மூன்று இடங்களில் இன்று தீ விபத்து!


ராஜங்கன, நாரங்கஸ்வெவ காட்டுப் பகுதியில் தீ பரவியதால், சுமார் 50 ஏக்கர் காடு முற்றாக சேதமடைந்துள்ளது. இதனால் எந்ததொரு உயிராபத்தும் இடம்பெறவில்லை.

இதேபோன்று தம்புள்ள, மெனிக்தென மலைப்பகுதியிலும் தீ பரவியுள்ளது. இதில் 05 ஏக்கர் காடு சேதமடைந்துள்ளது. குறித்த தீயினை பொலிஸ், இராணுவம் மற்றும் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து அணைத்துள்ளனர்.

அடுத்ததாக மாவதகம, மல்லியகொட பகுதியிலுள்ள வியாபார நிலையமொன்றில், திடீர் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இதன் நஷ்ட விபரங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை.

இவ்வாறு மூன்று இடங்களிலும் இடம்பெற்ற தீ விபத்துகள் தொடர்பில், காரணம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு