கிளிநொச்சியில் ஆளுமை விருத்திக் கருத்தரங்கும் பயிற்சியும்!


Character_Buildingவடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்விநிலை மிக மோசமடைந்துள்ளது. இந்நிலையை மீளக் கட்டியெழுப்புவது என்பது ஒரு நீண்டகால படிமுறை மாற்றங்களினூடாகவே ஏற்படுத்த முடியும். இந்த மாற்றங்கள் எமது கல்வி வளர்ச்சியின் அத்திவாரக் கட்டமைப்பு கூறுகளான மாணவர்களின் ஆசிரியர்களின் முழுமையான ஒத்துழைப்புடனேயே சாத்தியப்படும்.

கல்வி வளர்ச்சி என்பது கடந்தகால வினாத்தாள்களை மீள மீளச் செய்து பரீட்சையில் சித்திஅடைவது என்று குறுக்கப்பட்டதன் விளைவையே இன்று நாம் காண்கின்றோம். இந்நிலை மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதற்கான ஒரு முதற்படியாக இந்த ஆளுமை விருத்தி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. லண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் Think 2wice அமைப்பு லிற்றில் எய்ட் அமைப்புடன் இணைந்து இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. Think 2wice  ஆளுமை விருத்தியின் அவசியத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றது. கற்பித்தலுடன் ஆளமை விருத்தியும் இணைத்து கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.

இக்கருத்தரங்கு மற்றும் பயிற்சிக்கான ஆவணங்களை நளினி ரட்ணராஜா திங் ரு வைஸ் ற்காக தயாரித்து உள்ளார். நளினி ரட்ணராஜா ஒரு மனித உரிமை, பெண் உரிமை செயற்பாட்டாளர். ஆவணப்படங்களைத் தயாரித்தவர். மனித உரிமைகள், பெண் உரிமைகள் தொடர்பான சர்வதேச அமைப்புகளின் உறுப்பினர். பாலியல் சமத்துவம தொடர்பான பயிற்சிகளை வழங்குபவர். பாலியல் சமத்துவம் பற்றிய ஆய்வுகள் மதிப்பீடுகளை சர்வதே பொதுஸ்தாபனங்களுக்காக இலங்கையில் மேற்கொள்பவர்.

இக்கருத்தரங்கில் கீழ்வரும் விடயங்கள் பற்றிய கருத்துப் பரிமாற்றமும் பயிற்சியும் இடம்பெறும்.

1. ஆளுமை விருத்தியும் அகப்பண்புகளின் விருத்தியும்
2. குழந்தைப் பிராயமும் குழந்தைகளை மையப்படுத்திய பார்வையும்
3. மனித உரிமைகள்
4. பெண் – ஆண் : பால் சமத்துவம்
5. குழந்தைகளுடைய உரிமைகள்
6. நல்லாட்சி

மேலுள்ள விடயங்கள் ஒன்றோடு ஒன்று இருவழித் தொடர்புடையன. ஒன்றின் வளர்ச்சிக்கு மற்றையதன் வளர்ச்சி அவசியமாகிறது. இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள். நாளைய சமூகத்தைச் செதுக்குபவர்கள் எமது ஆசிரியர்கள். எமது சமூகத்தின் இன்றைய நிலையை மாற்றியமைக்க கல்வி நிலையைக் கட்டி எழுப்ப இவ்வாறான கருத்தரங்குகளும் பயிற்சி நெறிகளும் அவசியமாகின்றது.

யூன் 17ம் நாள் காலை அறிமுக நிகழவும் அதனைத் தொடர்ந்து மதியம் ஒரு பிரிவினருக்கான பயிற்சிப் பட்டறையும் நடைபெறும். மறுநாள் மற்றுமொரு பிரிவினருக்கான பயிற்சிப் பட்டறையும் நடைபெறும். அறிமுக நிகழ்விலும் பயிற்சிப் பட்டறைகளில் ஒன்றில் கலந்துகொள்வோருக்கு அவர்களது பங்குபெற்றுதலுக்கான சான்றிதழ் வழங்கப்படும்.
இந்நிழ்வில் கலந்துகொண்டு பயிற்சிபெற விரும்புபவர்கள் லிற்றில் எய்ட் இணைப்பாளர் பார்தீபன் வரதராஜனிடம் ஒப்படைக்கவும். தொடர்புகளுக்கு பார்தீபன் வரதராஜன் : 0772999699

பயற்சி பெறுபவர்கள் அனைவரும் யூன் 17 2017 காலை 9:30 நிகழும் அறிமுக நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும்.

● ஒரு தொகுதியினருக்கான பயிற்சி யூன் 17 2017 11:30 முதல் 17:30 வரை
● மற்றைய தொகுதியினருக்கான பயிற்சி 18 2017 காலை 9:30 முதல் 3:30 வரை

இக் கருத்தரங்கு லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் Think 2wice  அமைப்பினால் லிற்றில் எய்ட் இன் ஒத்துழைப்போடு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இக்கருந்தரங்கில் கலந்துகொள்வோருக்கான மதிய உணவு பரிமாறப்படும்.

இடம்:
லிற்றில் எயட் கணணி மையம்
கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றம்
திருநகர்
கிளிநொச்சி

உங்கள் கருத்து
  1. SRI on June 16, 2017 6:56 am

    Hi Jeyabalan

    Our charity name is THINK 2WICE ASSOCIATION. Not Think 2wise. please correct.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு