அனர்த்த ஆய்வறிக்கை அனுர பிரியதர்ஷன யாப்பாவிடம் கையளிப்பு!


அசாதாரண காலநிலை தொடர்பான ஜப்பானிய நிபுணர்களின் தொழினுட்ப ஆய்வு அறிக்கை அண்மையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவிடம் கையளிக்கப்பட்டது.

15 பேரைக் கொண்ட ஜப்பானிய நிபுணர்கள் குழுவே இந்த ஆய்வை மேற்கொண்டது.

இதன்போது, அனர்த்தங்களை மட்டுப்படுத்திக் கொள்வது தொடர்பாக அந்த குழுவினர் சில பரிந்துரைகளையும் முன் வைத்தனர்.

அனர்த்தங்கள் தொடர்பில் அறிந்து கொள்ளல், அங்கு வசிக்கும் மக்களை பாதுகாப்பாக இடம்பெயர்ந்தல், அனர்த்தங்களின் போது மக்கள் அவசரமாக இடம்பெயர்வதற்கான பயிற்சிகளை வழங்குதல் போன்ற விடயங்கள் இதில் உள்ளடங்குகின்றன.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு