ஆவா குழுவை முன்னைய அரசின் பாதுகாப்பு முக்கியஸ்தரே உருவாக்கினாா் – ராஜித


வடக்கில்  காணப்படுகின்ற ஆவா எனப்படும் குழுவை  முன்னயை அரசின் பாதுகாப்புத் துறைசார் முக்கியஸ்தரே உருவாக்கினாா் என அமைச்சரவை இணைப் பேச்சாளர்  அமைச்சர் றாஜித சேனாரத்தின  தெரிவித்துள்ளாா்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளா் சந்திப்பிலேயே அவா் இதனை தெரிவித்துள்ளாா்.

வடக்கில் இன்று  ஏற்படுகின்ற குழப்பங்களுக்கு  ஆவா குழுவே காரணம்.  எனினும் அரசாங்கம் இந்தக் குழப்பங்களை முடிவுக்கு   கொண்டுவரும். இந்த  ஆவா குழுவை யார் உருவாக்கினாா்கள் என்று எங்களுக்கு நன்றாக தெரியும் எங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தெரியும்.  ஆவா குழுவை  இயக்குவது யாா்? அதனூடாக எதனை அடைய முயற்சிக்கின்றனா். என்பதும் எங்களுக்குத் தெரியும். அதற்கு காசு கொடுத்து இயக்க வைப்பது யாா் என்பதும் எங்களுக்குத் தெரியும் என்றாா்.

மேலும் நாட்டில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க வேலைத்திட்டங்களை முடக்குவதற்காக குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு ஒரு சிலா் முயற்சித்துகொண்டிருப்பதாக தெரிகிறது. வடக்கில் குழப்பங்களை ஏற்படுத்தி மக்களின் இயல்பு நிலையை சிக்கலா்கக முயற்சிக்கப்படுகிறது. இது தொடர்பில்  அரசாங்கம் மிகவும் ஆழமான முறையில் கவனம் செலுத்தும் எனவும் தெரிவித்தாா் அமைச்சர் றாஜித சேனாரத்தின.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு