வட மாகாணசபை முறுகல் நிலையின் பின்னர் மாவை சேனாதிராஜா, விக்னேஸ்வரன் சந்திப்பு


எதிர்காலத்தில்  வடமாகாண சபையும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இனப்பிரச்சினை தீர்வில் இணைந்து செயற்படுவதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனதிராஜா தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை முறுகல் நிலையின் பின்னர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்குமிடையில்  இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை சந்திப்பு இடம்பெற்றது.

வடமாகாண சபையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களுக்கு பதிலாக இரு அமைச்சர்களை நியமிப்பது என்பது மிகவும் சிறிய விடயம்.  இனப்பிரச்சினை தீர்வுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாடாளுமன்றத்திலும் இனப்பிரச்சினை தீர்வுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த தருணத்தில் காணி மற்றும் மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் விடுதலை காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயங்கள் முக்கியமாக முதலமைச்சருடன் கலந்துரையாடப்பட்டன.

இனப்பிரச்சினை மற்றும் ஏனைய விடயங்களுற்கான தீர்வு காண்பது தொடர்பில் வடமாகாண சபையும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து செயற்பட வேண்டுமென்றும் எமக்குள் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் எமக்குள் பிரச்சினைகள் எழாமல் இனப்பிரச்சினை முயற்சிகளில் ஒன்றுபட்டு தீர்ப்பதென்றும். இன்று சர்வதேச ரீதியாக கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை முறையாக பயன்படுத்தி தமிழ் தேசியத்தின் விடுதலைக்காக ஒன்றுபட்டு செயற்படவும் தீர்மானித்துள்ளோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் மாகாண சபையும் பிளவுபட்டு செயற்பட்டமையினால் வடமாகாண சபையில் இவ்வாறான பிரச்சினைகள் எழுந்ததாக எம்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் இனத்தின் விடுதலை மிகவும் முக்கியம். அந்தவகையில் வடமாகாண சபையும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இனப்பிரச்சினை சார்ந்த விடயத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதாக இணக்கம் காணப்பட்டுள்ளது.

அத்துடன், இன்னும் 3 தினங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி, வடமாகாண சபை அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் இறுதி முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

உங்கள் கருத்து
 1. BC on June 26, 2017 2:51 pm

  வட மாகாணசபை முறுகல் நிலை என்பது எல்லாம் தேசம்நெற்றின் அளவுக்கு அதிகமான கற்பனை.
  விக்னேஸ்வரன் அவர்கள் தனது புரட்சி இளைஞர் படைஅணி மக்கள் போர் படை அணி யாவற்றையும் முகாமிற்கு திரும்பும்படி உத்தரவு இட்டுள்ளார்.


 2. vanni arrachi on June 27, 2017 7:30 am

  மாவை விக்கி போன்ற மாடுகளை உழவுக்கு பயன்படுத்த முடியாது.

  பனைமரம் ஏறி கள்எடுகிறவனை ஏமாற்றி கள்ளகள்ளு குடிக்கிற காகங்கள்.


 3. karuppan on June 28, 2017 10:31 am

  “பனைமரம் ஏறி கள்எடுகிறவனை ஏமாற்றி கள்ளகள்ளு குடிக்கிற காகங்கள்.”

  கடலோடி மீன்பிடிப்பவன் என்று சொல்லும்போது அவன் யார் என்று புரிந்து கொள்ளமுடியும் ஆனால் பனை மரம் ஏறி கல் எடுப்பவன் என்று யாரை குறிப்பிடுகிறீர்கள்?


 4. BC on June 28, 2017 9:30 pm

  பனைமரம் ஏறி கள்எடுகிறவனை ஏமாற்றி கள்ளகள்ளு குடிக்கிற காகங்கள்.
  பனை மரத்தில்கள்ளு எடுப்பதற்காக தொளிலாளி கஷ்டபட்டு பனை மரத்தில் ஏறி பானையை கட்டி விட்டு இறங்கி போக அதில் வந்த கள்ளை களவு எடுத்து குடிக்கும் வகையை சேர்ந்த ஆசாமிகள் தான் அவர்கள் இருவரும் என்பதை வன்னி ஆராய்ச்சி தெரிவிக்கிறார்.


 5. vanni arrachi on June 29, 2017 9:49 am

  முதல் கறுப்பன் ஆசாமியை புரிந்து கொள்ளவேண்டும்.

  யார் இவர்? யாழ்ப்பாண படிப்பாளிவட்டாரத்தை சேர்ந்தவர்.இவருக்கு தேவையானது மோதல்கள்.மோதுப்பட்டால் “தங்கம்” விழும் என்று காத்திருப்பவர்கள்.
  தமிழ் முஸ்லீம்களுடன் மோதவேண்டும்.சிங்களவர்களுடன் மோதவேண்டும்.இதுவெல்லாம் சரிவரப்பட்டு வரமுடியாத நேரத்தில் தமிழ்சாதிகளுடன் மோதவேண்டும்.

  இதுவே! இந்த ஆசாமியுடைய நோக்கம்.

  இதை ஜாக்கிரதையாக புரிந்துகொள்ளவும் பி.சீ அவர்களே!.


 6. karuppan on July 1, 2017 8:33 pm

  “இதை ஜாக்கிரதையாக புரிந்துகொள்ளவும் பி.சீ அவர்களே!”
  ஆமாம் தமிழர்கள் சாதியின் அடிப்படையில் மோதவேண்டும் என்பதில் கூடிய கவனம் செலுத்துபவர்கள் இடதுசாரிகள் என தம்மை அடையாளப்படுத்துவார்கள் என்பதில் வன்னி ஆராச்சி மிகவும் தெளிவாக உள்ளார் என்பது தெரிகிறது. தமிழர்கள் தமிழர்களுடன் மோதவேண்டும் என்று அல்லும் பகலும் உழைப்பதில் சளைத்தவர்கள் அல்ல நாம்.


 7. vanni arrachi on July 2, 2017 8:27 am

  // தமிழர்கள் தமிழர்களுடன் மோதவேண்டும் என்று அல்லும் பகலும் உழைப்பதில் சளைத்தவர்கள் அல்ல நாம்.//

  இதற்கு முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தேவைதானா?

  நாம் தங்கம் விழுங்குபவர்கள் என்பதை முன்பே சொல்லி தொலைக்க வேண்டியது தானே!.

  இதற்கு ஏன் ஜெயபாலன் காட்டிய ஓட்டைக்குள் நுhல் கோர்க்க முற்படுகிறீர்கள்.

  இருக்கவே இருக்கிறதே லங்காசிறீ கனடியன்மிரர் ஜேவிபி அதைவிட நோய்யுள்ளவன் வயிறுபோல பெருத்திருக்கிறதே “நாம்தமிழர்” அவர்களுடன் சேர்ந்து உழமுடியும் தானே!.

  இங்கு “தங்கம்” விழுங்கமுடியாது கறுப்பன் அவர்களே!


 8. karuppan on July 2, 2017 9:28 am

  “இங்கு “தங்கம்” விழுங்கமுடியாது கறுப்பன் அவர்களே!”
  வன்னி ஆர்ச்சி அவர்களே பொன்விளையும் பூமியிலே மண் விழுங்கும் மாணிக்கங்களை விழுங்குவதில் அனுபவம் அப்படைத்தவர்கள் அல்லவா நீங்கள். அதுமட்டுமா விழுங்குவீர்கள் அதற்கு மேலும் விழுங்குவீர்கள்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு