யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது வாள்வெட்டு இரண்டு பேர் காயம்.


யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸார் மீது இன்று மதியம் அடையாளம் தெரியாத இளைஞர்கள் குழுவினரினால் வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் நடமாடும் கண்காணிப்பு பணியில் சென்று கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

வாள்வெட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த இரு பொலிஸாரும் யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொக்குவில் பொற்பதி வீதிப் பகுதியில் 4 மோட்டார் சைக்கிளில் வந்த 10 ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் துரத்தி துரத்தி இன்று (30.07) இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாண கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் மற்றும் சிங்கள பொலிஸார் இருவரே வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த இரு பொலிஸாரும் துப்பாக்கி கொண்டு செல்லாமல், பொது மக்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக சென்ற போதே அடையாளம் தெரியாத இளைஞர்கள் பின்தொடர்ந்து சென்று வெட்டியுள்ளனர்.

சம்பவத்தினைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இருவரையும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு