ரவூப் ஹக்கீம் அமைச்சுப் பதவியைத் துறக்க வேண்டும் – பொதுபலசேனா அமைப்பு வலியுறுத்தல்


நாவலப்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டமை குறித்து இனமுறுகலை ஏற்படுத்தும் நோக்கில் போலிக்கருத்துகளை வெளியிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் மக்களிடம் மன்னிப்புக்கேட்டு விட்டு உடன் அமைச்சுப் பதவியைத் துறக்க வேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பொதுபலசேனா அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (12) பகல் அவ்வமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான டிலாந்த வித்தானகே இவ்வாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொழில்சாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டாலும் அதன் பின்னணியில் அடிப்படைவாதிகள் இருக்கின்றனர் எனக் கூறும் யுகம் உருவாகியுள்ளது.

நாவலப்பிட்டிய சம்பவம் குறித்து அமைச்சர் ஹக்கீம் இப்படியான கருத்தையே வெளியிட்டிருந்தார். அமைச்சர் இவ்வாறு கூறிய பின்னர் இதன் பின்னணியில் பொதுபலசேனா தான் இருக்கின்றது எனஅப்பாவி முஸ்லிம் மக்கள் நினைப்பார்கள்.

எனவே, போலி தகவல்களை வெளியிட்டு குழப்பத்தை உருவாக்குவதற்கு பொறுப்புள்ள அமைச்சுப் பதவியை வகிப்பவர் பொறுப்பற்ற விதத்தில் செயற்படக்கூடாது. எனவே, தவறுக்கு மன்னிப்புக் கோரி அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் என்றார்.

உங்கள் கருத்து
  1. vanni arrachi on June 13, 2017 6:18 pm

    பொதுபல சேனாவுக்கு ஒரு முள்ளிவாய்கால் தேவையாக இருக்கிறது.

    தமிழரில் தேசியகூட்டமைப்பும் ஐக்கியதேசியகட்சியின் உறவு இருக்கும் வரை இனவாதிகளை அப்புறப்படுத்துவதற்கான எந்த சாத்தியமும் இல்லை.

    தமிழீழம் கேட்டவர்கள் தான் பறிபோன காணிகளுக்காக போராடுகிறார்கள். நாட்டில் இருபது வீததத்திற்கும் குறைவாக உள்ளவர்கள் தான் வீட்டிற்கு ஒரு பிள்ளையை கொடுத்து இன்று தொலைத்தவர்களை தேடுகிறார்கள்.

    இந்த தேடல் 2009 மேமாததிற்கு முன் ஆரோக்கியமாக இருந்திருந்தால்….?


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு