மதத்திற்கும் இனத்திற்குமாக குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகின்றது – மஹிந்த ராஜபக்ஸ


மதத்திற்காகவும்,  இனத்திற்காகவும் குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு, இந்த அரசாங்கம்  நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது  என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாத்தறை பிரதேசத்திலுள்ள விஹாரையொன்றின் கட்டடத்தை நேற்று சனிக்கிழமை திறந்து வைத்து உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பௌத்த மதத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. புதிய சட்டங்களைக் கொண்டு வந்து மதம், இனம் என்பவற்றிலிருந்து மக்களைத் தூரப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது, சமயத்தின் மீதுள்ள பற்று அதிகரிக்குமே தவிர அவை குறைவடையாது.

இந்த அரசாங்கத்தில் பௌத்த பிக்குகளும், நாட்டுக்காக தமது உயிரையும் பொருட்படுத்தாது பணியாற்றியவர்களுமே அதிகம் துன்புறுத்தப்படுகிறார்கள்” என மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து
  1. vanni arrachi on June 18, 2017 10:19 am

    புலிகளை துடைத்தொழித்தது பற்றியோ முள்ளிவாய்கால் சம்பவத்திற்கோ யாரும் மகிந்தாராஜபக்சாவை யாரும் குறைகூறி விடமுடியாது.

    அப்படி குறைகூறுபவர்கள் பிரபாகரன் செய்து எல்லாம்சரி…மூன்று லட்சம் தமிழர்களை ஆயுதமுனையில் தடுத்து வைத்ததையும் நடத்திவைக்க பட்ட கொலைகளையும் சரியென ஒப்புகொண்டேயாக வேண்டும்.

    மகிந்தாராஜபக்சாவின் காலடியில் காடையர்கள் சப்பாணிபோட்டு குந்தியிருந்தார்கள். புத்தபிக்குகளின் காலடியில் வீழ்ந்து வணங்கினார்.தெருவீதியில் பிச்சைக்காரர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது பாரிய கல்லைப் போட்டு கொண்டொழித்தார்கள் என்பதும் இவர் ஆட்சியில் தான் நடந்தது என்பதையும் இலங்கை மக்கள் மறக்க மாட்டார்கள்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு