இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு பாக். சாரதியால் ஏற்பு

cricket_pakisthan.jpg இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிட்டட் விடுத்த அழைப்பை இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் வாகனச் சாரதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

நிறுவனத் தலைவர் பந்துல பத்மகுமார நேற்று குறித்த வாகனச் சாரதியுடன் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு உரையாடினார். இதன்போதே நிறுவனம் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். வாகனச் சாரதியான முஹம்மட் கலீலுக்கான அழைப்பு, இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ஊடாக கடந்த வாரம் அனுப்பப்பட்டிருந்தது.

உங்களின் துணிச்சலான வீரமிக்க செயற்பாட்டுக்கு நாங்கள் தரும் கெளரவம் இது என குறித்த அழைப்பிதழில் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்களை காப்பாற்ற முடிந்ததையிட்டு மட்டில்லா மகிழ்ச்சியடைவதாக வாகனச் சாரதி, நிறுவன தலைவருடனான தொலைபேசி உரையாடலின்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

38 வயதுடைய இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையில் வாகனச் சாரதியாக சுமார் 22 வருடங்களாக கடமையாற்றி வருகின்றார். இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். இரண்டு ஆண்கள் ஜவாத் (10), உஸாமா (13), இரண்டு பெண்கள் ஷவியா (7), லியவா (4).

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    விண்வெளிக்கு வண்டில் மாடு அனுப்பிய மகிழ்ச்சி மகிந்தாவுக்கும்: அரசுக்கும்; ஏன் சில தமிழருக்கும்தான். நல்ல விடயம்தான் இதன் நோக்கம்
    சரியானதாக இருந்தால் மட்டும்.

    Reply