நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தின் போது 3 உறுப்பினர்கள் வெளிநடப்பு!


நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தின் போது, இலங்கைத் தொழிலாளர் காங்கிஸின் மூன்று உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளதாக தெரியவருகின்றது,

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டம்,  நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஆச்சர்ய கேட்போர் கூடத்தில்,  இன்று (19) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான முத்து சிவலிங்கம், கே.கே.பியதாச, மத்திய மாகாண சபை அமைச்சர் மருதுபாண்டி ராமேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

இதன்போது, ஹட்டன் குப்பை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே,  கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய மாகாண சபையின் இ.தொ.கா உறுப்பினர்களான  ஏ.பி.சக்திவேல், பிலிப்குமார், கணபதி கனகராஜ் ஆகிய மூவரும் கூட்டம் நடைபெறும் முறை தவறானது, எனக்கூறி வெளிநடப்பு செய்தனர்.

மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் குறித்த விடயம் தொடர்பாக சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கூட்டத்தில் இணைத்தலைவர்களான  நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானும் மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் கலந்துக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு