மஹிந்தவும், பொன்சேகாவுமே வடக்கு மக்களின் தங்கத்தைப் பங்கிட்டுக்கொண்டனர் – சிறிதரன்


இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வடக்கு மக்களின் தங்கத்தை கையப்படுத்தி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் அதனைத் தமக்குள் பங்கிட்டுக்கொண்டதாகவும், மக்களுக்கு அவற்றை மீளக் கையளிக்கவில்லையென்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று (20) நடைபெற்ற அபிவிருத்தி மூலோபாய சட்டத்தின் மீதான, செஸ்வரி தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய போதே சிறிதரன் இக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அத்தோடு, தமிழீழ புனர்வாழ்வுக் கழகத்தின் தமிழீழ வைப்பகங்களில் வடக்கு மக்கள் வைப்பிலிட்டிருந்த 300 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தையும் மஹிந்த அரசு கைப்பற்றிக் கொண்டதென சுட்டிக்காட்டிய சிறிதரன், குறித்த பணத்திலாவது வறுமையில் வாடும் வடக்கு மக்களுக்கு ஏதாவது உதவிகளைச் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு, காலநிலை மாற்றம் மற்றும் கடன் தொல்லைகளால் வடக்கு மக்கள் பாரிய இன்னல்களை எதிர்கொண்டுள்ள போதும், அவர்களுக்கான எவ்வித நிவாரண அறிவிப்புகளையும் அரசாங்கம் விடுக்கவில்லையென சிறிதரன் சபையில் சுட்டிக்காட்னார்.

கடன் சுமைகளை தாங்க முடியாமல் வர்த்தகர்கள் பலர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டிய சிறிதரன், இம் மக்களை வறுமையிலிருந்து மீட்கும் உதவித் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு