உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 5 பேருக்கு உடனடி இடமாற்றம்!


பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் பரிந்துரைக்கமைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 5 பேர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர்.

தங்கல்லை, மட்டக்களப்பு, காலி, பொலன்னறுவை பொலிஸ் வலயத்தை சேர்ந்த நான்கு அதிகாரிகளுக்கும் மற்றும் கொழும்பு குற்றவியல் விசாரனைப் பிரிவு அதிகாரி ஒருவருக்குமே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சேவை நிமித்தம் மேற்கொள்ளப்படும் இந்த இடமாற்றத்துக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு