யாழ் ஊடகவியலாளர்கள் டுபாயில் பணமோசடி செய்தி? உடனடி விசாரணை பொலீஸ் மா அதிபா்


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளா்கள் டுபாய் நிறுவனம் ஒன்றில்  பண மோசடி செய்ததாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் வெளிவந்த செய்தி தொடர்பில் உடனடி விசாரணை மேற்கொள்ளப்படும் ‘ என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உறுதி வழங்கியுள்ளார்.

டுபாயில் உள்ள பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் பணியாற்றியதாகவும் அவர்கள் அந்த நிறுவனத்தின் 1198000 டுபாய் டினாரை மோசடி செய்ததாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அந்தச் செய்தி தொடர்பில் குறித்த இணையத்தளம் வெளியிட்ட புகைப்படத்தில்இ யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தி தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு  யாழ். ஊடகவியலாளர்கள் கொண்டு சென்றனர். இதையடுத்தே இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக  பொலிஸ்மா அதிபர் உறுதி அளித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு