பிரித்தானியா கூட்டாட்சிக்கு தயாராகிறது! தொழிற் கட்சி மற்றும் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கலாம்!!


Jeremy_Corbyn_Votingபிரித்தானிய தேர்தல்: ஆளும் கொன்சவேடிவ் கட்சிக்கு எதிர்பாராத வீழ்ச்சி! தொழிற்கட்சி தலைவர் ஜெரிமி கோபினின் தலைமைக்கு அமோக வெற்றி!! பிரித்தானியா கூட்டாட்சிக்கு தயாராகிறது!!!

பிரித்தானியா மற்றுமொரு கூட்டாட்சிக்கு தயாராகின்றது. நேற்று யூன் 8 பிரித்தானியாவில் நடைபெற்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மைப் பலத்தை பெறப்போவதில்லை என தேர்தலில் வாக்களித்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இக்கருத்துக்கணிப்புகளின் படி ஆளும் கொன்சவேடிவ்கட்சி 17 ஆசனங்களை இழந்து 314 ஆசனங்களைப் பெறும் எனவும்; தொழிற்கட்சி 34 ஆசனங்களை மேலதிகமாக வெற்றிகொண்டு 266 ஆசனங்களைப் பெறும் எனவும் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி தொழிற்கட்சி 22 ஆசனங்களையும் கொன்சவேடிவ் கட்சி 10 ஆசனங்களையும் டெமொகிரட்டிக் யூனியனிஸ்ட் பார்ட்டி  2 ஆசனங்களையும்  ஸ்கொடிஸ் நஷனல் பார்ட்டி 1 ஆசனங்களையும்  பெற்றுள்ளன. இந்த ஆசனங்கள் அனைத்தும் கடந்த பாராளுமன்றத்தில் அந்த அந்த கட்சிகளினால் தக்க வைக்கப்பட்ட ஆசனங்களே.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு