ஈழப்பிரச்சினைக்கான போராட்டமா? திமுக ஆட்சிக்கெதிரான போராட்டமா-கருணாநிதி

karunanithi.jpgஉச்ச நீதிமன்றம் விசாரணைக் கமிட்டியை அமைத்துள்ள சூழ்நிலையில் வழக்கறிஞர்கள் பொறுமை காக்கக் கூடாதா என முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிக்கை : சென்னை உயர் நீதிமன்றத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அறப்போர் என்று வழக்கறிஞர்கள் தொடங்கினர். பிறகு நீதிமன்றத்துக்குள் சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்கறிஞர்கள் முட்டை வீசியதாக வழக்கு அந்த வழக்கின் விஸ்வரூபமாக காவல்துறை-வழக்கறிஞர்கள் மோதல் என வன்முறைகள் நடைபெற்று, இறுதியாக உச்ச நீதிமன்றம் வரை இப்பிரச்னை சென்றுள்ளது.

தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் உதறித் தள்ளிவிட்டது. சில காவல்துறை அதிகாரிகளை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சென்னையிலிருந்து வேறு ஊர்களுக்கு இந்த அரசு மாற்றிவிட்டது. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் ஸ்ரீகிருஸ்ணா தலைமையில் விசாரணைக் கமிட்டியையும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த கமிட்டியின் முடிவை எதிர்பார்த்து அரசு காத்திருக்கிறது. வழக்கறிஞர்கள் மட்டும் பொறுமை காட்டலாகாதா? குறிப்பிடப்படும் இழப்பீடு தருவதற்கும், அதனை இருசாராரும் பெறுவதற்கும் அரசு தொகையும் ஒதுக்குகிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையெல்லாம் செயல்படுத்த அரசு தயாராக உள்ளது.

அதேபோல் உச்ச நீதிமன்ற கருத்தை ஏற்று வழக்கறிஞர்கள் அனைவரும் மார்ச் 2-ம் தேதி நீதி மன்றங்களுக்கு செல்வதுதானே முறையாகும். இல்லையெனில், இது இலங்கைத் தமிழர் பிரச்னைக்கான போராட்டமல்ல இங்குள்ள தி.மு.க. ஆட்சிக்கு எதிரான போராட்டம் என்றுதான் உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது என கருணாநிதி கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • palli
    palli

    தங்கள் மீது ஈழ தமிழருக்கு மிகமதிப்புண்டு. இப்போதும் இருக்கிறது. அது தொடரவே செய்யும். ஆனால் சிலவிடயத்தில் தாங்கள் தவறு செய்வதுபோல் பல்லிக்கு படுகிறது. ஜயா தாங்கள் ஈழ தமிழர்க்கு பலனெருக்கடியையும் கொடுத்தது உன்மைதானே. அன்று இந்திரா காந்தி பார்த்தசாரதியை இலங்கை பிரச்சனையில் சிறப்பு பிரனிதியாய் நியமித்தபோது தாங்கள் அதுக்கு பல வழியில் வில்லங்கம் செய்த்தை பலர் அறிய வாய்ப்பில்லை. அதுக்கான காரணம் எம் ஜி ஆர் வலது கரமான எஸ் டி எஸ் பார்த்தசாரதியின் நெருங்கிய நண்பர் அதனால் ஈழ பிரச்சனையில் தங்களை விட பார்த்தசாரதி எஸ் டி எஸ் தான் தொடர்புபடுத்தினார் என்பதுதானே. இருப்பினும் தங்கள் அமைப்பினர் சிலர் (வை கோ அல்ல) கட்சி வேறுபாடின்றி இயக்க உதவிகளை செய்ததையும் ஈழதமிழர் மறக்கமுடியாது. இருப்பினும் தாங்கள் குட்டிமணி தங்கதுரை விடயத்தில் தவறியிருக்கிறீர்கள். பத்மநாபா விடயத்தை எப்படி மறக்கமுடியும். எல்லாதுக்கும் மேலாக அமைதிபடை திரும்பியபோது புலிக்கு ஆதரவாய் செயல்பட்டதை தமிழகம் மட்டுமல்ல ஈழமும் அறியும். அதுக்கு நீங்கள் சொல்லிய காரனம் எனது சகோதரியை கற்பழித்துவிட்டும்; என் இனத்தை கொன்றுவிட்டும், என் தாய் தந்தையை அனாதையாக்கிய அமைதிபடை என தாங்கள் பேசியதை கேட்டி மனம்மகிழாத ஈழதமிழன் கிடையாது. விடயத்துக்கு வருகிறேன். இன்று அங்கு என்ன நடக்கிறது. ஏன் தாங்கள் அமைதி காப்பான்; கனிமொழிகூட அமதியான ரகசியம் என்ன. உங்களது (தி மு க ) அமைச்சர்கள் இல்லாமல் டெல்லியால் ஆட்சி செய்ய முடியுமா?? உங்களது கேள்வி? தி மு க அரசை கலைக்கும் போராட்டமா அல்லது ஈழபிரச்சனை சம்பந்தமான போராட்டமா என்பதே, உன்மை என்னவெனில் தாங்கள் அன்று இருந்து இன்றுவரை உங்களது அறிவு திறனால் ஈழபிரச்சனையை தங்கள் கட்சி தேவைக்கே பாவித்துள்ளீர்கள். அதில் சிலதடவை தடக்குபட்டதும் உண்டு. இருப்பினும் ஈழ தமிழருக்கு தமிழகத்தை விட்டால் கைகொடுக்க யாரும்இல்லை என்பதை புரிந்துகொண்டு ஏதாவது செய்ய முன்வர வேண்டாமா?? இது தங்களால் முடியும் என்பது மறுக்க முடியாத உன்மை.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    ………………. சனத்தைப் பேக்காட்ட ஒரு போராட்டம் வேணும். அது இலங்கைப் பிரச்சனைக்கான போராட்டமோ இல்லையெண்டால் திமுகவைக் கவிழ்கிற போராட்டமோ எல்லாம் ஒண்டுதான். சனத்துக்குப் போராட வேணும் அவ்வளவுதான்

    Reply