“சிலரை போல இரா.சம்பந்தனின் மரணத்துக்காக நாங்கள் காத்திருக்கவில்லை” – பிள்ளையான்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் மரணத்திற்கு பின்னர் தலைவராவதற்கான பயணத்தினை மேற்கொள்ள நாங்கள் காத்திருக்கவில்லை.” என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

அண்மைக்காலமாக ஆசிரியர் சங்கம் தங்கள் உரிமையை கேட்கின்றது தங்களுடைய உரிமையை கூறிக்கொண்டு கிராம மட்டத்தில் இருக்கின்ற மாணவர்களுக்கு கல்வி வழங்காமல் அதை தடை செய்து அச்சுறுத்துவது என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் அது மாத்திரமல்ல ஆசிரியர் சங்கம் என்ற அடிப்படையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்திலேயே சிலர் யாரென்று தெரியாதவர்கள் அல்லது நான் ஒரு ஐந்து மாணவனை கற்பித்து வழி அனுப்பியிருக்கிறேன் உயர்ந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கின்றேன் என்று சொல்ல முடியாதவர்கள் இன்று சங்கத்தைப் பற்றியும் மக்கள் உரிமை பற்றி பேசுவது மிகவும் கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது அதை ஊடகங்களும் அதை எடுத்து பெரிதாக முன்னுரிமை படுத்துவதும் வேடிக்கையான விஷயமாக நான் பார்க்கின்றேன்.

சுமந்திரன் இந்த சார்பான அரசாங்கத்தால் நல்லாட்சி அரசாங்கத்தில் என்ன திட்டமிட்டு செய்து கொடுத்தார் அவர்களும் கமபரெலியவை நாங்கள்தான் செய்தோம் என்று விதியை போட்டு பெயர் பலகை அடித்தவர்கள் அவர்களுடைய அரசியல் கருத்துக்காக நாங்கள் பணி செய்ய தேவையில்லை.

எங்களுக்கு ஒரு பார்வை இருக்கின்றது கிழக்கு மாகாணத்தில் அரசியல் தலைவிதி எப்படி நிர்ணயிக்க வேண்டும் கிழக்கு மாகாணத்தில் மக்களை எவ்வாறு கட்டியெழுப்ப வேண்டும் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மக்களுக்கான கல்வி அமைய என்ன செய்ய வேண்டும் என்பதும் எங்கே குளம் கட்ட வேண்டும் எந்த அபிவிருத்தியை கூட்டினால் மக்கள் நன்மை அடைவார்கள் என்பது குறித்து எங்களுக்கு திட்டம் இருக்கின்றது.

திட்டம் இல்லாமல் அரசியலுக்காக அல்லது சம்பந்தருடைய மரணத்திற்குப் பிற்பாடு பின்னர் தலைவராவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை எங்களுடைய மக்களோடு உறுதியாக இருந்து பணி செய்து அவர்களுடைய தலைவர்கள் அவர்களுடைய கடந்தகால தலைவர்களை விட்ட பிழைகளை சரி செய்து இந்த மண்ணிலே வாழக்கூடிய நம்பிக்கையை கட்டியெழுப்ப கூடிய மக்கள் கூட்டத்தை நாங்கள் உருவாக்குவதற்கு பாடுபடுகிறோம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *