ஜநாவுடன் சண்டையிடுவதற்கு இலங்கை அமெரிக்கா அல்ல அமைச்சர் றாஜித சேனாரட்ன


 

ஜக்கிய நாடுகள் நிபுணர் குழுவுடன்  இலங்கை சண்டையிட முடியாது, அவா்களுடன் நாங்கள் இராஜந்திரமாகவே நடந்துகொள்ள வேண்டும், ஜக்கிய நாடுகள் சபையுடன் சண்டையிடுவதற்கு இலங்கை ஜக்கிய அமெரிக்கா இல்லை என இணை அமைச்சரவை  பேச்சாளரும் அமைச்சருமான றாஜித சேனாரட்ன தெரிவித்துள்ளாா்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  நேற்று புதன்  கிழமை இடம்பெற்ற வாராந்த  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளா் சந்திப்பிலேயே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

அவா் மேலும் குறிப்பிடுகையில்

யுத்தத்திற் பின்னா் மக்களுக்கு நீதி வழங்கும் செயற்பாட்டில் தாமதம் நிலவுகிறது அரசியல் கைதிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை, காணிகள் விடுவிக்கப்படவில்லை, காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை, எனவே எல்லாம் சரி என்று நாம் கூறி விட முடியாது, எனத் தெரிவித்த அமைச்சர்

ஜக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு பல்வேறு தகவல்களை  பெற்றுக்கொண்டு இலங்கை தொடர்பில்  ஆய்வு செய்வதற்கு வருகின்றனா். இலங்கை ஒரு சிறிய நாடு, ஜநாவின் உறுப்பு நாடாக இருக்கிறது. எனவே எங்களுக்கும ஜநாவில் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதற்காக ஜநா நிபுணர் குழுவுடன் நாம் சண்டையிட முடியாது. அவா்களுடன் இராஜந்திரமாகவே செயற்பட வேண்டும் அதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், எனத் தெரிவித்த அமைச்சர்

2002 ஆம் ஆண்டு ரோம் உடன்படிக்கையில் ரணில் விக்கிரம சிங்க கையொப்பம் இடாதன் காரணமாக இலங்கை சர்வதேச நீதிமன்றுக்கு செல்லவேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டாா்

அத்தோடு ஜநா நிபுணர் குழு இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெறுகிறது எனக் கூறியிருப்பது தவறான மதிப்பீடு என்றும் தெரிவித்தாா்

 

உங்கள் கருத்து
 1. BC on July 21, 2017 1:14 pm

  //ஜநாவுடன் சண்டையிடுவதற்கு இலங்கை அமெரிக்கா அல்ல அமைச்சர் றாஜித சேனாரட்ன//
  ஜநாவுடன் அமெரிக்கா ஏன் சண்டை பிடிக்க போகிறது? அமெரிக்காவின் பொம்மை ஜநா.
  நல்ல ஆட்சி அரச சபையின் வடிவேலுவான ராஜித சேனாரட்னவின் வழக்கமான கொமடிகள் தான்


 2. Mohamed SR Nisthar on July 27, 2017 9:40 am

  அவர் அமெரிக்காவின் “சண்டை” எனக் குறைப்பிட்டது அமெரிக்காவுக்கு பதுகாப்பு சபையில் உள்ள “வீட்டோ” ரத்ததிகாரத்தை எனக்கொண்டால், அவர் சொல்வது சரிபோல் தெரிகிறது. இல்லையா?


 3. BC on July 29, 2017 12:11 pm

  “வீட்டோ” ரத்ததிகாரத்தை எனக்கொண்டால், அவர் சொல்வது சரிபோல் தெரிகிறது. இல்லையா?

  ம் தெரிகிறது.
  நீங்கள் சொன்னதால் தான் அப்படி தெரிகிறதே என்னவோ.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு