அரசாங்கத்தை கவிழ்த்து ஒப்பந்தத்தைக் கிழிப்போம்! – ஜேவிபி சூளுரை


அரசாங்கத்தைத் தோற்கடித்தாவது அம்பாந்தோட்டை துறைமுக குஉடன்படிக்கையை கிழித்தெறிவோம் என ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் உடன்படிக்கை கைச்சாத்திட்டது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வளங்களை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக சகலரும் ஒன்றுபட வேண்டும். இந்த உடன்படிக்கையை நியாயப்படுத்த அரசாங்கம் என்ன கதை கூறினாலும் அவற்றில் எந்த பலனும் இல்லை. இலங்கைக்குரிய சொத்தும், வளங்களும் இந்நாட்டிற்கு உரித்தானதாகும் என்று கூறினார்.

அதேவேளை, அம்பாந்தோட்டை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த விடாமல், இதற்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைத்துப் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

“அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்க எந்தவிதத்தில் ஒப்பந்தங்கள் செய்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்கப்படாது. அது வெறும் ஒப்பந்தமாக கடதாசியிலேயே இருக்கும். அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்தபோதும், சபையை அவசர அவசரமாக ஒத்திவைத்து விவாதிப்பதற்கான சூழ்நிலையினை அரசு இல்லாமல் செய்துள்ளது. இவ்வாறான நிலையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்கள் சீனாவுக்கு வழங்கும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த இடமளிக்கப்போவதில்லை எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு