வடக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இராணுவ முகாம்களை அகற்றக் கூடாது – அமைச்சர் மகிந்த சமரசிங்க


வடக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்  ஏற்பட்டுள்ள நிலைமைகள் காணப்படுவதனால் அங்குள்ள இராணுவ முகாம்களை அகற்றக் கூடாது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளாா்.

வடக்கில் முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினா்களுக்கு முறையாக புனா்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும்  இதனால் வடக்கில்  உள்ள இராணுவ முகாம்களை அகற்றாது அங்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்த அமைச்சர், வடக்கில் 12 ஆயிரம்  முன்னாள் புலிகள் உள்ளனா் எனவும் சுட்டிக்காட்டியுள்ளாா்.

கொழும்பில் உள்ள சிறிலங்கா சுதந்திர கட்சியின்  தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளா் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளாா்

முப்பது வருட யுத்தம் காரணமாக பயங்கரவாதிகளுக்கு முகம்கொடுத்து அதில் வெற்றிப்பெற்று நாட்டை ஜக்கியப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுவருகின்றோம் இவ்வாறான நிலைமைகளில்  வடக்கில் இருந்து ஒரே தடவையில் படையினரை விலக்க முடியாது. சரணடைந்த 12 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினா்களுக்கு புனா்வாழ்வளிக்கப்பட்டு அவா்களின் ஊர்களுக்கு அனுப்பியுள்ளோம். சரியாக அவா்களுக்கு புனா்வாழ்வு அளிக்கப்பட்டதா என்பது தொடர்பில் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான நிலைமைகளில் வடக்கில் இருந்து இராணுவ முகாம்கள் நாட்டின் பாதுகாப்பு  கருதி  அங்கு இருப்பது அவசியம் என அமைச்சர் மேலும் தெரிவித்தாா்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு