வடக்கில் முப்படைகள் வேண்டாம் பொலீஸாரே போதும் – மாவை


வடக்கில் வாள் வெட்டு மற்றும் ஏனைய சட்டவிரோத செயற்பாடுகளை காரணம் காட்டி முப்படையினரை பயன்படுத்துவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக எதிர்க்கும் என தமிழரசுக் கட்சியின்  தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளாா்.

இந்த வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த பொலீஸாரே போதும் எனவும், நேர்மையுடனும், சரியாகவும் செயற்படுகின்ற பொலீஸாா் மூலம் வாள்வெட்டு உள்ளிட்ட சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தாா்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த   இராணுவம், கடற்படை மற்றும் விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்பு பெறப்படும் என பொலீஸ் மா அதிபா் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே மாவை மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

படையினரால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா், தொடர்ந்தும் மக்களின் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் படையினா் வசம் காணப்படுகிறது. இவ்வாறான நிலைமைகளில் வன் முறைகளை  கட்டுப்படுத்த படையினரை பயன்படுத்த வேண்டும் என்ற பொலீஸ் மா அதிபரின் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது இதனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கும் எனவும்  மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தாா்

உங்கள் கருத்து
  1. vanni arrachi on August 2, 2017 6:15 am

    முப்படைகளை விட கேவலமானவர்களே தமிழ்படை.

    தமிழரை பாதுகாக்க இலங்கையரசின் பாதுகாப்பே போதுமானது.

    தமிழருக்கு மாவையிடம் இருந்துதான் பாதுகாப்பு தேவை.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு