வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள மக்கள் பணத்தை கையாளும் இலங்கை அரசாங்கம் !

“அரசாங்கம் மக்கள் வங்கிகளில் வைப்பில் வைத்த பணங்களை எடுத்து கையாளுகின்றது.”  என இலங்கை வங்கி சங்க மட்டக்களப்பு தலைவர் எம்.ஹேமகுமார்  தெரிவித்தார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இலங்கை வங்கி சங்கம் மற்றும் தொழிற் சங்கங்கள் ஒன்றினைந்து கோட்டா வீட்டுக்கு போ என்ற தொனிப் பொருளில் இன்று புதன்கிழமை (20) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எம்.ஹேமகுமார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்

அரசாங்கம் பல பிழையான தீர்மானங்களை எடுத்து அதில் பல நஷடங்களை அனுபவித்ததால் தற்போது வங்கியில் மக்கள் வைப்பில் வைத்துள்ள பணத்தை எடுத்து கையாள்கின்றனர். அதனால் வங்கி மாபெரும் அழுத்தத்தில் இருக்கின்றது.

அதேவேளை அன்னியச் செலாவணி குறைந்த அளவில் இருக்கின்றது டொலரின் விலையை குறைத்து வைத்தால் எல்லாம் கறுப்பு பணமாக எல்லாம் வேறு வேறு உண்டியல் முறையில் வந்து கொண்டிருக்கின்றது அதனாலும் வங்கிகளில் அன்னியச் செலாவனியின் இருப்பு குறைந்திருக்கின்றது. எனவே அரசுக்கு கடன் செலுத்த பல மில்லியன் தேவை அதற்காக அரச நிறுவனங்களைவ விற்கபோகின்றனர் இதில் கொழும்பு துறைமுகம் மற்றும் காப்புறுதி திணைக்களம், ரெலிகோம், உடபட பல நிறுவனங்கரளை விற்பதற்கு உள்ளனர் ஆகவே மக்களாகி நாங்கள் ஒன்று சேர்ந்து இதனை விடக்கூடாது அதற்கு இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடக்கும் அதேவேளை 28ம் திகதி எல்லா தொழிற்சங்கங்களும் ஒன்றினைந்து அடையாள வேலை நிறுத்தத்தை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *