இரண்டாம் தவணைப் பரீட்சையில் வினாத்தாளுடன் விடைத்தாளும் வழங்கப்பட்டுள்ளது


 

கிளிநொச்சி கல்வி வலயத்தில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற  தரம் பதினொன்றுக்கான சமயப் பாட பரீட்சை வினாத்தாளுடன் விடைத்தாளும் வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வலய பாடசாலைகளில் தற்போது  இரண்டாம் தவணை பரீட்சைகள் இடம்பெற்று  வருகின்றன. இதில் இன்றைய தினம் சைவசமய பரீட்சை இடம்பெற்றுள்ளது.
பரீட்சைக்காக வினாத்தாள்கள் மாணவா்களுக்கு வழங்கப்படுவதற்கு வினாத்தாள் பொதி பாடசாலை பரீட்சை மண்டபத்தில் பிரிக்கப்பட்டு வழங்கிய போது விளாத்தாள்களுடன் விடைத்தாளும் காணப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து  அனைத்து வினாத்தாள்களிலும் காணப்பட்ட விடைத்தாள்கள் எடுக்கப்பட்டு  பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.
மாகாண மட்ட  வினாத்தாள்களே வழங்கப்பட்டு பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. எனவே இது தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்ரனிடம் வினவிய போது அது கிளிநொச்சி வலயத்தில் மட்டுமே அவ்வாறு  நடைப்பெற்றுள்ளது என்றும்.  தற்போது உடனடியாக  அவைகள் மீளப்பெறப்பட்டு பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தாா்
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு