ஞானசார தேரர் பிணையில் விடுதலை!


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜராகுவதை தவிர்த்தமையால் இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அவர் இன்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதனையடுத்து, முன்னதாக வழங்கப்பட்டிருந்த பிணைக்கு அமைய அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தான் நீதிமன்றத்தில் ஆஜராகாது போனமை, தனக்கிருந்த மரண அச்சுறுத்தல் காரணமாகவே என, ஞானசார தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து, அடுத்த கட்ட வழக்கு விசாரணை ஆகஸ்ட் 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, அன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி சந்தேகநபருக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து
 1. vanni arrachi on June 21, 2017 7:12 am

  ஒரு புத்தபிக்குவை நீதிமன்றத்திற்கு கொண்டுவருவது அவமானத்திலும் அவமானம்.

  இவர் ஏன் பாஞ்சாலையைவிட்டு வெளிவந்தார்?

  போதனைகளும் உபதேசங்களும் புத்தமதத்தின் உயிர்நாடி அல்லவா?

  இலங்கையில் புத்தமதம் பண்டாரநாயக்கா காலத்திலிருந்து வழிமாறிப் போய்கொண்டிருக்கிறது.

  இலங்கை நீதிமன்றம் இவருக்கு ஒரு தண்டணை கொடுக்க வேண்டுமாக இருந்தால்…மொட்டை போடுவதற்கும் காவி உடுப்பதற்கும் அதியுச்ச வரி விதிக்கப்பட வேண்டும்.

  இப்படி செய்தால் ஞானசான தேரர்ருக்குமட்டுமல்ல இலங்கையில் புத்தமதம் சரியான வழியை சென்றடைவதற்கும் வழிவகுக்கும்.


 2. karuppan on June 21, 2017 3:20 pm

  “ஒரு புத்தபிக்குவை நீதிமன்றத்திற்கு கொண்டுவருவது அவமானத்திலும் அவமானம்.”

  இனவாதம் மதவாதம், சாதியவாதம், முதலாளித்துவ வாதம், கம்யூனிஸவாதம் இப்படி பலவாதங்கள் இலங்கையில் இருக்கும்போது இவை எல்லாம் செய்யும் செய்த கொலைகள் கொள்ளைகள் எதுவும் இலங்கை நீதிமன்றம் ஏறியதும் இல்லை தண்டிக்கப்பட்ட்தும் இல்லை. இந்த அரசியல் பிக்கு ஏனைய அரசியல் வாதிகள் செய்யாத ஒரு குற்றத்தையா செய்தார். அவர் மட்டும் ஏன் நீதிமன்றம் ஏறவேண்டும்? ஆண்டாண்டு காலமாக ஒரு இனத்தை இன்னொரு இன்னொரு இனமும், ஒரு ஜாதியை இன்னொரு ஜாதி அடக்குவதும் ஒதுக்குவதும் எமது ஜனநாயக உரிமையாக நாம் ஏற்று தானே இருக்கிறோம். இப்போது பத்திரிகை உலகை எடுத்துக்கொண்டால் பத்திரிகை தர்மத்தையா செய்கிறார்கள். தமக்கு பிடித்தவர்களை அவன் கொலையாளியாக இருந்தாலும் நியாய படுத்துகிறார்கள். நாசுக்காக எமில் எதனை பெயர் மற்றவர்களின் ஜாதியை மறைமுகமாக சுட்டி காட்டுகிறோம். பிரபாகரனை மீன் பிடிப்பவன் என்று கூறுபவர்களும் உண்டு பிரேமதாசாவை வண்ணான் என்று சொல்லலும் பத்திரிகைகளும் உண்டு. இதையெல்லாம் பெரிது படுத்தக்கூடாது.


 3. vanni arrachi on July 1, 2017 3:38 pm

  //பிரபாகரனை மீன் பிடிப்பவன் என்று கூறுபவர்களும் உண்டு //கறுப்பன்.

  பிரபாகரனை மீன் பிடிப்பனாக யாரும் குற்றம் சாட்டியதில்லை.
  அதுவும் இந்த தளத்தில் இல்லவே இல்லை.

  தமிழ்மக்களை கருவாடு போட்டதில்தான் விவாதம் ஆண்டுகணக்காக நடந்து கொண்டிருக்கிறது. இது இனியும் தொடரும்.


 4. karuppan on July 2, 2017 9:30 am

  “பிரபாகரனை மீன் பிடிப்பனாக யாரும் குற்றம் சாட்டியதில்லை.”
  இல்லை சாதியை மாத்திரம் தான் சுட்டி காட்டுவீர்கள்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு