06 மாத காலப் பகுதியில் 56,887 டெங்கு நோயாளர்கள்!


2017 ஆம் ஆண்டின் கடந்த 06 மாத காலப் பகுதியில் டெங்கு என்று சந்தேகிக்கப்படும் 56,887 நோயாளர்கள் தொடர்பில் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவுக்கு பதிவாகியுள்ளது.

சுமார் 42.55% டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளது.

அதே நேரம் 16 வாரத்திற்குள்ளேயே அதிக டெங்கு நோயாளர்கள் தொடர்பில் பதிவாகியுள்ளது.

இதன்மூலம் நுளம்பு பரவும் இடங்களைச் சுற்றாடலில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என்பது தௌிவாகின்றது என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரம் காய்ச்சல் ஏற்பட்டு மூன்று நாட்கள் தாண்டியும் இருந்தால் உடனடியாக வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்வது அவசியமாகும் என்று தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு கூறியுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு