சுடர் ஒளி ஆசிரியர் வித்தியாதரன் பொலிசாரினாலேயே கைது

vithyatharan.jpgசுடர் ஒளி ஆசிரியர் ந. வித்தியாதரன் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கல்கிசைப் பகுதியில் வைத்து கடத்திச் செல்லப்பட்டதாக முன்னர் வெளியான செய்திகளை மறுத்துள்ள பொலிசார் அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற புலிகளின் வான் தாக்குதல் தொடர்பில் சம்பந்தம் உள்ளதாகவே இவர் கைதாகியுள்ளதாக ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
 
 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • tamilspeek
    tamilspeek

    வித்தியாதரன் தான் ஏரோநோட்டிகல் புலிகளுக்கு படிப்பித்தவரோ? அல்லது இறைவரி திணைக்களத்து அடிக்கசொல்லி கொழும்பிலிருந்து நெட்டாங்க்கு அகலாங்க்கு கணித்துக்கொடுத்தவரோ? கடத்தப்படுவதற்கும் கைது செய்யப்படுவதற்கும் அதிலும் பத்திரிக்கையாளரை அழைத்து செல்வதற்கும் வேறுபாடு இருக்கு. வித்திக்கு நல்லகாலமிருந்தபடியால் கடத்திக்கொண்டு போகும்போது அக்கம்பக்கத்தில் தெரிந்தவர்கள் நின்றிருந்தபடியால் பிழைத்தார். இல்லையென்றால் லசந்தா போன்ற சிங்கள பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்களையே கொலை செய்த மகிந்தசிந்தனைக்கு இவர் பெரிய தீனியில்லை.

    Reply
  • அருட்சல்வன் வி,
    அருட்சல்வன் வி,

    தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானத்தாக்குதல் நடத்தப்பட்ட அடுத்த நாள் சுடர்ஒளி, இது தற்கொலைத் தாக்குதலாக இருக்கலாம் என்ற செய்தியை மையமாகக் கொண்டே இந்த விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Reply
  • Suresh-MM.A
    Suresh-MM.A

    ஆமாமா! பத்திரிகையாளர் வேடத்தில் புலிகள் ஆட்களை வைத்து எதுவும் செய்யத்தெரியாத பாப்பாதானே…? எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களோடு பத்திரிகையாளர் வேடத்தில் ஹெலிக்கப்டரில் சென்ற புலிக்குட்டிதான் நடுவானில் குண்டை வெடிக்கவைத்து முஸ்லீம்களின் தலைமை அழிக்கப்பட்டது மறைக்கக்கூடிய விடையமா என்ன?

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • santhanam
    santhanam

    இவர் லசந்தாவை விடபெரியாள். ஈழநாடு பத்திரிகையை அழித்து பலமான அன்னியசக்திகளாள் உருவாக்கபட்ட பத்திரிகை தான் உதயன். பின்பு இருதரப்பாலும் தேசியம், பேரினவாதம் வளர்க்கபட்ட பத்திரிகை. இதில் சூழ்ச்சி ஒன்று இருக்கிறது.

    Reply
  • அருட்சல்வன் வி,
    அருட்சல்வன் வி,

    சுடர் ஒளி நாளிதழின் ஆசிரியரான என். வித்தியாதரன் கடத்தப்படவில்லை என்றும் கடந்த 20 ஆம் திகதி புலிகள் கொழும்பில் நடத்திய விமானத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று முற்பகல் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:

    கொழும்பில் புலிகள் விமானத் தாக்குதல் நடத்திய சந்தர்ப்பத்தில் வித்தியாதரனின் தொலைபேசிக்கு வழமைக்கு மாற்றமாக கூடுதலான அழைப்புக்கள் வந்துள்ளன. இதனடிப்படையில் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரிலேயே விசாரணைக்காக அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்படும் போது இவர் ஓர் ஊடகவியலாளர் என்றோ ஒரு பத்திரிகையின் ஆசிரியர் என்றோ பொலிஸார் அறிந்திருக்கவும் இல்லை. இவர் நிரபராதியாக இருந்தால் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்படுவார். குற்றவாளியாக இருந்தால் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்றும் அமைச்சர் கூறினார்.

    Reply
  • palli
    palli

    எது எப்படியோ தெரியவில்லை இருப்பினும் ஊடகவியாளன் என்பதாலும் தமிழன் என்பதாலும் இந்த விடயத்தை யார் செய்திருந்தாலும் கண்டனத்துக்கு உரியதே. (வேறு எம்மால் என்னதான் முடியும்)

    Reply
  • கந்தப்பு
    கந்தப்பு

    //இந்த விடயத்தை யார் செய்திருந்தாலும் கண்டனத்துக்கு உரியதே// பல்லி.

    பல்லி! நீங்கள் இப்படி சில புள்ளிகளில் எனது கருத்தோடு வந்து இணைகிறீர்கள் என்பது சந்தோசம்தான். ஆனாலும் போராட்டம் தலைமை பற்றிய சில புரிதலில்த்தான் நீங்கள் தள்ளி நிற்கிறீர்கள்.

    இப்படிக்கு உண்மையுள்ள கந்தப்பு பெருமாள்

    Reply
  • j.jenney
    j.jenney

    இப்படியே இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் கடத்தல் நாடகமும் காணாமல் போதலும் கைதாகலும் கொலைகளும் மொத்தத்தில் ஊடக தர்மத்தையே குழி தோண்டிப் புதைத்துவிட்டது.
    இதில் சிவராம் என்ன? லசந்தா என்ன? வித்தியாதரன் என்ன? தொடரப் போகும் அரச பயங்கரவாதமென்ன? எல்லாவற்றிற்கும் ஒரே முகமூடி இலங்கை அரசின் பயங்கரவாத ஒழிப்புத்தான். இதை நியாயப்படுத்த அரசு தரப்பில் மட்டுமல்ல ஜனநாயகத்தின் மத்தியிலும் அரசு ஆதரவுக் குரல்கள்.
    நாட்டில் பேரினவாத அரசுடன் அரசு யந்திரங்களும் -பெரும்பான்மையான சிங்கள பேரினவாத கட்சிகளும் அதன் ஆதரவு சக்திகளும் ஓரணியில் நிற்க புலியெதிர்ப்பாளர்களும்-ஜனநாயகசக்திகளும் மாற்று வழியைத் தேடாமல்-அல்லது பொது எதிரி யார் என்பதை இனம் கண்டு அதற்கெதிராக அடுத்தகட்ட நகர்வை எடுக்க முடியாமல் ஒளிக்கத் தெரியாமல் விதானையார் வீட்டிற்குள் ஒளித்த கதையாக இலங்கையரசுக்கு இவர்களும் முண்டு கொடுத்து நிற்க, இப்படியே எமது மக்களிற்கு நடக்கும் அநீதிகளைஅவலங்களை வெளியே கொண்டு வரும் ஊடகங்களையும் கடைசி துரும்புவரை வேரறுத்துத்தான் இந்த அரசு அழிக்கப் போகின்றதா?

    இவற்றை இந்த உலக நாடுகளும் நீதிக்காக குரல் கொடுக்கும் சர்வதேச ஊடகங்களும் தொடர்ந்தும் பார்த்துக் கொண்டுதான் இருக்கப்போகின்றனவா?
    இதுவரை புலிகளின் பிடிக்குள் அவலப்பட்ட எம்மக்கள் தொடர்ந்து மகிந்த சிந்தனைக்குள் மடியத்தான் வேண்டுமா?
    இதற்கான மாற்றுக் குரல்களையோஅன்றி மாற்றுத் திட்டத்தைதோ எம்மவர்களின் பிரதிநிதிகளாக யாராவது ….
    கண்டிப்பாக சுப்பர் மேன் வரமுடியாது. ஆனால் சர்வதேசம் தனது நலன்களை மட்டும் பார்க்காமல் அங்குள்ள மக்களின் அழிவைப்பார்த்தால் உடன் யுத்தத்தை நிறுத்தி சம்பந்தப்பட்டவர்களை ஓறிடத்தில் இருத்தி பேசி முடிவுக்கு கொண்டு வரலாம்.வரவேண்டும். இல்லாவிட்டால் மக்களுமில்லை, பிரதேசமுமில்லை, நியாயங்களுமில்லை, இவற்றை வெளிக்கொணர ஊடகங்களுமில்லை, ஒருஊடகவியளாரகளும் மிஞ்சப் போவதுமில்லை, ஊடக சுதந்திரம் மட்டுமல்ல: தனிமனித சுதந்திரமும் அடியோடு வேரறுக்கப்பட்டுவிடும்.

    Reply
  • பகீ
    பகீ

    முதலில் அவர் கடத்தப்பட்டார் எனவும் தமக்கு எதுவும் தெரியாது என்கிறார் பொலிஸ் அதிபர் ரஞ்சித் குணசேகரா.
    பின்னர் இல்லை இல்லை தாமே கைது செய்ததாக சொல்கிறார்.
    இன்னும் சில மணித்தியாலங்களின் பின்னரோ அவர் வான் தாக்குதலின் காரனமாக கைது செய்ததாகவும் அவர்கைது செய்யப்படும் போது அவரை யார் என தமக்குத்தெரியாது என்கிறார் அமைச்சர். ஆனால் கடந்த ஞாயிறு அன்று அவரை 6 மணித்தியாலங்கள் விசாரணை செய்ததாக சி.ஐ.டி கூறுகிறது!!
    ஏதாவது முக்கிய சம்பவங்கள் நடந்த நேரங்களில் பத்திரிகையாளர்களின் தொலைபேசிகள் ‘வழமைக்கு மாறாக’ பேசுவது உலக வழமை என்பது அமைச்சருக்கு தெரியாதோ? இதில அவங்கள் தான் ஜோக் அடிக்கிறாங்கள் எண்டால் எங்கட ஆக்களும் இங்க தாங்கேலாமல் இருக்கு!!

    Reply
  • அகிலன் துரைராஜா
    அகிலன் துரைராஜா

    இறைமையுள்ள ஒரு நாட்டின் கொள்ளைகள் சட்டதிட்டங்களை சீர்குலைக்கக் கூடிய செய்திகளும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் சட்டத்தின் முன்னிலையில் தண்டிக்கப்படுகின்ற வேளையில் அதனை அரசின் அத்து மீறல் என்று கூறுவது எந்த வகையில் நியாயமாகும்?ஒரு போலீஸ் உத்தியோகத்தரோ வழக்கறிஞரோ குற்றமிழைக்கின்ற வேளையில் அவரும் சாதாரண மனிதன் போன்று விசாரணைக்கும் தண்டனைக்கும் ஆளாவதில்லையா? அதே போன்றுதான் ஊடகவியாளர்கள் எனும் தொழிலாளர்களும் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படுகையில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும் குற்றம் நிரூபிக்கப்படுகையில் தண்டனைக்கு உட்படுத்தப்படுவதும் ஒன்றும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்க முடியாது.–அகிலன் துரைராஜா நல்லூர் யாழ்ப்பாணம்

    Reply