வித்தியாவிற்கான நீதிக்கு சுவிஸ் ஆதரவு!


புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பில் இலங்கைக்கு சட்ட உதவி வழங்குவதற்கு தயாராகவிருப்பதாக இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பிரதானி ஃபைன்ஸ் வோகர் நெதர்கூன் தெரிவித்துள்ளார்.

வித்தியா கொலை வழக்கு தற்போது  ட்ரயல் அட்பார் முறைக்கு மாற்றப்பட்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆதார வாக்குமூலங்களுடன் யாழ். மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை, வித்தியா கொலைச் சம்பவத்தை தமது அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாணவி வித்தியா படுகொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக விளங்கும் சுவிஸ்குமார், தமது நாட்டுப் பிரஜை இல்லை என்றும், குறித்த நபர் அங்கே தற்காலிகமாக தங்கியிருந்த ஒரு இலங்கையரே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து
 1. BC on July 1, 2017 1:17 pm

  //வித்தியாவிற்கான நீதிக்கு சுவிஸ் ஆதரவு
  வித்தியா கொலை வழக்கு தற்போது ட்ரயல் அட்பார் முறைக்கு மாற்றப்பட்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆதார வாக்குமூலங்களுடன் யாழ். மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.//

  இலங்கை சட்ட மாஅதிபர் தெரிவிக்கையில் இந்த சம்பவம் தொடர்பில் புலன் விசாரணையில் ஈடுபட்டிருந்த அதிகாரியொருவருக்கு 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கொடுப்பதற்கு சவிசில் இருந்து முயற்சி நடந்ததாக தெரிவிக்கிறார்.
  சுவிஸ் அரசு தனது நாட்டில் உள்ள அந்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமா?
  முன்பு புலிகள் காசு கொலக்சனுக்காக தமிழ் சிறுவர் சிறுமியர்களுக்கு புலி வேசம் போட்டு கையில் துவக்கு கொடுத்து இலங்கை இராணுவத்தை சுட்டு கொல்வதாக சுவிஸ் பள்ளி கூடத்தில் நாடகம் நடத்திய போதும் அதை அமைதியாக இரசித்து பார்த்து மகிழ்ந்து கொண்டு இருந்தது தான் சுவிஸ் அரசு.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு