பண மோசடி செய்த யுவதிக்கு பொல­ன­றுவை நீதி­மன்றம் 18 ஆண்­டுகள் கடூ­ழிய சிறைத்­தண்­டனை!


பல்­க­லைக்­க­ழகம் செல்லும் வரையில் வங்கி ஒன்றில் பணி­யாற்றி பண மோசடி செய்த யுவதி ஒரு­வ­ருக்கு பொல­ன­றுவை நீதி­மன்றம் 18 ஆண்­டுகள் கடூ­ழிய சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது.

உயர்­தரப் பரீட்­சையில் மாவட்ட ரீதியில் திற­மை­களை வெளிப்­ப­டுத்தும் மாணவ, மாண­வி­ய­ருக்கு மக்கள் வங்­கியில் தற்­கா­லிக அடிப்­ப­டையில் பணி வழங்­கப்­ப­டு­கின்­றது.

இவ்­வாறு பணிக்கு சென்ற யுவதி ஒருவர் சுமார் முப்­பது இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு ­கி­றது.

குற்­றச்­சாட்­டுக்கள் நிரூ­பிக்­கப்­பட்­ட­தனைத் தொடர்ந்து குறித்த யுவ­திக்கு உயர் நீதி­மன்ற நீதி­பதி நிமால் ரண­வீர 18 ஆண்­டு ­கால சிறைத்­தண்­டனை விதித்­த­துடன், 90 இலட்ச ரூபா நட்­ட­ஈடு செலுத்­து­மாறும் உத்­த­ர­விட்­டுள்ளார்.

பொல­ன­றுவை பெந்­திவல ஜயந்­தி­புர பிர­தே­சத்தைச் சேர்ந்த சாந்­தனி அபே­சூ­ரிய என்ற யுவ­திக்கே இவ்­வாறு தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த மோச­டிக்கு உத­விய அவ­ரது சகோ­த­ர­ரான இந்­துனில் சமன் குமா­ர­விற்கும் 18 ஆண்­டு ­கால கடூ­ழிய சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டில் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு தெரிவாகியது குறித்த யுவதி 2001 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதத்தில் இந்த மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டு சட்டமா அதிபரினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட் டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு