முப்பது சட்டத்தரணிகள் புடைசூழ ஆணைக்குழு முன் ரவி கருணாநாயக்க


சர்சைக்குரிய பிணைமுறி விசாரணைக்காக ஜனாதிபதி ஆணைக்குழு முன் நேற்று புதன் கிழமை அமைச்சர் ரவி கருணாநாயக்க முப்பது சட்டத்தரணிகள் புடைசூழ சமூகமளித்திருந்தாா்.

மத்திய வங்கியின்  பிணைமுறி விவகாரம் தொடர்பில்  நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க  மீது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்  முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.  நேற்றைய தினம் ஆணைக்குழு முன் முன்னிலையான ரவிக் கருணாநாயக்க  காலை பத்து  மணி முதல் மாலை 3.30 வரை விசாரணைக்கு முகம் கொடுத்திருந்தாா்.

ரவி கருணாநாயக்க சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி  ஆனந்த குணரத்தின முன்னிலையாகியிருந்தாா்.

வழமைக்கு மாறான பாதுகாப்பு கெடுப்பிடுகள் காணப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினா்  காவிந்த ஜயவா்த்தன, முன்னாள் மத்திய வங்கி ஆளுநா் அர்ஜுன மகேந்திரன்,அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அவர்களது சட்டத்தரணிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனா்.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு