நீதி மறுக்கப்பட்ட மற்றுமொரு படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவு!


மன்னார் வங்காலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 11 ஆம் ஆண்டு நினைவு இன்றாகும்.

வங்காலை மக்களின் நினைவில் நீங்காத ஓர் அதிர்வலையாக காணப்பட்டுவரும் இப்படுகொலை சம்பவம் இடம்பெற்று 11 ஆண்டுகள் கடந்த போதிலும், இப்படுகொலை குற்றவாளிகள் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்.

மன்னார் வங்காலை தோமஸ்புரி கிராமத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் திகதி அதிகாலை, இரு சிறுவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மிகக் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

மன்னாருக்கு தென் கிழக்கே வங்காலை பத்தாம் வட்டாரத்திலுள்ள தோமஸ்புரி கிராமத்திலேயே ஒரு வீட்டில் இந்தக் கோரக்கொலைகள் இடம்பெற்றிருந்தன.

வீட்டினுள் நுழைந்த படையினர் வீட்டுக்காரரின் மனைவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி மிகக் கொடுமையாகச் சித்திரவதை செய்த பின்னர் அனைவரையும் மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்தக் கொடூரச் சம்பவத்தால் வங்காலை மக்கள் மிகவும் விசனமடைந்ததுடன், குற்றவாளிகளை தங்களுக்கு தெரியுமெனவும் அவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் பதினொரு ஆண்டுகள் கடந்தும் குறித்த படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து
 1. vanni arrachi on June 9, 2017 9:40 am

  கொலை கற்பழிப்பு இலங்கை இராணுவத்திற்கு மட்டுமல்ல எந்த இராணுவத்திற்கும் புதிய செய்தி அல்ல.

  ஆனால் வங்காலை மாட்டின் மூர்த்தியும் அவர் குடும்பகொலை இலங்கை இராணுவத்தின் நடவடிக்கை அல்ல.

  இலங்கை இராணுவத்தின் கொலைபோல் காட்டுவதற்காக இராணுவசீருடை சப்பாத்து இந்த குழு பாவித்திருக்கிறது.அத்துடன் நிற்கவில்லை கமரா கயிறு ஆண்யுறையும் கைவசம் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

  இதுவே நடந்த கொலையில் அதிஉச்ச மிலேச்சத்தனத்தை கொண்டிருக்கிறது.இதில் எடுக்கப்பட்ட படங்கள் பல்லாயிரம் பிரதிகள் புலிகளின் இறுதிக்காலங்களில் சுகந்திரபுரம் அச்சகத்தில் இலங்கையிராணுவத்தால் கைப்பற்றப்பட்டது.

  //வீட்டினுள் நுழைந்த படையினர் வீட்டுக்காரரின் மனைவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி மிகக் கொடுமையாகச் சித்திரவதை செய்த பின்னர் அனைவரையும் மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.// என்பது ஒரு வஞ்சகமான செய்தி.

  இதை செய்தவர்கள் முள்ளிவாய்காலில் பலியாகியிருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டுக்கு தப்பிஓடியிருக்க இருக்க வேண்டும்….!

  //இந்தக் கொடூரச் சம்பவத்தால் வங்காலை மக்கள் மிகவும் விசனமடைந்ததுடன் குற்றவாளிகளை தங்களுக்கு தெரியுமெனவும் அவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் பதினொரு ஆண்டுகள் கடந்தும் குறித்த படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.// மற்றும் படி இந்த செய்தியை எங்கு எடுத்தீர்களோ!அவர்களின் பீலா.

  இதில் எந்தவித உண்மையும் இல்லை.

  இந்த செய்தியை செல்வம் அடைக்கலநாதன் இருந்த “தேசம்நெற்” பெற்றுக்கொண்டது?.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு