மேற்கு லண்டன் கிறன்பெல் ரவர் தீவிபத்தில் பலர் மரணமடைந்துள்ளனர்! 50 பேர் மருத்துவமனையில்!


Grenfell_Tower_Burningமேற்கு லண்டனில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் ஆரம்பித்த தீ கிறன்பெல் ரவரை முழுமையாக எரித்துக்கொண்டு உள்ளது. தீ ஆரம்பித்து ஒன்பது மணித்தியாலங்களுக்குப் பின் இச்செய்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்ற போதும் நெருப்பு எரிந்துகொண்டு உள்ளது.

தீ வெகு வேகமாகப் பரவிக்கொண்டு இருந்ததால் கட்டிடத்தில் இருந்து தப்ப வழி தெரியாமல் யன்னல் அருகே வந்து பலரும் ஆழுது உதவிக் குரல் எழுப்பி உள்ளனர். சிலர் உயர் மாடிகளில் இருந்து குதித்தும் உள்ளனர். ஒரு பெண் தனது கைக் குழந்தையை எறிவதாகவும் கீழுள்ளவர்களை ஏந்துமாறு கெஞ்சிவிட்டு தனது குழந்தையை வீசி உள்ளார். அப்போதும் ஒரு பொதுமகன் அதிஸ்ரவசமாக அந்தக் குழந்தையை தன் கையில் ஏந்திக்கொண்டார்.

40 வரையான தீயணைப்பு இயந்திரங்களும் 200 வரையான தீயணைப்பு படையினரும் தீயைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டு உள்ளனர். இத் தீயணைப்பு முயற்சியிலும் மக்களைக் காப்பாற்றுவதிலும் ஈடுபட்ட தீயணைப்பு படைவீரர்கள் சிலரும் காயமடைந்து உள்ளனர்.

24 மாடிக் கட்டிடங்களைக் கொண்ட இந்த ரவரில் 125 அப்பாட்மன்ட்கள் இருந்தன. ஏறக்குறைய 500 பேர் அங்கு வாழ்ந்திருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

இக்கட்டிடம் மீள அபிவிருத்தித்திட்டம் – ரீஜெனரேசன் திட்டத்தின் கீழ் 10 மில்லியன் செலவில் மீளுருவாக்கப்பட்டு இருந்ததுள்ளது.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் நான்காவது மாட்டியில் உள்ள அப்பாட்மன்டில் உள்ள பிரிட்ஜ் வெடித்ததைத் தொடர்ந்து தீ பரவ ஆரம்பித்தது என அந்த கட்டிடித்தில் இருந்து தப்பி முதலில் வெளிவந்த குடியிருப்பாளர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் தீ பரவ ஆரம்பித்த போதும் உடனடியாக தீ எச்சரிக்கை மணி ஒலிக்கவில்லை என்றும் ஒன்றரைக்குப் பின்னரே அந்த எச்சரிக்கை மணி ஒலித்ததாகவும் தெரிவித்தார்.

அங்கு வாழ்பவர்களின் சாட்சியங்களின் படி தீ பாதுகாப்பு ஏற்பாடுகளான எச்சரிக்கை ஒலி நீர்த்துவி தீ வெளியேற்ற வழி போன்ற விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வில்லை எனத் தெரியவருகின்றது.

கிறன்பெல் ரவர் உரிமையாளர்களான கென்சிங்ரன் அன் செல்சியா ரெனன்ற் மனேஜ்மன்ற் ஓர்கனைசேசனின் நிர்வாகத்திற்கு எதிராக அவர்களின் தீ பாதுகாப்பு கட்டமைப்புகள் தொடர்பாக பலமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட போதும் அவை கவனத்தில் கொள்ளப்படவில்லை எனவும் மாறாக கென்சிங்ரன் அன் செல்சியா ரெனன்ற் மனேஜ்மன்ற் ஓர்கனைசேசனை கேள்விக்கு உட்படுத்திய குடியிருப்பாளர்கள் மிரட்டலுக்கும் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளதாக பலவ்வேறு குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.

இத்தீவிபத்து ஏற்பட்ட கட்டிடம் வறுமைக் கோட்டில் சமூக வீட்டுவசதித் திட்டத்தில் வாழ்பவர்கள். இக்கட்டிடம் உள்ள றோயல் பரோ ஒப் கென்சிங்ரன் செல்சியா உள்ளுராட்சிப் பிரிவுக்கு உட்பட்டது. இந்த உள்ளுராட்சிப் பிரிவு லண்டனில் செல்வம் மிக்க உள்ளுராட்சிப் பிரிவு. இங்கு தான் பிரித்தானிய மகாரணியின் அரண்மனையும் உள்ளது.

இத்தொகுதி உருவாக்கப்பட்டது முதல் கொன்சவேடிவ் கட்சியின் பெரும்பான்மை பலத்துடன் பொறுப்பில் இருந்து கடந்த வாரம் நடந்த தேர்தலில் 10000க்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகளை தம்பக்கம் திருப்பி 20 வாக்குவித்தியாசத்தில் தொழிற்கட்சி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு