சகோதரனைக் காப்பாற்றச் சென்றவர் நீரில் மூழ்கி மரணம்!


திருகோணமலை – நிலாவெளி கடலில் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நேற்று மாலை நீரில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்தவர் மருதமுனை – கஸ்ஸாலி வீதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் என்று தெரிவிக்கப்படுகிறது. குடும்பத்துடன் சுற்றுலா சென்று குளித்துக் கொண்டிருக்கும் போது, நீரில் மூழ்கிய தன் சகோதரரைக் காப்பாற்றச் சென்ற வேளையே இவர் மரணமானார்.

சடலம் நிலாவெளி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் காப்பாற்றப்பட்ட மற்றைய நபர் அதே வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சகோதரர்கள் இருவரும் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு