ஹம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுக உடன்படிக்கையில் நாளை (29) கைச்சாத்திடவுள்ளததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு.


நாளை  துறைமுக மற்றும் கப்பற்றுறை அமைச்சர் கேட்போர் கூடத்தில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதனூடாக நாட்டின் கடன் சுமையை குறைத்துக் கொள்ள கூடியதாக இருக்கும் என இன்று மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது சுட்டிக்காட்டினார்.

இந்த உடன்படிக்கை இலங்கைக்கான சீன தூதுவர் யி.ஷியான்லியாங், துறைமுக மற்று கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, மூலோபாய அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் சமரவிக்கரம, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, விசேட செயற்றிட்ட அமைச்சர் சரத் அமுனுகம, கனியவளத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, பிரத்தியமைச்சர் நிஷாந்த முத்துஹேட்டிகம ஆகிய பிரமுகர்களின் தலைமையில் கைச்சாத்திடப்படவுள்ளதாக பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு