வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா பதவி விலகினார்!


வடமாகாண  கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராசா, தனது  பதவி விலகல் கடிதத்தை, கட்சித் தலைமையிடம் இன்று கையளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடியும் வரையில், தான் அப்பதவியை இராஜினாமா செய்யப்போவதாக, அவரது இராஜினாமாக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவிக்கின்றது.

வடமாகாண அமைச்சர்களான தம்பிராஜா குருகுலராசா மற்றும் பொ.ஐங்கரநேசன் ஆகியோருக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை, வடமாகாண சபையில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் விசாரணைகள் தொடர்பான விவாதம், நாளை மறுதினம் புதன்கிழமை (14) இடம்பெறவுள்ள நிலையிலேயே, குருகுலராசா, தனது பதவியைத் தற்காலிகமாக இராஜினாமா செய்துள்ளார்.

உங்கள் கருத்து
  1. Mohanasundarm on June 12, 2017 8:41 pm

    If he’s serious, he should have submitted the resignation letter to the cheif Minister, not to the party leader. This is a joke.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு