வடக்கு மாகாண சபையின் வினைத்திறனற்ற செயற்பாடுகள் தொடர்ந்தால் பதவி துறப்பேன் – தவராசா


 

வடக்கு மாகாண சபையின் வினைத்திறனற்ற செயற்பாடுகள்  தொடர்ந்தும் காணப்பட்டால்  நான் எனது  பதவியை துறப்பதை தவிர வேறு வழியில்லை, அத்தோடு உறுப்பினா் பதவியையும் இராஜினாமம் செய்து  விடுவேன் என வடக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சி தலைவா் சி. தவராசா தெரிவித்துள்ளாா்.

இன்று வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண சபையில்  இடம்பெற்ற மாகாண சபையில் கடந்த  மூன்று வருடங்கள் ஒன்பது மாதங்களில் மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்யும் விசேட அமர்வின் போதே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

அவா் மேலும் தெரிவிக்கையில்

வடக்கு மாகாண சபையின் வினைத்திறனற்ற  செயற்பாடுகளை ஆதாரங்களுடன் பல தடவைகள் சபையில் தெரிவித்துள்ளேன், தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றேன், ஆனால் எவரும் அதனை கேட்டு திருந்துவதாக இல்லை, எனவே இந்த நிலைமை தொடர்ந்தால் நான் எனது எதிர்கட்சி தலைவா் பதவியை துறப்பதோடு, உறுப்பினா் பதவியையும் இராஜினாமம் செய்துவிடுவேன் எனவும் தொிவித்தாா்

உங்கள் கருத்து
 1. vanni arrachi on July 21, 2017 4:54 pm

  வினைதிறன் எப்போது வரும்?. தேவைரும் போது தானாக வந்து சேரும்.

  இலங்கையில் உள்ளநாட்டு யுத்தம் நடந்துகொண்டிருந்த போது அதை நிறுத்துவதில் பங்காளியாக இருந்தவர்கள் யார்?.

  நீங்களும் தானே!.

  ஆகவே சேவைகளும் சாதனைகளும் கொட்டிக் கிடக்கின்றன.

  தற்போதைக்கு ஒரு மிலேச்சனமான யுத்ததில் இருந்து மீண்டு வந்துவிட்டோம் என்பதும் ஆரோக்கியமான செயல்பாடு தானோ?.

  சில செயல்பாடுகள் உடனடி நிகழ்வுக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். இது என் தயவான வார்த்தைகள்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு