதேவேளை பிரிட்டன் தற்போது ஆழமான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்வதாக, பாங் ஒவ் இங்கிலண்டின் ஆளுனர் மேர்வின் கிங் கூறியுள்ளார். வட்டி வீதம் மேலும் குறைக்கப்படாவிட்டால், பிரிட்டனின் பொருளாதாரம் இந்த வருட நடுப்பகுதியில், இன்னும் அதிகமாக வீழ்ச்சியடையும் என்று அந்த வங்கி தனது புதிய பொருளாதார எதிர்வுகூறலுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது.