புதிய சமூர்த்தி பயனாளிக்ள தெரிவில் முறைகேடு, பொதுமக்கள் பிரதேச செயலகம் முன் திரண்டு போராட்டம்


புதிய சமூர்த்தி பயனாளிக்ள தெரிவில் முறைகேடு, பொதுமக்கள் பிரதேச செயலகம் முன் திரண்டு போராட்டம்
புதிதாக சமூர்த்தி  பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டத்தில் பாரிய  முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது எனவும் உண்மையாகவே வறுமையானவா்கள் புதிய பட்டியலில் உள்வாங்கப்படவில்லை எனவும் தெரிவித்து கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நூற்றுக்கணக்கான சமூர்த்தி பயனாளிகள்  கரைச்சி பிரதேச செயலகம் முன் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனா்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சமுர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களே  இன்று கவன ஈர்ப்ப போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றது,
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் சமுர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு பின்னர் பல்வேறு காரணங்களால் தாம் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
இதன்போது கரைச்சி பிரதேச செயலாளர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடியதுடன் இம்  முடிவுகள் தம்மால் எடுக்கப்பட்டவை அல்ல இதில் உள்ள குறைபாடுகளை  மீள்பரிசீலணை செய்வதற்கு   எனது தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் இந்தப் பயனாளிகள் பட்டியலை கிராடங்கள் தோறும் மீள் பரிசீலனை செய்யவுள்ளோம், இது இறுதியான முடிவல்ல எனவும்  பிரதேச செயலாளா் கோ. நாகேஸ்வரலன் தெரிவித்துள்ளாா்

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு