யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!


யுத்தம் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், அவர்களை நினைவு கூறவும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக அஞ்சலி நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்த அருட்தந்தை எழில் ராஜேந்திரன் பல தடவைகள் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை பாதிக்கும் எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே அஞ்சலி நிகழ்வுகளை தடையின்றி நடத்துவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறும் ஜனாதிபதியிடம் மனித உரிமை ஆணைக்குழு கோரியுள்ளது.

உங்கள் கருத்து
  1. BC on June 12, 2017 12:40 pm

    அஞ்சலி நிகழ்வுகளை தடையின்றி நடத்துவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறும் ஜனாதிபதியிடம் மனித உரிமை ஆணைக்குழு கோரியுள்ளது.

    அப்படியே பிராபகரன் பிறந்த நாள் கொண்டாட்டங்களை நவம்பர் மாதம் முழுவதும் இலங்கையில் சிறப்பாக கொண்டாடுவதற்கு தேவையான சகல வித வசதிகளை செய்து கொடுக்குமாறும் இலங்கை ஜனாதிபதியிடம் மனித உரிமை ஆணைக்குழு ஆணை இட வேண்டும்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு