வறட்சி நிலைமைகளை ஆராய இராணுவத்தை நியமிக்க ஜனாதிபதி ஆலோசனை


வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் நலன்புரி செயற்பாடுகளை ஆராய்வதற்காக  பிரதேச செயலக பிரிவு மட்டத்தில் இராணுவ அலுவலர்களை நியமிக்க  ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் எனத் தொிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த ஆலோசனையை வழங்கியுள்ளாா்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாக அனர்த்தத்துக்கு உள்ளான மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்ற மீளாய்வுக்கான கலந்துரையாடலின் போதே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்

தற்போது கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேச மக்களின் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன்   வறட்சியால் மக்களுக்கு  ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் ஆராய்வதற்கே இராணுவ அலுவலர்களை நியமிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு