29 டொலருக்கு மசகு எண்ணெயினை கொள்வனவு செய்யும் அரசு பெற்றோலை 120 ரூபாவுக்கு விற்கின்றது – ரவி எம்.பி.

ravi-karunanayaka.jpgஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தின் போது 43 டொலர்களுக்கு மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டு ஒரு லீற்றர் பெற்றோல் 75 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று 29 டொலர்களுக்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகின்ற போதிலும் பெற்றோல் ஒரு லீற்றர் 120 ரூபாவுக்கே விற்பனை செய்யப்படுகின்றது.

அரசாங்கம் ஏன் மக்களுக்கு இவ்வாறான அநீதியை இழைக்கின்றது என்று ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். எரிபொருள் தொடர்பான சிறிய கேள்விக்கு பதிலளிப்பதற்காக அமைச்சர் உலகத்தையே சுற்றிவருவதாகவும் ரவி எம்.பி. பரிகாசம் செய்தார். பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 க்கு சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் வாய்மூல வினா விடைக்கான நேரத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • palli
    palli

    இதில் நீங்கள் கூட விலை கொடுத்து வாங்கிய முட்டாள் தனத்தை சொல்லுகிறீர்களா?? அல்லது அவர்கள் விலை கூட விற்க்கும் ஏமாற்றுதனத்தை அம்பலபடுத்துகிறீர்களா??

    Reply
  • santhanam
    santhanam

    இந்த அரசியல்வாதிகளிற்கு பணவீக்கம் என்றால் என்ன என்று தெரியாது போல:

    Reply
  • பகீ
    பகீ

    எங்கே 29 டொலருக்கு மசகுஎண்னெய் விற்கிறார்கள்? நேற்றைய விலை $44 அல்லவா? அத்துடன் ஸ்ரீலங்கா பெற்றோலியம் கூட்டுத்தாபனம் $100க்கு விலையை Hedge பண்ணி பின்னர் நீதிமன்றம் தலையிட்டுத் தடுத்திருக்கிறது!

    Reply
  • rajai
    rajai

    ஆமா! இவெங்க ஆட்சியிலெ சனெத்திக்கு சும்ம கொடுத்த மாதரி பேசுறாரு…. ………….

    Reply
  • SUDA
    SUDA

    மிஸ்ரர் ரவி!
    இந்த அரசு இவ்வாறான விலையேற்றத்தின் மூலம் யுத்தத்தின் விலையை மக்களின் தலையில் சுமத்துகிறது. ஆனால் நீங்களோ சமாதான காலத்திலும் அல்லவா மக்களின் தலையில் சுமை ஏற்றினீர்கள். எரிபொருளுக்கு மட்டுமல்ல அரிசி, சீனி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கும் சேர்த்து அல்லவா மக்களின் தலையில் சுமையேற்றினீர்கள்!!.
    அது சரி நீங்கள் உணவு கூட்டறவு நுகர்வோர் விவகார அமைச்சராக இருந்து செய்த ஊழல்களையெல்லாம் மறந்து விட்டீர்களோ? தாங்கள் அதிரடியாக “சதோச சுப்பர்” திறந்து அனைத்தும் அதே வேகத்தில் மூடப்பட்ட சங்கதி அனைவரும் அறிந்ததே. தங்களுக்குத் தெரிந்த பண முதலைகளிடம் தரம் குறைந்த பொருட்களை அதிக விலைக்கு(உங்கள் கமிசனும் சேர்த்து) கொள்வனவு செய்வதும் தங்களுக்குத் தெரிந்தவர்களின் பாவனைக்குதவாத கட்டிடங்களுக்கு வாடகை எனும் பெயரில் பெருமளவு பணம் (உங்கள் கமிசனும் சேர்த்து) கொடுப்பதுமே உங்களின் நோக்கமாக இருந்தது. உதாரணமாக மட்டக்களப்பு நகரிலே மிக நீண்ட காலங்களாக பூட்டப்பட்டுக்கிடந்த முன்னாள் பா.உ திரு. ஜோஸப் பரரராஜசிங்கத்துக்குச் சொந்தமான சுப்பராஜ் எனும் திரையரங்கிலும் இவ்வாறான “சதோச சுப்பர்” திறக்கப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் குறித்த கட்டிடத்துக்கு மின் இனைப்பு இருக்கவில்லை.

    இதெல்லாம் மீடியாக்கள் மூலமாக சந்திக்கு வந்த பழைய சங்கதிகள். இவற்றையெல்லாம் ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் பேய் அரசாண்டால் பிணம் தின்னும் காட்சிகளும் இடம் பெறும். ஆக இலங்கையில் நல்ல ஆட்சியாளர்களைக் காணமுடியவில்லை. காலத்திற்கு காலம் மாறி மாறி ஆட்சியேறும் அரசாங்கங்கள் மக்களைச் சுரண்டுவதும் எதிரணிக்கு வந்து விட்டால் நடப்பு அரசின் ஊழல்களை சுட்டிக்காட்டுவதன் மூலம் தாங்கள் செய்து வந்த ஊழல்களை மறைக்க முற்படுவதும் வழமையானதே.இதற்கு நீங்களோ மஹிந்த குடும்பமோ விதிவிலக்கல்ல.

    Reply
  • Kullan
    Kullan

    இன்றைய அரசுக்கும் ஐ.தே.க க்கும் மசகு எண்ணையும் பெற்ரோலும் தான் பிரச்சனை. இது முதலாளித்துவ நோக்கு கொண்ட அரசுகள் என்பது அப்பட்டமாகக் தெரிகிறது. ஏழைவிவசாயினுடைய பிரச்னைகளைப் பற்றி எப்போ ஆராய்ந்தீர்கள். விவசாயிக்கு பெற்றோலை விட மண்எண்ணையே அதிகம் தேவை. தம்மை இடதுசாரி என அருவளையும் ஆமாரையும் கொண்டுள்ள ஜேவிபி எந்த இடதுசாரிக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறது. இனவளிப்பை ஊக்கிவிக்கிறது. முக்கியமாக தெற்கில் ஒரு பெரும் புரட்சி தேவைப்படுகிறது

    Reply