அனைத்திற்கும் தன்னையே குற்றம் சாட்டுவதாக மஹிந்த கூறுகின்றார்!


அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தன்னையே குறைகூறி வருகின்றனர் என  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது நாட்டில் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்திற்கும் பொறுப்புக் கூற வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளதுடன், அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் எதிர்ப்புக்களை வெளியிட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் என்னையே இந்த அரசாங்கம் குற்றம்சாட்டி வருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியினதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் உறவு தற்போது முறிவடையும் நிலையில் காணப்படுவதால், அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்கு அனைத்துக்கும் என் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

 

உங்கள் கருத்து
 1. vanni arrachi on July 1, 2017 3:28 pm

  இதில் ஓரளவு நியாயம் இருக்கிறது தானே!

  மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாராளுமன்றதில் வைத்து கொண்டு என்னதை உங்களால் கிழிக்க முடிந்தது. இனி என்னத்தைத்தான் கிழிக்கப்போகிறீர்கள்?.

  ஆகமொத்தத்தில் புத்தபிக்குகளை சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு நகரை தூய்மைப்படுத்துகிறோம் என்று சொல்லி தூங்கிகொண்டிருந்த பிச்சைக்காரன் தலையில் கல்லை தூக்கிப் போட்டு வெளியுலகம் அனுப்பினதுடன் சரி.

  நீங்கள் இந்தியாவுக்கும் கீயாதான் சீனாவுக்கும் கீயாதான். உங்களுக்கும் ரணில்மாதிரி வெஸ்டியன் ஸ்டைலே பொருத்தமானது. இடுப்பிலை துவக்கை மாட்டி படார் படார் என சுட்டுக்கொள்ள பயிற்ச்சி எடுங்க!

  வெள்ளை வேட்டியும் சிகப்புசால்வையும் ஒருபோதும் தோதுப்பட்டு வராது.

  இலங்கையை நினைத்தால் தமிழர்களும் பாவம் சிங்களவரும் பாவம்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு