திருகோணமலையில் சர்வதேச அகதிகள் தினத்தை முன்னிட்டு வீடுகள் வழங்கி வைப்பு!


சர்வதேச அகதிகள் தினத்தை முன்னிட்டு அகதி வாழ்க்கை வாழ்ந்து வருபவர்களுக்கு வீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாடளாவிய ரீதியில் 567 வீடுகளும், இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்தவர் 60 பேருக்குமான வீட்டுத்திட்டங்கள் அமைச்சினால் வழங்கப்பட்டது.

சர்வதேச அகதிகள் தினம் நேற்று (20) நினைவுக் கூறப்படுகின்ற நிலையில் திருகோணமலை குளக்கோட்டன் ஒன்றுகூடல் மண்டபத்தில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வு நேற்று காலை 10.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இதில் அமைச்சின் மேலதிகச் செயலாளர் பாஸ்கரன், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராசா, அரச அதிகாரிகள் மற்றும் கடந்த கால யுத்தத்தின் போது உறவுகள் மற்றும் உடமைகளை இழந்தோர் இவ் நிகழ்வில் பங்கேற்றனர்.

மேலும் யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து வெளி நாடுகளில் தஞ்சமடைந்து மீண்டும் நாடு திரும்பியவர்கள் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துக் கொண்டனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு